Thursday, May 5, 2011

இணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்...


நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. தமிழ் பேசும் நல்லுலகின் தெருக்களில் இணையம் முதன் முதலில் பவனி வந்த காலகட்டத்தில் மட்டுமின்றி, இன்றும் புதிதாக இணையத்தினைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் வாலிப, வயோதிக அன்பர்களே கண்டதையும் பார்த்து விட்டு கண்ணைக் கெடுத்து, ஒரு வாரம் காய்ச்சலில் கிடக்கும் சம்பவங்கள் பல நமக்கு பழக்கமானவையே. 



இப்படி வயது வந்தோருக்கான விஷயங்கள் மட்டுமின்றி, பலருக்குச் சாதரணமாகத் தெரியும் செய்திகளுக்கானப் புகைப்பட பதிவுகள், சிலருக்கு மனச்சிதைவைக்கூட ஏற்படுத்தலாம்.  பெரியவர்களுக்கே சவால் விடும் சக்திமிக்க ஊடகமான இணையத்தினை இன்றையக் குழந்தைகள் கையாளும் போது, இணையம் குறித்துத் தெரிந்த பெற்றோர்களுக்கு பதட்டமாக இருக்கும். அந்த பதட்டத்தின் காரணமாக மகனோ, மகளோ கணினி முன் அமர்ந்தால் வேறு வழியின்றி இவர்களும் கன்னத்தில் கைவைத்து திரையை வெறித்தபடி அமர்ந்திருப்பார்கள். இணையம் குறித்தான விவரங்கள அறியாத பெற்றோர்கள் தன் பிள்ளை சந்திரனுக்கு ராக்கெட் குறித்தான ஆராய்ச்சியில் இருப்பது போல மாயைத் தோன்றும், அதன் காரணத்தால் தனியறை ஒன்று ஏற்பாடு செய்து கணினியும், பிள்ளையும் சூடாகி விடக்கூடாதென்பதற்காக குளிர்வசதி செய்து கொடுத்து தூரத்தில் நின்று ரசிப்பார்கள். 


குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே. ஆனால் இணையத்தின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், எவ்வித தணிக்கை முறையும் மில்லாத ஊடகத்தின் கூர்மையான பக்கங்கள் உங்கள் குழந்தைகளின் வெள்ளை மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தி, தீய வழியில் செலுத்த வாய்ப்பிருக்கிறது. என் பிள்ளைகள் எந்நேரமும் ஒரே கணினிதான், இணையம் தான் என்று பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் ஒரு பெற்றோராக உங்களின் கடமை வெறும் கணினியும், அதில் தூசு படியாமல் இருக்கு ஒரு ப்ளாஸ்டிக் கவரும் வாங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. உங்கள் பிள்ளைகள் நல்ல மனப்பக்குவமடையும் வரை இணையத்தின் முள்ளில்லா பாதைகளில் கரம் பிடித்து நடை பழக்குவதும் கூட ஒவ்வொரு பெற்றோரின் கடமை தான்.



அதெல்லாம் சரி டாக்டர், இது குணமாகுறதுக்கு என்ன செய்யனும் என்று கேட்பவர்களுக்காகத் தான் இப்பதிவு. பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னெவென்றால் எப்பொழுது பிள்ளைகள் கணிணியில் உட்கார்ந்தாலும், அருகில் போய் உட்காருவதை சுத்தமாகத் தவிர்க்க வேண்டும். அவர்களாக சுதந்திரமாக இணையத்தினை எப்படியெல்லாம் நல்ல வழியில் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தி விட்டு ஒதுங்கி விட வேண்டும். அப்படி ஒதுங்கிப் போனால் பிள்ளைகள் இணையத்தில் என்னெவெல்லாம் செய்கிறார்கள் என்று எப்படிக் கண்காணிப்பது என்ற கவலை உள்ளவர்களுக்கு அருமருந்தாக பல மென்பொருட்கள் உள்ளன. விலைக்கு விற்கும் பல மென்பொருட்கள் இருந்தாலும் அவற்றிற்கு சிறிதும் சளைக்காத இலவச மென்பொருட்கள் என்றாலே நமக்குக் கொஞ்சம் கிக் அதிகம் என்பதால் பின்வரும் சில மென்பொருட்களை அறிமுகப் படுத்துவதில் சுடுதண்ணி பெருமிதம் கொள்கிறது. கொச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால் இதெல்லாம் கணினியில் வேவு பார்க்கப் பயன்படும் மென்பொருட்கள். பல இணைய மையங்களில் (Browsing Centers) இது போன்ற மென்பொருட்கள் தவறான வழியில் பயன்படுத்துவதாகக் கேள்வி, கவனமாக இருக்கவும். அதே போல நீங்களே தவறான வழிக்காக இவற்றைப் பயன்படுத்தவும் வேண்டாம். ஏற்கனவே பலமுறை சொன்னது போல என்னதான் தில்லுமுல்லு செய்தாலும் இணையத்தில் தப்பிக்கவே முடியாது என்பதில் மனதில் கொள்ளவும். 

K9 Web Protection:


இதனை இலவசமாக வழங்குபவர்கள் BlueCoat நிறுவனத்தார். இணையப்பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான இவர்கள் இணையத்தில் குழந்தைகளுக்கானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இம்மென்பொருளை இலவசமாக அளிக்கிறார்கள்.  இந்த மென்பொருளில் இணையத்தளங்களை சுமார் எழுபது வகைகளாகத் தரம்பிரித்து அதில் குறிப்ப்பிட்டத் வகை இணையத் தளங்களைப் பார்வையிடத்தடை செய்வது, உங்கள் கணினியில் குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் இணைய வசதி செயல்படுமாறு செய்வது, உங்கள் பிள்ளைகளின்  அன்றாட கணினி நடவடிக்கைகள் குறித்தானத் தகவல்களைப் பெறுவது போன்ற அற்புதமான வசதிகள் நிறைந்தது. 

Windows Live Family Safety 2011:

மைக்ரோசாப்ட் இயங்குதளத்திலும், உலாவியிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதி இருந்தாலும், கூடுதல் வசதிக்காக பில்கேட்ஸ் தரும் அன்புப்பரிசு தான் இம்மென்பொருள். இது சகல வசதிகளும் நிறைந்த ஒரு டீலக்ஸ் மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Chat Controller:


எந்நேரமும் சேட்டிங்கே கதியெனும் நிலைமைக்குத் தங்கள் குழந்தைகள் போய்விடுமோ என்று கவலைப்படும் பெற்றோர்கள் வயிற்றில் பாலாக ஊற்றப்பட்டது தான் Zemeric நிறுவனத்தின் Chat Controller  மென்பொருள். இதன் மூலம் உங்கள் கணினியில் செயல்படும் அனைத்து சேட்டிங் நிரல்களையும், அவை செயல்பட வேண்டிய நேரத்தினையும் மேலும் சேட்டிங்க் மூலம் பறிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும் கூட கண்காணிக்கும் வல்லமை மிக்கது இம்மென்பொருள். 

AOL Parental Control

மேற்சொன்ன அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட மென்பொருள், AOL நிறுவனத்தில் இருந்து. 

மேலே சொன்னவற்றில் சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்காமல், உங்கள் தேவைகளுக்கான வசதிகள் நிறைந்த மென்பொருளினைத் தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைகள் இணையத்தினை நல்ல வழியில் பயன்படுத்த நெறிப்படுத்துங்கள். ஒரே வீட்டில் இணைய இணைப்பிலுள்ள கணினியையும், பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு சிரமப்படும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரிமும் இம்மென்பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது போன்ற மென்பொருட்களையெல்லாம் டம்மியாக்கி, அட்டகாசம் செய்யும் அதிரடிக் குழந்தைகளைக் கணிப்பொறியியல் படிக்க வையுங்கள்.


இணையமெனும் அற்புதம், குழந்தைகளின் அபரிதமான அறிவு வளர்ச்சிக்கும், தெளிவான விழிப்புணர்ச்சிக்கும் மிக்க அவசியம். அதனைச் சரியான வழியில் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை நெறிப்படுத்த உதவும் மென்பொருட்களை அறிமுகப்படுத்திய மகிழ்ச்சியோடு இப்பதிவு நிறைவடைகிறது.

37 comments:

  1. இருங்க படிச்சுட்டு வாறேன்........

    ReplyDelete
  2. அருமையான தகவல் இன்றைய சூழலுக்கு. நன்றி !!!

    ReplyDelete
  3. மிகவும் அவசியமான இடுகை. மிக்க நன்றி

    - எம்.எம்.அப்துல்லா

    ReplyDelete
  4. மிக மிக நல்ல பதிவு...

    :-)

    ReplyDelete
  5. // மிகவும் அவசியமான இடுகை. மிக்க நன்றி

    மிக மிக நல்ல பதிவு.//

    same feeling :)

    ReplyDelete
  6. சிறப்பான விளக்கம் அருமையான பதிவு

    ReplyDelete
  7. மிகவும் அருமை சுடுதண்ணிக்கு நன்றி

    ReplyDelete
  8. ரொம்ப அருமையான தகவல்கள் .....
    நைஸ்............

    ReplyDelete
  9. கணினியும், பிள்ளையும் சூடாகி விடக்கூடாதென்பதற்காக குளிர்வசதி செய்து கொடுத்து தூரத்தில் நின்று ரசிப்பார்கள்

    ??????

    ஏலேய் ராசப்பா பட்டை கௌப்புறீரு. இந்த சின்னக்குழந்தைகளுக்கு கொடுத்த இந்த பதிவு போல எங்கள மாதிரி உள்ள பெரிய குழந்தைகளுக்கு ஏதாவது நல்ல தளத்தை காட்டக்கூடாதா?

    சிரித்த சிரிப்பில் வீடே அதிருது. இங்கேயும் இதே நிலமை தான்.

    ரொம்பவே அக்கறையான பதிவு.

    ReplyDelete
  10. சுடுதண்ணி திரும்பிபாக்க வைக்கிறீங்களே...அதான் சுடுதண்ணி.

    மிகநல்லபதிவுங்க...

    ReplyDelete
  11. பலருக்கும் பயனளிக்கக் கூடிய அவசியமான பதிவு.

    ReplyDelete
  12. //இது போன்ற மென்பொருட்களையெல்லாம் டம்மியாக்கி, அட்டகாசம் செய்யும் அதிரடிக் குழந்தைகளைக் கணிப்பொறியியல் படிக்க வையுங்கள்.//

    ஹா.ஹா.. வேற என்ன பண்ண முடியும்..?!

    ReplyDelete
  13. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவுங்க.

    ReplyDelete
  14. சிறப்பானதொரு இடுகை. நன்றி.

    ReplyDelete
  15. //இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. //

    ஆஹா! ஆஹா!

    ReplyDelete
  16. இதெல்லாம் காசுக்காரன் பிள்ளைகளுக்குதான் பயன்படும்

    ReplyDelete
  17. வலையுலகில் கொண்டை/ஐ.பி மாஸ்க்கிங் ஒரு அறிமுகம் -2
    என்ன ஒரு பதிவு !
    படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது. ப்ராக்சி பற்றியும் தெரிந்து
    கொண்டேன். விறுவிறுப்பான நடை. அழகான வார்த்தைப் பிரயோகம்.
    அது தான் சுடுதண்ணி போல. வாழ்த்துகள். ரசித்துப் படித்த சிறந்த பதிவுகளில்
    இது ஒன்று.

    இந்த வரிகளைப் படித்து விழுந்து விழுந்து மூன்று முறை சிரித்தேன்.
    ”சட்ட நடவடிக்கைகளுக்கு ப்ராக்ஸிசர்வர் சேவை நிறுவனங்கள் உட்ப்ட்டதே.. அவற்றின் துணையோடு குற்றம் செய்பவர்களின் வேட்டி அழகாகவும், நிதானமாகவும், முறையாகவும், விரைவாகவும் உருவப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.”

    நிண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல பதிவைப் படித்த அனுபவமும் திருப்தியும். மிக்க நன்றி. மேலும் நீங்கள் எழுத வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  18. மிகவும் அவசியமான இடுகை நன்றி

    சிறு சந்தேகம் இது போல் வேவு வேலையை நமது அலுவலகத்தில் நமக்கு தெரியாமல் கணிணியில் நிறுவி இருந்தால் கண்டுபிடிப்பது எப்படி ? மேலும் அது போல் நிறுவி இருந்தால் அவற்றுக்கு டேக்கா கொடுப்பது எப்படி ?

    :-)))))

    ReplyDelete
  19. சுடு தண்ணி அண்ணே! நான் உங்க வலைப்பூவுக்கு புதுசு. பல தடவை வந்து பார்த்துட்டு போயிடுவன்.
    ஆனா பின்னூட்டம் இட மாட்டன். என்னை மன்னிச்சுக்கொங்கோ! இப்ப சொல்றன் சுடு தண்ணி அண்ணே
    உங்க கணினி அறிவும் தமிழ் அறிவும் சூப்பரோ சூப்பர்! தொடர்ந்து எழுதுங்க.
    நீங்க ரொம்ப நாள் வாழனும் அண்ணே!

    ReplyDelete
  20. சுடு தண்ணி அண்ணே! நான் உங்க வலைப்பூவுக்கு புதுசு. பல தடவை வந்து பார்த்துட்டு போயிடுவன்.
    ஆனா பின்னூட்டம் இட மாட்டன். என்னை மன்னிச்சுக்கொங்கோ! இப்ப சொல்றன் சுடு தண்ணி அண்ணே
    உங்க கணினி அறிவும் தமிழ் அறிவும் சூப்பரோ சூப்பர்! தொடர்ந்து எழுதுங்க.
    நீங்க ரொம்ப நாள் வாழனும் அண்ணே!

    ReplyDelete
  21. ரொம்ப பயனுள்ள பதிவுங்க... நன்றி!
    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  22. மிகவும் அருமையான பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. உங்களுடைய பதிவுகள் மிகவும் அற்புதமாக உள்ளது... உங்களுடைய கட்டுரைகளுக்காக நான் எப்பொழுதும் காத்துக்கொண்டுள்ளேன்....

    ReplyDelete
  24. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
    போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_8884.html

    ReplyDelete
  25. இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான விடயம், ஆனால் அடுத்த தலைமுறையினர் இதையெல்லாம் தாண்டிப்போய் வெகுநாளாயிற்று, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி அறுபத்துநான்கு அடி பாய்கிறது

    கலி(கம்ப்யூட்டர்) காலம்தான்!!!

    ReplyDelete
  26. தயவு செய்து அடிக்க பதிவிடவும்.. தினமும் தங்களின் தளத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கிறேன்..

    ReplyDelete
  27. நல்ல மிக மிக சிறப்பான பதிவு..
    பகிர்வுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  28. பின்றீங்களே தலைவா....

    ReplyDelete
  29. குழந்தைகளை நெறிப்படுத்த உதவும் மென்பொருட்களை அறிமுகப்படுத்திய மகிழ்ச்சியோடு இப்பதிவு நிறைவடைகிறது./

    அருமையான தகவல் இன்றைய சூழலுக்கு. நன்றி !!

    ReplyDelete
  30. எனக்கு இந்த உரல் லில் தரவிறக்கம் செய்வதருக்கு லிங்க் கிடைப்பதில்லை. இதற்க்கு மாற்று வழி உண்டா...

    http://kricons.blogspot.com/2011/10/26-10-2011-junior-vikatan.html

    ReplyDelete
  31. வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

    ReplyDelete
  32. hai friend we want to talk to you , can you just give me your mail , so that i can send you the details over mail.

    thanks
    kishore
    tamil10.com

    ReplyDelete
  33. ama unga pudhiya padhivu gala pakka mudiyalaye nanba

    ReplyDelete