Saturday, November 7, 2009

வலையுலகில் கொண்டை/ஐ.பி மாஸ்க்கிங் ஒரு அறிமுகம் -2 (முற்றும்)





இப்பொழுது உங்கள் கணினியில் நெருப்புநரி உலாவி (Firefox web browser) மற்றும் பாக்ஸிப்ராக்ஸி கூடுதல் இயக்க மென்பொருள் (foxyproxy addon) ஆகியவற்றை நிறுவியாயிற்று. மேலும் உங்களிடம் அநாமதேய ப்ராக்ஸி சர்வரின் வலையிணைப்பு முகவர் எண் மற்றும் வலையமைப்பு இணைப்புப் புள்ளி (proxy server's IP and Port) ஆகிய தகவல்களும் இருக்கின்றது.

சுட்டிகள்:

நெருப்பு நரி உலாவி: http://www.mozilla.com/en-US/firefox/firefox.html
பாக்ஸிப்ராக்ஸி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/2464
அநாமதேய ப்ராக்ஸி சர்வர்கள்: http://www.xroxy.com./proxylist.htm

கீழே கொடுக்கப் பட்டுள்ள் அனைத்துப் படங்களையும் க்ளிக் செய்து பெரிது படுத்திப்பார்க்கவும்.





முதலில் நெருப்புநரி உலாவியை திறவுங்கள், Tools -> Foxyproxy -> More -> Options என்ற இடத்துக்கு சென்றால் ஒரு படிவம் தோன்றும். (பார்க்க படம்). அங்கே 'Add new proxy' என்ற பொத்தானை அமுக்கவும். பின்ன்ர் 'General' தொகுப்புக்கு சென்று உங்கள் ப்ராக்ஸிக்கு உங்கள் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒரு பெயர் கொடுத்து விட்டு (உ.தா. suduthanni), கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு வசதிகளையும் (Animate icons & include this proxy...) தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் 'proxy details' என்ற தொகுப்பிற்கு செல்லவும். அங்கு, 'Manual proxy configuration' என்ற வசதியைத் தேர்வு செய்துவிட்டு, 'Host or IP address' என்ற இடத்தில் உங்கள் வசம் இருக்கும் ப்ராக்ஸி சர்வரின் வலையிணைப்பு முகவர் எண்ணையும், 'Port' என்ற இடத்தில் உங்கள் வசம் உள்ள வலையமைப்பு இணைப்புப் புள்ளியின் எண்ணையும் உள்ளிடவும். (உ.தா. proxy url: 130.37.198.244 , Port: 3128).


பிறகு "ok" பொத்தானை அமுக்கினால், ஒரு எச்சரிக்கைத் தகவல் படிவம் தோன்றும் அதற்கும் "ok" பொத்தானை அமுக்கினால் உங்கள் வேலை முடிந்தது. இப்பொழுது உங்கள் நெருப்புநரி உலாவியில் கீழ்-வலது மூலையில் பாக்ஸிப்ராக்ஸியின் இணைப்புப்படத்தைக் காணலாம் (icon). இப்பொழுது உங்கள் ப்ராக்ஸி தயார் நிலையில் உள்ளது ஆனால் செயல்பாட்டில் இல்லை. ஆகவே எப்பொழுதும் போல் வலைத்தளங்களுக்கு செல்லலாம். இப்பொழுது நீங்கள் அநாமதேயமாக ஒரு வலைத்தளத்திற்கு செல்ல விரும்பினால், அந்த நேரம் கீழ்-வலது மூலையில் இருக்கும் பாக்ஸிப்ராக்ஸியின் இணைப்புப் படத்தை 'Right Click' செய்தால் நீங்கள் உங்களிம் ப்ராக்ஸி சர்வருக்குக் கொடுத்த விருப்பப் பெயரைக் காணலாம் (உ.தா. suduthanni). அதனை தேர்வு செய்து 'Enable' என்ற வசதியினைக் க்ளிக்கினால் உங்களுக்கு முகமூடி தயார். இனி நீங்கள் எப்பொழுதும் போல் வலைத் தளங்களுக்குச் செல்லாம். உங்கள் அடையாளம் மறைக்கப்பட்டு இருக்கும். வேலை முடிந்த பிறகு 'பழைய குருடி கதவ திறடி'ன்னு முகமூடியக் கழட்டுறது மீண்டும் கீழ்-வலது மூலை - பாக்ஸிப்ராக்ஸி - ப்ராக்ஸியின் பெயர் (suduthanni) - 'Enable' என்று க்ளிக்கினால் பழைய நிலைக்கு வந்து விடலாம்.

இப்பொழுது எப்படி பயன்படுத்துறதுன்னு எல்லாருக்கு நல்லா புரிஞ்சிருக்கும் (நெசமாத்தான் சொல்றியா??). அடுத்து இதோட சாதக பாதகங்கள் என்னென்ன?. இலவச ப்ராக்ஸி சர்வர்களில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. அவற்றின் மூலம் நீங்கள் செல்லும் தளங்களில் நீங்கள் உபயோகப்படுத்தும் கடவுச்சொற்களுக்கு கட்டம் கட்டப்படலாம். உங்கள் அடையாளம் நீங்கள் பய்ன்படுத்தும் ப்ராக்ஸி சர்வரில் பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்க. ஒருவேளை இந்த வசதியினை வைத்து ஏதேனும் குற்றச்செயல் புரிந்தால், சட்ட நடவடிக்கைகளுக்கு ப்ராக்ஸிசர்வர் சேவை நிறுவனங்கள் உட்ப்ட்டதே.. அவற்றின் துணையோடு குற்றம் செய்பவர்களின் வேட்டி அழகாகவும், நிதானமாகவும், முறையாகவும், விரைவாகவும் உருவப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.


இதில் இன்னொரு அற்புதமான வசதி என்னவென்றால், இப்பொழுது உங்கள் வீட்டில் உள்ள் கணினியில் www.blogger.com ஐ சத்தமில்லாமல் தடை செய்து விடலாம் :D. உதாரணத்திற்கு இப்பொழுது yahoo mail ஐத் உங்கள் கணினியில் தடை செய்ய வேண்டுமென்றால், உலாவியில் Tools -> Foxyproxy -> More -> Options என்ற இடத்துக்கு சென்று, உங்கள் ப்ராக்ஸி சர்வரின் பெயரைத் (உ.தா suduthanni) தேர்வு செய்து 'edit selection' என்ற பொத்தானை அமுக்குங்கள். பின்னர் தோன்றும் படிவத்தில் 'url patterns' என்றத் தொகுப்புக்குச் சென்று, 'Add New pattern' ஐ க்ளிக்கவும். பின் தோன்றும் படிவத்தில் 'enabled' தேர்வு செய்து, 'url pattern' என்ற இடத்தில் '*mail.yahoo.com/*' என்று நிரப்பி, 'blacklist' என்பதை தேர்வு செய்துவிட்டு 'ok', 'ok' மற்றும் 'close' என்று முறையே பொத்தான்களை அமுக்கவும். பிறகு mail.yahoo.com சென்று பாருங்கள் :D.


உங்கள் குழந்தைகள் பார்க்கக் கூடாததைப் பார்த்து பயந்து விடாமல் இருக்க :o, இணையங்களில் எந்நேரமும் விளையாடிக் கொண்டு படிப்பில் கவனம் கெட்டுப் போகாமல் இருக்க, இப்படி எந்த கோணத்தில் வேண்டுமானாலும் யோசித்து அது சம்பந்தப் பட்ட இணையங்களைத் தடை செய்து விடலாம். இப்போ கடைசியாக சொன்ன தகவல் பல பேருக்கு ரொம்ப நல்ல விதத்தில் உபயோகமா இருக்கும், முடிந்த வரை தகவல்களைப் பரப்புங்கள், ஏன்னா 'Information is Wealth'.

பி.கு: இவ்வாறு தேவைக்கேற்ற ப்ராக்ஸி சர்வரைத் தேர்வு செய்து ஐ.பி. மாஸ்க்கிங் செய்தால், தடை செய்யப்பட்ட தளங்களையும் பார்க்க முடியும் என்பது உபரித்தகவல் ;).

முற்றும்.

7 comments:

சுடுதண்ணி said...

ஊக்கத்திற்கு மிக்க நன்றி ரவி.

CA Venkatesh Krishnan said...

நன்றி. இது போன்ற மேலும் பல தகவல்களை எதிர் பார்க்கிறேன்.

சுடுதண்ணி said...

வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல்லவன். இயன்றவரை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்.

Myooou Cyber Solutions said...

உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.நான் உங்கள் தளத்துக்கு அடிமையாகி உங்கள் எல்லா பதிவுகளை வாசிக்கும் முடிவில் உள்ளேன் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.wikileaks பற்றிய பதிவும் சிறப்பாக உள்ளது.

katrukolpavan(VIJAY) said...

nandri .
all the best for ur all useful blogs

மனசாலி said...

I DOWNLOAD AND EDIT AND TEST ITS WORKING FINE NOW I AM IN THAILAND, NEXT I AM GOING TO CANADA BYE ANYBODY SAY BON VOYAGE.
THANK YOU

dsfs said...

என்ன ஒரு பதிவு !
படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தாது. ப்ராக்சி பற்றியும் தெரிந்து
கொண்டேன். விறுவிறுப்பான நடை. அழகான வார்த்தைப் பிரயோகம்.
அது தான் சுடுதண்ணி போல. வாழ்த்துகள். ரசித்துப் படித்த சிறந்த பதிவுகளில்
இது ஒன்று.

இந்த வரிகளைப் படித்து விழுந்து விழுந்து மூன்று முறை சிரித்தேன்.
”சட்ட நடவடிக்கைகளுக்கு ப்ராக்ஸிசர்வர் சேவை நிறுவனங்கள் உட்ப்ட்டதே.. அவற்றின் துணையோடு குற்றம் செய்பவர்களின் வேட்டி அழகாகவும், நிதானமாகவும், முறையாகவும், விரைவாகவும் உருவப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.”

நிண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல பதிவைப் படித்த அனுபவமும் திருப்தியும். மிக்க நன்றி. மேலும் நீங்கள் எழுத வாழ்த்துகிறேன்.