Wednesday, October 28, 2009

குருமாவின் கதை.






முதன்முதலில் குருமா பற்றி அறிந்தது.. பல வருடங்களுக்கு முன் பஸ்ஸில் பயணம் செய்யும் போது வழியில் ஒரே குருமாவின் புகழ்பாடும் தட்டிகளும், சுவரொட்டிகளும்.. அனைத்தும் குருமாவின் உப்பு, காரம், மணம் பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்தது. குருமா எழுச்சி மிகுந்தது, குபீரென்று கிளப்பும், அடங்க மறுக்கும், அத்து மீறும் என்று ஒரே பில்டப் வேறு.. சரி உண்மையிலேயே குருமா ஒரு தன்னிகரற்ற ஒரு வஸ்து என்றே எண்ணிக் கொண்டிருந்தேன்.

சமீபத்தில் குருமா சட்டியில் சமையிலனத்தலைவர் ஒரு வாளி தண்ணியை ஊற்றி உப்பு சப்பில்லாமல் ஆக்கியதாக செய்திகள் வந்தன.. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல இதுநாள் வரை குருமாவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் "குருமா சரியில்ல.. முன்ன மாதிரியில்ல'' போன்ற கருத்துக்களை உதிர்த்தனர்.

இதைக் கேள்விப்பட்ட குருமா.. தன்னைச் சீரழித்தவரை விட்டுவிட்டு தன்னைக் குறை கூறுபவர்கள் எல்லாம் "முண்டங்கள்" என்று அடுப்பில் கொதிப்பது போல் கொதித்து உள்ளது... கொதிக்க வேண்டிய இடத்தில் எல்லாம் கொதிக்காமல்.. "அது சும்மா சோக்கு.. கிகிகி" என்று இருந்து விட்டு.. ஏன் இங்கு இப்படி கொதிக்கின்றது என்று தெரியவில்லை :)

"குருமா கடைக்கு வந்திருச்சின்னா சாப்பிடர நாலு பேரு நாலு விதமா பேசத்தான் செய்வான்... அதுக்காக இப்படி முண்டம்னு சொன்னா..எப்படி"ன்னு குருமாவிடம் கேட்டதற்கு, "நானும் எவ்வளது தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது" என்றது.

Friday, October 23, 2009

இதற்குத் தானே ஆசைப்பட்டாய்...






வெறுப்பு அதிகமானதுல... பதிவெழுத ஆரம்பிச்சு.. தமிழ்மணத்தோட பதிவுப்பட்டைய சேர்த்து.. தமிழ்மணத்துல இணைக்கவும் செஞ்சாச்சு... 48 மணி நேரம் ஆகுமாம் தமிழ்மணம் என்னொட பதிவ மதிப்பீடு செய்றதுக்கு.. 48 மணி நேரம் ரொம்ப அதிகம் :(. இந்த அவசர உலகத்தில ஒவ்வொருத்தனும் 'டைம் இஸ் மணி(பணம்)'னு பாஸ்ட் பார்வெர்ட்ல போய்ட்டு இருக்கான், தமிழ்மணம் ரொம்......ப ஸ்லொ..


தமிழக முதல்வர் செம்மொழி மாநாட்டுக்கு சின்னம்/முத்திரை வெளியிட்டுக்கிட்டு இருக்கிறார் தொலைக்காட்சியில... முத்திரை வடிவமைப்பு முழுக்க முழுக்க முதல்வர் யோசனையுடன் செய்யப்பட்டதுன்னு கூவுறார் (கொடுத்த காசுக்கு மேல) தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர்.. கன்னியாகுமரில இடுப்ப நெளிச்சு சிம்ரன் மாதிரி நிக்கிற வள்ளுவர், பிண்ணனியில் குமரிக் கடல் பொங்குது.. பொங்குறது சந்தோசதுலயா..கோவத்துலயான்னு தெரில...


தமிழ்நாட்டுல ஒரு முத்திரை வடிவமைக்கிறதுக்கு ஆளே இல்லயா?? அதுக்கு கூட முதல்வர் தான் வரணுமா??? எல்லாமே எனக்குத் தான்.. எனக்குத் தான்னு.. தானைத் தலைவர் செம்மொழி மாநாட்டுக்கு தானே பந்தல், மைக் செட்.. சீரியல் லைட் எல்லாமே அவரே பண்ணுவாரு போல... டி.ஆர் படத்தோட டைட்டில் கார்ட் மாதிரி 'தமிழ் செம்மொழி மாநாடு - கதை,திரைக்கதை,வசனம், இசை, படத்தொகுப்பு, பாடல்கள், இயக்கம், மற்றும் பல - கலைஞர்' அப்படின்னு வரலாற்றுல அழுத்தமா பதிக்கிறதுக்கு ரொம்ப முக்கி முக்கி முயற்சிகிட்டு இருக்கார் போல..


முயற்சியுடையார், இகழ்ச்சியடையார்???

சொல்ல மறந்துட்டேனே.. மேலே உள்ள சின்னம் நம்ம தயாரிப்பு :)

எங்கே செல்கிறது தமிழகம்?



'கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும் மாலையும் மரியாதையும் எனக்குத் தான்' அப்படின்ற ஒரே நோக்கத்தோட குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்ச கதையா ஒரு முதல்வர்... தங்கள் சக மனிதர்களின் கல்லீரலைக் டாஸ்மாக்கால் கசக்கி வரும் கலர் டிவி மற்றும் பல இலவசங்களில் புதைந்து போன குடிமக்கள்... கொஞ்சம் கூட சமுதாய அக்கறை அல்லது குறைந்த பட்சம் நம்மள சுத்தி நாட்டுல என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சிக்காத சமூகம்...கிட்டத்தட்ட எல்லா மா நிலத்திலும் ஊடகங்களை அரசியல் சக்திகளுக்கு தாரை வார்த்து விட்ட தேசம்... உச்சி வெயில் மண்டைய பொளந்தாலும் 'எங்க கழகத் தொலைக்காட்சில இன்னைக்கு மழை பெய்யுதுன்னு சொல்லிட்டாங்க'ந்னு குடை புடிச்சிட்டு போற ரத்ததின் ரத்தங்களும், உடன்பிறப்புகளும் நிறைந்த அரசியல்...

இது எல்லாம் எப்ப மாறும்???

ஒரு வேளை எதிர்காலத்தில பெரிய அரசியல் புரட்சி நடக்குமோ??



எந்த செய்திய பாத்தாலும், அதுல ஒரு உள்குத்து, அரசியல், சுய நலம்.. ஒரே வெறுப்பு மண்டுது மண்டையில.... உங்களுக்கு???