வெறுப்பு அதிகமானதுல... பதிவெழுத ஆரம்பிச்சு.. தமிழ்மணத்தோட பதிவுப்பட்டைய சேர்த்து.. தமிழ்மணத்துல இணைக்கவும் செஞ்சாச்சு... 48 மணி நேரம் ஆகுமாம் தமிழ்மணம் என்னொட பதிவ மதிப்பீடு செய்றதுக்கு.. 48 மணி நேரம் ரொம்ப அதிகம் :(. இந்த அவசர உலகத்தில ஒவ்வொருத்தனும் 'டைம் இஸ் மணி(பணம்)'னு பாஸ்ட் பார்வெர்ட்ல போய்ட்டு இருக்கான், தமிழ்மணம் ரொம்......ப ஸ்லொ..
தமிழக முதல்வர் செம்மொழி மாநாட்டுக்கு சின்னம்/முத்திரை வெளியிட்டுக்கிட்டு இருக்கிறார் தொலைக்காட்சியில... முத்திரை வடிவமைப்பு முழுக்க முழுக்க முதல்வர் யோசனையுடன் செய்யப்பட்டதுன்னு கூவுறார் (கொடுத்த காசுக்கு மேல) தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர்.. கன்னியாகுமரில இடுப்ப நெளிச்சு சிம்ரன் மாதிரி நிக்கிற வள்ளுவர், பிண்ணனியில் குமரிக் கடல் பொங்குது.. பொங்குறது சந்தோசதுலயா..கோவத்துலயான்னு தெரில...
தமிழ்நாட்டுல ஒரு முத்திரை வடிவமைக்கிறதுக்கு ஆளே இல்லயா?? அதுக்கு கூட முதல்வர் தான் வரணுமா??? எல்லாமே எனக்குத் தான்.. எனக்குத் தான்னு.. தானைத் தலைவர் செம்மொழி மாநாட்டுக்கு தானே பந்தல், மைக் செட்.. சீரியல் லைட் எல்லாமே அவரே பண்ணுவாரு போல... டி.ஆர் படத்தோட டைட்டில் கார்ட் மாதிரி 'தமிழ் செம்மொழி மாநாடு - கதை,திரைக்கதை,வசனம், இசை, படத்தொகுப்பு, பாடல்கள், இயக்கம், மற்றும் பல - கலைஞர்' அப்படின்னு வரலாற்றுல அழுத்தமா பதிக்கிறதுக்கு ரொம்ப முக்கி முக்கி முயற்சிகிட்டு இருக்கார் போல..
முயற்சியுடையார், இகழ்ச்சியடையார்???
சொல்ல மறந்துட்டேனே.. மேலே உள்ள சின்னம் நம்ம தயாரிப்பு :)
6 comments:
விருது வழங்குபவர்,பெறுபவர் கூட அவரே தானாம்..இப்படி பல்முக கலைஞராய் இருப்பதால் தான் அந்த பெயரோ?
பாரபட்சமின்றி அனைத்து முகத்திரையையும் கிழிக்கவும் இல்லை எனில் நீங்கள் ஒரு சார்பு என்ற சிறைக்குள் அடைபட நேரிடலாம்
மேலும் நல்ல பதிவுகள் தந்திட வாழ்த்துக்கள்
நன்றிகள் பல...
வருங்காலத்துல வரலாறு எழுதும் போது முதல் பின்னூட்டம் இட்ட மாமனிதர் அப்படின்னு உங்க பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் :)
தங்களின் வலைப்பதிவை வரவேற்கிறேன். தொடர்ந்து நல்ல பதிவுகளை தர வாழ்த்துக்கள்
நன்றி முரளி!
எல்லாம் பெரியவங்க ஆசிர்வாதம் :)
நன்றிகள் பல...
வருங்காலத்துல வரலாறு எழுதும் போது முதல் பின்னூட்டம் இட்ட மாமனிதர் அப்படின்னு உங்க பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் :)//
ப்ளாடின எழுத்துக்களால் பதியவும் :-(
இது தான் ப்ளாட்டின எழுத்தா?? மேலும் விவரங்க்கள் தர முடியுமா??
இது - அழகி
Post a Comment