Wednesday, October 28, 2009

குருமாவின் கதை.






முதன்முதலில் குருமா பற்றி அறிந்தது.. பல வருடங்களுக்கு முன் பஸ்ஸில் பயணம் செய்யும் போது வழியில் ஒரே குருமாவின் புகழ்பாடும் தட்டிகளும், சுவரொட்டிகளும்.. அனைத்தும் குருமாவின் உப்பு, காரம், மணம் பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்தது. குருமா எழுச்சி மிகுந்தது, குபீரென்று கிளப்பும், அடங்க மறுக்கும், அத்து மீறும் என்று ஒரே பில்டப் வேறு.. சரி உண்மையிலேயே குருமா ஒரு தன்னிகரற்ற ஒரு வஸ்து என்றே எண்ணிக் கொண்டிருந்தேன்.

சமீபத்தில் குருமா சட்டியில் சமையிலனத்தலைவர் ஒரு வாளி தண்ணியை ஊற்றி உப்பு சப்பில்லாமல் ஆக்கியதாக செய்திகள் வந்தன.. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல இதுநாள் வரை குருமாவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் "குருமா சரியில்ல.. முன்ன மாதிரியில்ல'' போன்ற கருத்துக்களை உதிர்த்தனர்.

இதைக் கேள்விப்பட்ட குருமா.. தன்னைச் சீரழித்தவரை விட்டுவிட்டு தன்னைக் குறை கூறுபவர்கள் எல்லாம் "முண்டங்கள்" என்று அடுப்பில் கொதிப்பது போல் கொதித்து உள்ளது... கொதிக்க வேண்டிய இடத்தில் எல்லாம் கொதிக்காமல்.. "அது சும்மா சோக்கு.. கிகிகி" என்று இருந்து விட்டு.. ஏன் இங்கு இப்படி கொதிக்கின்றது என்று தெரியவில்லை :)

"குருமா கடைக்கு வந்திருச்சின்னா சாப்பிடர நாலு பேரு நாலு விதமா பேசத்தான் செய்வான்... அதுக்காக இப்படி முண்டம்னு சொன்னா..எப்படி"ன்னு குருமாவிடம் கேட்டதற்கு, "நானும் எவ்வளது தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது" என்றது.

3 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

ya its interesting....
check this & write about de dreaming angle ya
http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/10/blog-post_4195.html

ஜோதிஜி said...

நன்றி, உங்கள் தொழில் நுட்ப சமாச்சாரங்கள் இன்று வரைக்கும் புகுத்த முயற்சித்தாலும் முயலாமை கதையாகத்தான் இருக்கிறது.

இந்த குருமா தான் வேண்டாம் என்றாலும் (காரைக்குடி) நாக்கை கும்ம வைத்துக்கொண்டு இருக்கிறது.

சுடுதண்ணி said...

வருகைக்கு மிக்க நன்றி ஜோதிஜி, தொழில்நுட்ப சமாச்சாரங்களைச் செயல்படுத்துவதில் முயலாமை குறுக்கிட்டால், தாராளமாக அணுகுங்கள் அவை காட்டுக்குள் விடப்படும் :).

குருமாவும் நாக்கும் பிரிக்க முடியாதது :)