டொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... "இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்தி அதன் மூலம் கோப்புகளை பறிமாறிக்கொள்வது".
அடுத்து அந்த வலையமைப்பு எப்படி உருவாக்கப்படுது மற்றும் செயல்படுதுன்னு பார்க்கலாம். உதாரணத்துக்கு நீங்க ஒரு திரைப்படத்த டொரண்ட் மூலமா தரவிறக்கம் செய்றீங்கன்னு வச்சுக்குவோம்.. முதலில் நீங்க செய்ய வேண்டியது ட்ராக்கர் தளங்கள்/டொரண்ட் தளங்களுக்கு போய் தேவைப்படும் திரைப்படம் இருக்கான்னு தேடி கண்டுபிடிக்கனும். பிறகு அதற்கான டொரண்ட் கோப்பை (eg: nayagan_maniratnam.torrent) உங்க கணினிக்குத் தரவிறக்கம் செய்ங்க. டொரண்ட் கோப்புகள் அள்வில் சில kbக்கள் மட்டுமே இருக்கும்.
டொரண்ட் கோப்பில் என்ன இருக்கும்?.. டொரண்ட் கோப்புல ட்ராக்கர்(tracker) மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்யப் போகும் கோப்புகளின் விவரங்கள் இருக்கும்.
ட்ராக்கர்னா என்ன? ட்ராக்கர் என்பது சர்வரில் இருக்கும் ஒரு நிரல், உங்களுக்கு படத்தை வழங்கப் போகிற சக கணினிகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் ட்ராக்கர் தான் பராமரிக்கும். நீங்க தரவிறக்கம் செய்யப் போற படங்கள் யார் யாரு கணினிகள்ல இருக்கு, மேலும் அவங்க கிட்ட முழுசா இருக்கா.. இல்ல படத்தின் சில பகுதிகள் மட்டும் இருக்கா.. உங்களைப் போலவே தரவிறக்கம் செய்ற சக கணினிகள் அப்படின்னு சகலமும் ட்ராக்கர் தெரிஞ்சு வச்சிருக்கும்.
இப்போ உங்க கிட்ட இருக்கிற டொரண்ட் கோப்பை ஏதேனும் ஒரு டொரண்ட் கிளையண்ட் (உ.தா: பிட்டொரண்ட், யுடொரண்ட்,ஏபிசி..) எனப்படும் மென்பொருள் கொண்டு திறக்கவும். திறந்தவுடன் தரவிறக்கம் செய்யப் போகும் கோப்பை உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் எங்கு சேமிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும் அவ்வளவு தான் நம் வேலை, வெப்-சர்வரில் உள்ள ட்ராக்கரைத் தொடர்பு கொள்வது, சக கணினிகளின் விவரங்களைப் பெற்று அவற்றை உங்கள் கணினியுடன் இணைத்து, தரவிறக்கம் செய்வது இப்படி மற்ற அனைத்து வேலைகளையும் டொரண்ட் மென்பொருள் பார்த்துக்கொள்ளும்.
இதன் சுவாரஸ்யமே இந்த தரவிறக்கம் எப்படி நடைபெறுகிறது என்பது தான். அதற்கு முன் சில பெயர்கள் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சீடர்ஸ் (seeders) - நீங்க தரவிறக்கம் செய்யப் போற படத்தை முழுமையா தன் கணினில வச்சிருக்கிறவங்க.
பியர்ஸ் /ஸ்வார்ம்ஸ் (peers/Swarm) - உங்கள மாதிரியே படத்த தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் சக கணினிகள்.
ஒரு கற்பனைக்கு நீங்க ஒரு திரைப்படத்தோட கதைய உங்க நண்பர்கள் கிட்ட கேக்க போறீங்கன்னு வச்சிக்குவோம். ஆனா நிபந்தனை என்னன்னா ஒரே நேரத்துல அத்தனை நண்பர்களுமே கதை சொல்லுவாங்க. சில நண்பர்கள் படம் முழுசா பாத்துருப்பாங்க, சில பேரு கடைசிப்பகுதி மட்டும், சில பேரு நடுவுல மட்டும் கொஞ்சம், இன்னும் சில பேரு உங்கள மாதிரி கதை கேக்கவும் வந்துருப்பாங்க, இப்படி கலவையா ஒரே நேரத்துல உங்களுக்கு கதை சொல்லுவாங்க. ஒருத்தன் சொன்ன காட்சிய இன்னொருத்தன் சொல்ல மாட்டான். ஒரு வசதி என்னனா எத்தனை பேரு கதை சொல்லுறாங்களோ, அத்தனை காது உங்களுக்கு இருக்கும் (கற்பனை..கற்பனை). கதை சொல்லுறதுக்கு ஆள் அதிகமாக,அதிகமாக, உங்களுக்கு காதுகளும் கூடிட்டே போகனும். குறைந்த பட்சம் முழுப்படம் பார்த்தவர் ஒருவராவது இருக்கனும்.. உங்களுக்கு கதையின் பகுதிகள் கிடைக்க,கிடைக்க அதே நேரத்துல.. உங்கள மாதிரியே கதை கேக்க வந்த நண்பர்களுக்கும், உங்களுக்கு தெரிந்த பகுதிகள் பற்றி தெரியாத மற்ற நண்பர்களுக்கு நீங்களும் கதை சொல்ல ஆரம்பிக்கனும். உங்க கிட்ட எத்தனை பேர் கதை கேட்க இருக்கிறார்களோ அத்தனை வாய் உங்களுக்கு இருக்கும்.. (வெ.ஆ மூர்த்தி கதை சொல்ற மாதிரி ஆயிருச்சு..)
இப்படி எல்லாரும் சொன்னது எல்லாம் உங்க மூளைல பதிவானதும், அதுக்கப்புறம் நீங்க தனியா எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா உங்களுக்கு முழுக் கதையும் கிடைக்கும்.
புரிஞ்சிதா??
இதுல முழுக் கதை தெரிஞ்சவங்க எல்லாரும் சீடர்ஸ் (seeders). நீங்களும், உங்கள மாதிரி கதை கேக்குற/சொல்லுற எல்லாரும் பியர்ஸ்/ஸ்வார்ம்ஸ் (peers/swarms).
இதுல எல்லாருக்கும் ஒரு தார்மீகக் கடமை இருக்கு.. என்னன்னா முழுசா கதை கேட்டவங்க எல்லோரும் மத்தவங்களும் கொஞ்ச நேரமாச்சும் கதை சொல்லிட்டு போகனும் (seeding). அப்படி இல்லாம சுயநலமா தனக்கு முழுக்கதையும் தெரிஞ்சவுடனே "சந்தைக்கு போகனும் ஆத்தா வையும்.காசு கொடு"ன்னு ஓடிப் போறவங்கள தான் லீச்சர்ஸ் (leechers) அப்படின்னு சொல்றாங்க.
நம்ம பதிவுலகத்துல பதிவுகள படிச்சிட்டு, சத்தமில்லாம பின்னூட்டம் எதும் போடாமா நைசா ஓடிப் போறவங்களையும் லீச்சர்ஸ்னு சொல்லலாம் :D.
டொரண்டோட சிறப்பு என்னனா.. இப்படி ஒரே நேரத்துல கொடுக்கல்/வாங்கல் இரண்டுமே சகட்டு மேனிக்கு பல பகுதிகளா பிரிச்சி மேயப்படுறதால "மாமலையும் ஒர் கடுகாம்"ன்ற மாதிரி எவ்வளவு பெரிய கோப்பையும் எளிதா தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல் நீங்களும் மற்றவர்களுக்கு கூடுமானவரை தரவிறக்கம் செய்து முடித்த பின்பும், சீட் (seed) செய்து புண்ணியம் பெறலாம்.
வேகம்: இதன் தரவிறக்க வேகம் எப்படி இருக்கும்? எவ்வளவு கூட்டம் (seeders/peers) இருக்கிறதோ அவ்வளவு வேகம் இருக்கும்.
மக்களால அதிகமா தரவிறக்கம் செய்யப்படுற மற்றும் அளவில் மிகப்பெரிதான கோப்புகளுக்கு டொரண்ட் ஓர் அற்புதமான தொழில்நுட்பம். மேலே படத்தில் உள்ள் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராம் கொஹன் தான் இதன் படைப்பாளி.
அடுத்த பாகத்தில் ட்ராக்கர் தளங்கள், அவர்கள் எப்படி பயனாளர்களைக் கட்டுப்படுத்துகின்றனர், டொரண்ட் கிளையண்ட் மென்பொருட்களை எப்படி பயன்படுத்துவது, எப்படி டொரண்ட் கோப்புகளை நீங்களே உருவாக்குவது என்பது பற்றி பின்னூட்டங்களின் தன்மைக்கேற்ப விரைவில்... :D
54 comments:
பின்னீட்டீங்க நண்பா....
நான் யுடோரண்ட் பயன்படுத்துறேன்.
இந்த அளவுக்கு இந்த மேட்டர என்னால தெளிவா அடுத்தவங்களுக்கு சொல்ல முடியல...
அப்புறம் தல, டோரண்ட நம்பித்தான் திருட்டு டிவிடி தயாரிக்கரவங்க இருக்குறாங்க.
நீங்கபாட்டுக்கு அவங்க லிங்க் எல்லாம் பப்பளிசிட்டி பண்ணி ஆதாரத்தோட மாட்டிக்கிடாதீங்க சொல்லிப்புட்டேன்....
மிக்க நன்றி மச்சி, பாராட்டுக்கும், எச்சரிக்கைக்கும் :).
இடுகையைப் பார்த்தால் சுடுதண்ணி மாதிரி தெரியலையே:)
தொடர்கிறேன்!
நீங்க பேட்டைக்குப் புதுசா:) இல்ல... Word verification கேட்குது பொட்டிக்கடை அதனாலதான் கேட்டேன்.Word verification வெச்சிருந்தீங்கன்னா அண்ணாச்சிகளுக்கு,அக்காளுச்சிக்கெல்லாம் பின்னூட்டம் போடறது கடினம்.
Good Information, Tnx
//இடுகையைப் பார்த்தால் சுடுதண்ணி மாதிரி தெரியலையே:)
தொடர்கிறேன்!//
தொடர்வதற்கு நன்றி நடராஜன் :).. சுடுதண்ணினா எப்படி தெரியணும்?? புரியல என்ன சொல்றீங்கன்னு :(
//நீங்க பேட்டைக்குப் புதுசா:) இல்ல... Word verification கேட்குது பொட்டிக்கடை அதனாலதான் கேட்டேன்.Word verification வெச்சிருந்தீங்கன்னா அண்ணாச்சிகளுக்கு,அக்காளுச்சிக்கெல்லாம் பின்னூட்டம் போடறது கடினம்//
word verification நீக்கப்பட்டது, தெரிவித்தற்கு மிக்க நன்றி.
நன்றி busy :)
தொடக்கத்திற்கு நன்றி நண்பரே..!
வருகைக்கு நன்றி பாலபாரதி. டொரண்ட் குறித்து எழுதத் தூண்டியது தங்கள் பதிவு தான். மிக்க ம்கிழ்ச்சி.
நாங்களும் seeders தாங்கோ ( பின்னூட்டம் போட்டுட்டோம் இல்ல ) கடினமான கான்செப்ட புரியற மாதிரி சூப்பர் ஆ சொல்லி இருக்கிங்க
தங்கள் வருகைக்கும், முக்கியமா ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி அப்பாவித் தமிழன் :)
நாஸ்தி... :-)
இன்னைக்கு கூட ஒருத்தர் கேட்டாரு “டொரண்ட்”னா என்னன்னு.. ஏதோ ஒளாரிட்டுத்தான் வந்தேன்...
உங்களுகு தெரிஞ்ச விஷயத்த அடுத்தவங்களும் புரியுற மாதிரி சொல்றது ஒரு கலை.. உங்களுக்கு அது சர்வ சாதாரணமா கை கூடுது..
அதுக்கு அன்பு பரிசா நான் உங்கள தொடர்கிறேன்..
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.. :-)
nalla velai, eni yarum kettal neeye poi padichu therinchukkanu sollidalam. sonna puriyamatenguthuppa. ;-)
ஊக்கத்துக்கு மிக்க நன்றி கடைக்குட்டி :)
ரொம்ப நன்றி சுகுமார் ;)
I am not a leecher...hence this comment! :-)
உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு குமரன்.. :)
மிக்க நன்றி
இந்த கணனித் தொழில் நுட்பம் சுட்டாலும் வருகுதில்லை. ஆனால் உங்கள் பதிவு சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. சிறுது
விசயஞானமுள்ளவர்கூடப் புகுந்துவிளையாடுவார்கள். அவர்களுக்காக எழுதுங்கள்.
அருமையான உதாரணங்கள், எளிமையான நடை என்னைப் போல் பாமரரும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் விளக்கமளித்த உங்களுக்கு நன்றி.
மேலும் பிட்டொரண்ட், யுடொரண்டில் பேண்வித் டவுன்லோடு ஸ்பீடு, அப்லோடு ஸ்பிடு மாற்றியமைப்பது மற்றும் நாம் டவுன்லோடு செய்யும் போது மற்ற கணினியின் இணையவேகம் குறையுமா என்பது பற்றி விளக்கவும்(ஒரேஆபிஸில் உள்ள கணினியில்)
நன்றி,,,
மிக்க நன்றி யோகன் :).
@ SMAKader
ஆம் நீங்கள் டொரண்ட் மூலம் தரவிறக்கம் செய்யும் போது உங்களின் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ளும் சக கணினிகளின் இணைய இணைப்பின் வேகம் பாதிக்கப்படும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் (உ.தாஅலுவலகம்) நீங்கள் உங்கள் டொரண்ட் மென்பொருளில் உங்களின் பலுக்கப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் மூலம் நெறிப்படுத்திக் கொள்ளலாம்.
பிட்டொரண்ட் அல்லது யுடொரண்ட் ஆகியவற்றில் எதைப் பயன்படுத்தினாலும்
படம்: http://img252.imageshack.us/img252/7191/bt1.jpg
Options->preferences->bandwidth என்ற இடத்திற்குச் சென்று
deselect automatic, Maximum upload rate = 25 Kbs & Maximum download rate = 25kbs
என்று உள்ளிடவும். 25 என்வது ஒரு உதாரணத்திற்கு. உங்கள் அலுவலகத்தின் இணைப்பு வேகத்திற்கு ஏற்ப மற்ற கணினிகளுக்குப் பாதிப்பில்லாமல் கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ளுங்கள்.
(பார்க்க: மேலே உள்ள சுட்டியில் விளக்கமான படம் உள்ளது.)
உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி காதர். தொடர்ந்து வாருங்கள் :).
Maximum
Good info. Thanks.
நன்றி ஷாஜி :)
உங்கள் வீட்டுக்கு உள்ளே வந்தவுடன் எப்போதும் நான் செய்யும் முதல் வேலை ஓட்டுப்பட்டையில் ஓட்டு அளிப்பது. அதன் பிறகு படிக்கவே தொடங்குவது. காரணம் நயமான வெல்லம் அந்த கோனார் கடையில் வாங்கி வாடான்னு 20 வருசமா நம்பிக்கை ஒரே கடை மேல் வைத்திருப்பார்களே அதே போல் உங்கள் எழுத்துக்களின் மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கை இந்த நிமிடம் வரைக்கும் மாறவில்லை என்பது முதல் ஆச்சரியம்.
ஆனால் இதில் உள்ள விசயங்கள் எல்லாமே எனக்குப் புதிது. சம்மந்தம் இல்லாதவையும் கூட இன்னும் நான்கு முறை படிக்கும் போது, உபயோகப்படுத்தும் போது கோனார் நோட்ஸ் போல் (எப்போதும் உங்கள் எழுத்துக்களை வைத்துக்கொண்டு என்னுடைய இடுகையை திறந்து வைத்துக்கொண்டு) பயன்படுத்தி சிறிது கற்றுக்கொண்டு வருகின்றேன்.
எக்காரணம் கொண்டும் ஒரு 100 பக்கங்கள் வரும் அளவிற்கு வந்த பிறகு புத்தகமாக வெளியிட மறக்காதீர்கள். அவஸ்யம்.
தமிழிஷ் பட்டையை மாட்டி பட்டையை கிளப்புங்க. என்னுடைய எழுத்துக்களை 100 சதவிகிதம் வெளியே கொண்டு சென்றதன் முக்கிய காரணம் துபாய் ல் இருக்கும் நாகா உருவாக்கிய இடுகையும் அவர் செய்து தந்த வசதிகளும்.
அடுத்
உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.
பட்டை சேர்த்தாச்சு :).
அண்ணே இந்த மாதிரி வெ. ஆ. மூர்த்தி language ல சொன்னா தான் நல்லா பிரியிதண்ணே...
Tamil Rock
மிக்க மகிழ்ச்சி சாம்பசிவம் :D.. தொடர்ந்து வாங்க.
நன்றி Fameem :)
arumaiyana vilakkam migavum elimaiyagaum puriyumpadiyagaum ulladhu.
nanri
ganesantk
கலக்குறிங்க தலைவரே
நன்றி TKG, கதிர்வேல் :)
விஷயமே தெரியாமல் யூ டொரண்ட் பயனாளர்களில் நானும் ஒருவன்..எல்லா ஆங்கில திரைப்படங்களும் அளவில் பெரிதான சாப்ட்வேர்களும் டொரண்ட் பைலாகத்தான் இறக்கிவருகிறேன்..இருந்தும் ஏன் அப்லோட் காண்பிக்கிறது என ஒரே குழப்பமாக இருந்துவந்தது..தங்கள் பதிவினை கண்டபின்னர்தான் முழு அமைப்பையே விளங்கிக்கொள்ள முடிந்தது.
மேலும் கதை உதாரணம் மிக அருமை.
மிக்க நன்றி தோழர்.
உங்களுக்குப் பயனுள்ளதாயிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி கும்க்கி :). தொடர்ந்து வாங்க..
நல்ல பதிவு Bitcomet பாவிக்கிறேன் டவுன்லோடு ஆகிமுடிந்ததும் அப்லோடு ஆக தொடங்கி விடும், அட வந்த பைல் எல்லாம் போகுதே கோப்பின் தரம் குறைய போகுதே என்று நிறுத்தி விடுவேன், சத்தியமாக ஆயா வையும் என்று காசு கேட்பதில்லை:-)
சுடுதண்ணி என்று றெம்ப கீட்ட இருப்பீங்க என்று இந்த பக்கம் வாறதில்லை மிதமான சூடு மனதுக்கு தெம்பா இருக்கு:-)) பதிவிற்கு நன்றி.
உங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி பிருந்தன். தொடர்ந்து வாங்க, நன்றி.
கோடை வெயில் சுட்டெரிக்கும் போது உங்கள் சுடுதண்ணியால் மனம் குளிர்ந்தேன்!!!
நன்றி வாழ்த்துக்கள்...
ஒஹ்.. இதுதான் சேதியா...
எனக்கு இரண்டு சந்தேகங்கள்..
ஒன்று:படம் முழுவதுமாக தரவிறங்கி முடிந்தவுடன் அதே முகவரியில் (போல்டர்) தான் அந்தப் படத்தை வைத்திருக்க வேண்டுமா(அடுத்தருக்கு பயன்பட) அல்லது, அந்த இடத்தை மாற்றிக் கொள்ளலாமா..? அந்த மென்பொருள், இந்த இட மாறுதலை பின்தொடருமா(ட்ராக்). மற்றவர்களுக்கு உபயோகப் பட வேண்டும் என்றால் அதனை எங்கே வைக்க வேண்டும்..?
இரண்டு:நான் வூசி டவுண்லோடர் உபயோகப் படுத்துகிறேன்..காரணம் தெரியாதலால், அப்லோட் வேகத்தை ஒரு கேபி என்றும் டவுன்லோட் வேகத்தை அதிக பட்சமாகவும் செட் செய்துள்ளேன்..இதனால் தரவிரக்கத்தில் ஏதேனும் குறைவு இருக்குமா..?யு டோர்ரென்ட் என் சிஸ்டத்தில் சரியாக வேலை செய்வதில்லை.. எனக்கு வுசி நன்றாக உள்ளது போன்றே தோன்றுகிறது. எனினும் இதை விட நல்ல டவுண்லோடர் உள்ளதா...?
நன்றி..
போனஸ் கேள்வி..:peers, seeds பற்றி ஓரளவுக்கு தெளிவாகத் தெரிந்து கொண்டேன். பீஎர்ஸ் அதிகம் உள்ள படங்கள் வேகமாக டவுன்லோட் ஆகுமா...? சுயநலமாக நடந்து கொள்ளும்போது, நம்முடைய தரவிர்ந்கும் வேகம் குறையுமா..?
மிக்க மகிழ்ச்சி சீனிவாசன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் :).
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சாமக்கோடங்கி :).
ஒன்று: டொரண்ட் மென்பொருள் (vuze), நீங்கள் முதன்முதலாக டொரண்ட் கோப்பினைத் திறக்கும் போது எந்த முகவரியைக் கொடுத்தீர்களோ அங்கேயே தான் தேடும். எனவே தறவிறக்கம் செயத கோப்புகளை இடமாற்றம் செய்தவுடன், டொரண்ட் கோப்பினை, டொரண்ட் மென்பொருளில் இருந்து நீக்கிவிட்டு, மீண்டும் திறக்கவும். திறந்தவுடன், எங்கே சேமிக்க வேண்டும் என்று கேட்கும், அப்போது நீங்கள் இடமாற்றம் செய்திருக்கும் இடத்தைக் காட்டினால், மென்பொருள் புரிந்து கொண்டு, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும்.
இரண்டு: ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மென்பொருள் சிறப்பானதாக்த் தோன்றும். உங்களுக்கு vuze சிறப்பானதாகத் தோன்றினால் அதையே பய்ன்படுத்துங்கள். vuze மற்றும் utorrent இரண்டும் சிறந்தவையே. நீங்கள் கூறியபடி settings வைத்திருப்பதால் தரவிறக்கத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது, தொடரலாம்.
போனஸ்: ஆம், peers அதிகமிருந்தால் தறவிறக்கத்தின் வேகம் அதிமாக இருக்கும். ஆனால் குறைந்த பட்சம் ஒரு seeder இருந்தால் தான் உங்களால் முழுமையாக நூறுசதம் கோப்புகளைத் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
சுயநலமாக இருப்பதால் தரவிறக்கத்தின் வேகம் குறைவதில்லை. அது நீங்கள் எந்த வலைத்தளத்தினைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதனைப் பொருத்தது. சில தளங்கள் upload/download விகிதாச்சாரம் (ratio) குறைந்த பட்சம் 1 இருந்தால் மட்டுமே தொடர்ந்து தரவிறக்கம் செய்ய அனுமதிப்பார்கள். எனவே நீங்கள் உபயோகிக்க்கும் வலைத்தளங்களின் விதிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்பப் பயன்படுத்திக் கொள்வது நலம்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்களும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சாமக்கோடங்கி.தொடர்ந்து வாங்க.
நன்றி..
அப்படியே, seeds ஐ விட peers அதிகமாக இருந்தால் என்ன நடக்கும், அல்லது மாறி இருந்தால் என்ன நடக்கும் எனபதையும் விளக்கி விடுங்களேன்...
மிக்க மகிழ்ச்சி சாமக்கோடங்கி. seeders மற்றும் peers ஆகிய இருவருமே உங்களுக்கு ஒரே சேவையைத் தான் தருகிறார்கள், கோப்புப் பகுதிகளைப் பகிர்வது. மொத்தம் (seeders+peers) எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அவ்வளவு வேகம் தரவிறக்கத்தில் இருக்கும். மற்றபடி seeders இருப்பதே உங்களுக்கு கோப்பு முழுமையாக கிடைக்கப் போவதினை உறுதிப்படுத்தும்.
எனவே தரவிறக்கம் ஆரம்பிக்கும் முன் ஒரு seeder ஆவது குறைந்தபட்சம் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளவும், வேகத்திற்கு மொத்தம் seeders+peers இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளவும்.
கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி சாமக்கோடங்கி. தொடர்ந்து வாங்க :)
படம் 1: 0(854)seeds, 0(188)peers. ஆனால் டவுன்லோட் ஆகவே மாட்டேன் என்கிறது..
queue விலேயே இருக்கிறது.
படம்2:0(0)sees, 1(2) peers.. அனால் டவுன்லோட் ஆகிக் கொண்டிருக்கிறது..
இது எப்படி...?
1. 0(854) => மொத்தம் 854 seeders பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தற்சமயம் யாரும் வலையமைப்பில் இல்லை (not online)
0(188) => மொத்தம் 188 peers பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாருமே தற்சமயம் வலையமைப்பில் இல்லை.
மொத்தத்தில் உங்களிடம் கோப்புகளைப் பகிர யாருமே தற்சமயம் வலையமைப்பில் இல்லை, அதனால் தான் தரவிறக்கம் ஆகாமல் அடம்பிடிக்கிறது. யாரேனும் வரும் வரை காத்திருங்கள் அல்லது வேறேதெனும் தளத்தில் அப்படம் கிடைக்கிறதா என்று பார்த்து முயற்சிக்கலாம்.
2. 0(0) seeders யாருமே இல்லை.
1(2) இரண்டு peersகளில் ஒருவர் தற்சமயம் வலையமைப்பில் இருக்கிறார். எனவே அவர் உங்களுடன் கோப்புகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், அதனால் தான் உங்களுக்கு தரவிறக்கம் ஆகிறது. தற்சமயம் வலையமைப்பில் இருக்கும் peer வசம் எவ்வளவு கோப்பு இருக்கிறதோ (eg: 65%) அவ்வளவு வரை மட்டுமே உங்களுக்கு தரவிறக்கம் நடக்கும். யாரேனும், seeder வந்தாலொழிய உங்களுக்கு முழுமையானக் கோப்புகள் (100%) கிடைக்காது. :)
உடனடியாக பதில் தருவதற்கு ரொம்ப நன்றி..
நான் கேள்வி கேட்பது எப்படி உங்களுக்கு உடனடியாக தெரிகிறது..?
ஜிமெயில் subscribe செய்துள்ளீர்களா...?
ஆமாங்க :). மிக்க மகிழ்ச்சி & நன்றி :)
மிக்க நன்றி நண்பரே ... இன்று தான் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் .....
மிக்க நன்றி
டோரன்ட் பத்தி எளிமைய அழகா சொல்லி இருக்கீங்க நன்றி
நண்பரே,
நடுவுல நீங்க seeding & leeching எப்படி நடைபெறுகிறது என்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.. இன்னமும் கொஞ்சம் சுலபமாக விளக்கலாமே..
அடிப்படையில் எந்த Torrent link நிறைய seedersகளை கொண்டுள்ளதோ அந்த சுட்டியை உபயோகப்படுத்தி தரவிரக்கம் செய்தால் நீங்க தரவிரக்கம் செய்யும் படம் வேகமாக தரவிறங்கும்..அதே மாதிரி அமெரிக்கா போன்ற copyright சட்டங்கள் வலுவாக உள்ள நாடுகளில் ஆங்கில படங்களை தரவிரக்கம் செய்யாமல் இருப்பது நலம்.. ஏன்னா இப்ப நிறைய பேரை உள்ள புடிச்சி வெச்க்கிறாங்க...பாத்துகோங்க..
நல்லா புரியும்படியா எழுதியிருக்கீங்க.. நன்றி! வாழ்த்துக்கள்!!
Thanks for your information. Very much useful.
மிக்க நன்றி
நன்றி
Superb intro..
அட்டகாசம் நண்பரே...தமிழில் அருமையான விளக்கம்....
அருமையான எளிய விளக்கங்கள் !தொடருங்கள் !
Post a Comment