வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.
'விக்கி' என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.
உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் 'ஆளடி' அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :). 'சர்வ அதிகாரமும் படைத்த' என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் 'அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்' என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. 'தொழில்நுட்பம்'!!!.
'நாந்தான் அப்பவே சொன்னேன்ல' என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது :D. விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே 'வெட்டிப் போடும்' தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.
விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.
விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;), போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்....
32 comments:
வாவ் சரியான நேரத்தில் சூப்பரான தொடர்... :)
அருமை, இதைப்பற்றி இன்னமும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் பகிர்வுக்கு நன்றி நண்பரே.
thanks nanbaa.
சுடுதண்ணி செம சூடு மச்சி !!
அருமை மிக அருமை ....
Interesting.... Super..
U inteligent man
பதிவு அருமையாக உள்ளது.... அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்கிறேன்... நன்றி.....
விக்கிபீடியா, விக்கிலீக் வரிசையில் விரைவில் விக்கிசுடுதண்ணி வர வாழ்த்துக்கள்.
யப்பா மிரட்டராங்க..
(சரளாவைச்சொன்னேன்) :)
தமிழிலும் இப்படியான ஒரு இணையதளம் இருக்கிறது... அந்த தளம் பெயர் சவுக்கு.நெட் http://www.savukku.net
waiting.
அமெரிக்காவையே விக்கி தண்ணி குடிக்க வச்ச விக்கி இனைய தளத்திற்கு தைரியம் அதிகம்
அருமை... தொடருங்கள்...
சுவாரஸ்யமான தகவல்கள், தொடருங்கள்.
"டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது"
:-)))
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்
நன்றி சுடுதண்ணி அண்ணே !
சரளக்கா இங்கே எங்கே வந்தாங்க?
நான் மீண்டும் வருகிறேன்.
//இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை. //
ஆகா!இந்த பேந்தா ஆட்டம் நல்லாயிருக்குதே!!
பத்திகிச்சு!முழுசா படிச்சு முடிச்சுட்டேன்:)
உங்கள் அனைவரின் அன்புக்கும், வருகைக்கும், ஊக்கத்துக்கும் நன்றி நட்புகளே :)
தகவலுக்கு நன்றி புருஷோத்தமன். சவுக்கு போன்றவர்களுக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மிக உதவியாக இருக்கும் :D.
தொடருங்கள் சுவராசியங்களை!
அடுத்த பகுதியை நோக்கி ஆவலுடன்.........
வர வர தேர்ந்தெடுத்துக்கும் படங்களுக்கும், சமயம் பார்த்து ஆடும் சடுகுடு கலையும் கற்று வைத்த உங்களைப் பார்க்கும் அந்த நணடுகளை விட்டு................. சரி தொடருங்க......... தொத்திக்கிரேன்.
உண்மையிலையே சரியான நேரத்தில் மிக சரியாக தேர்ந்தெடுக்கப் பட்ட தொடர். தொடர்ந்து எழுதி வாருங்கள்...
இந்த தளத்தை ஆரம்பிச்சவரு ஆஸ்த்ரேலியா-காரர் என்று கேள்விப்பட்டேன்... அமெரிக்கவும் ஆஸ்த்ரேலியாவும் நட்பு நாடுகளாக இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்று மண்டையை போட்டு குழப்பிக் கொண்டு இருந்தேன்.
என்னுடைய சந்தேகத்தை மிக எளிமையாக விளக்கு உள்ளீர்கள்..
ஊக்கத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி யோகேஷ், சைவக்கொத்துபுரோட்டா. தொடர்ந்து வாங்க :)
பகிர்வுக்கு மிக்க நன்றி தினேஷ் :)
கோவை சரளா பாதிப்பா @ ஜோதிஜி :D
விக்கி லீக்ஸ் பற்றி கூறிய விளக்கம் அருமை தொடரவும் வாழ்த்துக்கள்
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி. - சூரி
http://surimount.blogspot.com/
http://suriyodayamtamil.blogspot.com/
தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்
தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
தமிழ்மணம் விருதினை வென்றதற்கு வாழ்த்துகள் சுடுதண்ணி.
thagavalukku nanry.happy thamil puththaandu.
anbutan N.G.N.SWAMY.
nalla tagaval thrattum ungal pani
Post a Comment