Monday, December 20, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 12

Mirrored site என்பது ஏற்கனவே இணையத்தில் வலையேற்றப்பட்டிருக்கும் ஒரு இணையத்தளத்தை பெயருக்கேற்றாற் போல் அப்படியே கண்ணாடியாய் பிரதிபலிப்பது தான். ஏன் கண்ணாடி போல என்று விளக்கப்படுகிறதென்றால் அசலான இணையத்தளத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ அடுத்த நிமிடம், அப்படியே நகலில் பிரதிபலிக்கப்படும் (relative link). இதைச் சாத்தியப்படுத்துவதற்கு வழக்கம் போல் இணையமெங்கும் மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன, வழக்கம் போல் கூகுளாடி பெற்றுக்கொள்ளலாம். (உதா: HTTrack ). இவ்வாறு பிரதிபலிக்கும் தளங்களைத் (mirrored sites) தயார் செய்வதற்குத் தேவையானப் பொருட்கள் பிரதிபலிக்கச் செய்யும் மென்பொருள், உங்களுக்குச் சொந்தமாக இணைய வழங்கியில் கோப்புகளைச் சேமிக்க இடம், மற்றும் அசல் இணையதளத்தின் இணைய வழங்கியின் விவரங்கள் (hosting servers).

மேற்சொன்ன விவரங்களை, பிரதிபலிக்கும் மென்பொருளில் உள்ளிட்டு இயங்க விட்டுவிட்டால், அதன் பின்னர் நம் மற்ற வேலைகளை கவனிக்கப் போய்விடலாம். அந்த மென்பொருள் என்ன தான் செய்யும்?. குறிப்பிட்டக் கால இடைவெளியில் அசல் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும், பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் இருக்கும் கோப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அசல் தளத்தில் ஏதேனும் புதிய கோப்புகள் வலையேற்றப்பட்டிருந்தாலோ அல்லது இருந்த கோப்புகள் நீக்கப்பட்டிருந்தாலோ அதே மாற்றங்களை பிரதிபலிக்கும் தளத்தின் வழங்கியில் செயல்படுத்தும்(Sync.). விக்கிலீக்ஸ் ஆர்வலர்களில் பெரும்பாலானோர் இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பதும், அவர்களுக்கும் இணைய வழங்கிகள் கோப்புகளைச் சேமிக்க இடம் வைத்திருப்பதென்பது நம்மூரில் கேபிள் இணைப்பைப் போல, சகலரும் வைத்திருப்பார்கள்.


விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்கி விட்டோம் என்று அமெரிக்கா ஊடகங்களில் உரத்துக் கூவிக் கொண்டிருந்த பொழுதுகளில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலர்கள் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் விக்கிலீக்ஸ் தளத்தின் நகல்கள் நூற்றுக்கணக்கில் தயாராகிக் கொண்டிருந்தன. இவ்வாறு பிரதிபலிக்கப்படும் தளங்கள் யாவும் உலகின் வெவ்வேறு மூலைகளில் உள்ள நாடுகளின் வழங்கியில் சேமிக்கப் பட்டதென்பதும், அந்தந்த நாடுகளின் சட்டதிட்டத்தின் படி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதென்பது மிகக் குஷ்டமென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றளவும் பல நாடுகளில் இணையத்தொடர்புகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போதிய சட்டங்கள் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். இவையனைத்தும் நடந்து கொண்டிருந்த வேளைகளில் ஜூலியனைக் கைது செய்ய லண்டன் மாநகரக் காவல்துறை முயற்சி செய்ததும், ஒவ்வொரு நாளும் புதிதாகச் சில ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தின் மூலமாக வெளியிடப்படுவதும் தடங்கலின்றி நடந்து கொண்டிருந்தன. தளத்தையும் முடக்க முடியவில்லை, ஆளையும் பிடிக்க வைக்க முடியவில்லை என்று குமுறிய அமெரிக்காவிற்குத் தினமும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த ஆவணங்களின் கொசுத் தொல்லையும் சேர்ந்து தாங்கொனாத் துயரமடைந்து, ஜூலியனை நோக்கித் தன் இறுதி தாக்குதலை நடத்தியது.

ஜூலியன் பயன்படுத்தும் விக்கிலீக்ஸ் தளத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், Paypal தளத்தின் கணக்குகள், VISA மற்றும் MasterCard கடன் அட்டைகள் என சகலமும் முடக்கப்பட்டன. விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகளுக்கும், ஜூலியன் இணையத்தில் ஆடும் கண்ணாமூச்சிகளுக்கு பணம் ரொம்ப, ரொம்ப அவசியம். விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் அவர்களுடன் சேர்ந்து வெளியிடும் அமெரிக்க, ஐரோப்பிய அச்சு ஊடகங்கள் மூலம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு நிதி அளிக்கப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டாலும்,ஜூலியனின் முக்கிய நிதி ஆதாரம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு, Paypal மூலம் நன்கொடை வழங்குபவர்கள் தான். தனது ஜீவநாடியான நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டதும், இனி மறைந்திருந்தும் உபயோகமில்லை என்பதை உணர்ந்த ஜூலியன், தனது வழக்கறிஞர்கள் துணையுடன் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் சரணடைந்த சம்பவம் நிகழ்ந்தது. ஊரையே உலையில் போட்டு விட்டு மலர்ந்த முகத்துடன், பூரித்துப் போய் சிறை செல்லும் இக்காலத்தில், எந்தவித உணர்வையும் காட்டாமல் சரணடைந்த ஜூலியன், சிறைக்குச் செல்வதற்கு முன்பு விக்கிலீக்ஸ் வழக்கம் போல் செயல்படும் என்று சொல்லிச் செல்ல ஜூலியன் மறக்கவில்லை. அதுவரை ஜூலியனால் எதுவும் சாத்தியம் என்று நம்பிக்கைக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் ஆர்வலர்களுக்கு இச்சம்பவம் மிகுந்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் கொடுத்தது.


இக்கோபத்தின் வெப்பம் அப்படியே ஜூலியனை முடக்கியவர்களிலேயே முக்கியமானவர்களான VISA மற்றும் MasterCard பக்கம் திரும்பியது. வெறும் கணினியும், இணைய இணைப்பும் வைத்துக் கொண்டு சிறிய அறைக்குள் செயல்படும் இவர்களால் மிகப்பெரிய நிறுவனங்களை என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தவர்கள் அனைவரையும் வாய்பிளக்கும் வகையிலான இணையப்போர் நடந்தது. பெயரிலிகள் இணைய நற்பணி மன்றம் (anonymous) என்று தங்களை அழைத்துக் கொண்ட குழு ஒன்று, "Operation Payback" என்ற தாக்குதல் திட்டத்தினை அறிவித்தது. DDoS attack என்ற இணையக் குட்டிச்சாத்தான், VISA மற்றும் MasterCard இணையத் தளங்களின் மேல் ஏவி விடப்பட்டது. DDoS (Distributed Denial of Service) தாக்குதல் என்பது அரசியல் கட்சிகள் ஊர்வலம் சென்று சாலைகளை முடக்குவதைப் போலத் தான். சும்மா இருக்கும் இணையத்தளத்தினை நோக்கி பல்வேறு கணினிகளில் இருந்து ஏகப்பட்ட தகவல் இணைப்புகளை அனுப்பி போலியான இணையப் போக்குவரத்தினை அளவுக்கு மீறி ஏற்படுத்துவதன் கொடுமை தாங்காமல், தாக்குதலுக்கு உள்ளாகும் இணைய தளத்தின் வழங்கிக் குப்புறப் படுத்துக் கொள்ளும். இத்தாக்குதலை தொடுப்பதற்கென சிறப்பு மென்பொருட்கள் உள்ளன.

இந்த தாக்குதலில் (operation payback), Visa மற்றும் Mastercard தளங்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டாலும், இலவச இணைப்பாக amazon நிறுவனத்தின் இணையத்தளத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலை அத்தளம் வெற்றிகரமாக சமாளித்தது. இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில், சந்தடி சாக்கில் விக்கிலீக்ஸ் தளத்தின் மீதும் DDoS தாக்குதல் நடத்தப்பட்டது. தோல்வியில் முடிந்த அத்தாக்குதல் சி.ஐ.ஏ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் சார்பானவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது :).


ஜூலியனின் கைதுக்கு எதிராக நடந்த போராட்டங்கள், கைது செய்யப்பட்ட ஜூலியனுக்கு நடந்தவை, விக்கிலீக்ஸ் தளத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து இறுதிப் பகுதியில்...

"விக்கிலீக்ஸ் உலகின் தனித்துவமான வெளியீட்டு நிறுவனம்" - ஜூலியன்


25 comments:

பொன் மாலை பொழுது said...

It is so fascinating and thrilling to know how the Vikileaks is still survives.
Another feather on your cap. carry on dude!

Prabu Krishna said...

இதைவிட விக்கிலீக்ஸ் பற்றி தமிழில் எழுத இன்னொருவரால் முடியாது. உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை ..........ஜூலியனின் கைதுக்கு எதிராக நடந்த போராட்டங்கள், கைது செய்யப்பட்ட ஜூலியனுக்கு நடந்தவை, விக்கிலீக்ஸ் தளத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து இறுதிப் பகுதியில்.....
/////

உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் .........

Anonymous said...

விக்கிலீக் வெளியிட்ட செய்திகள் அனைத்துமே 100ல் 1 சதவீதம் மட்டும்தானாம். மீதி இன்னும் வெளியிடவில்லை, கால சூழல் அறிந்து பொறுப்புடன் அவைகளை வெளியிட உத்தேசித்துள்ளார்களாம். இல்லை என்றால் உலகில் இன்னொரு யுத்தமே வந்திருக்கும். இவர்களின் பொறுப்பு நம்மை வியக்க வைக்கிறது.

உமர் | Umar said...

//இந்த தாக்குதலில் (operation payback), Visa மற்றும் Mastercard தளங்கள் வெற்றிகரமாக முடக்கப்பட்டாலும்//

Visa, MasterCard மற்றும் Amazon மட்டுமின்றி ஸ்விஸ் வங்கி (PostFinance) ஒன்றினையும் முடக்கினர்.

சுடுதண்ணி said...

தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி கக்கு மாணிக்கம், பாண்டியா, உலவு, அங்கிதா.

தகவலுக்கு மிக்க நன்றி கும்மி. தொடர்ந்து வாங்க :).

சைவகொத்துப்பரோட்டா said...

அடுத்த பாகம் நிறைவுப்பகுதியா, விறுவிறுப்புடன் தகவல்களும் அருமை.

ரோஸ்விக் said...

//விக்கிலீக்ஸ் தளத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து இறுதிப் பகுதியில்... //

என்னாண்ணே இப்படி டக்குன்னு இறுதிப்பகுதின்னு போட்டுட்டீங்க?? எம் மனசு தாங்காதுண்ணே. அப்புறம் ஊருக்கு வந்தா உங்களுக்கு காளிமார்க் பவண்டோ கிடைக்காது.

calmmen said...

super!

Durai said...

It's going well..Why you plan to quite soon..Pls let me give more details..Pls don't quite soon...

சேக்காளி said...

யாருகிட்ட?. அப்டின்ன விக்கி கூட்டத்த பாராட்டத்தான் செய்யணும்.

Meena said...

very excellent

Unknown said...

good article very intersting

nTamil said...

Dir Sir,

I am a fan from you.

i want to talk with you.

can you please send me your phone number to me.

my email id: info@ntamil.com

regards

kanna

puduvaisiva said...

ஒன்று மட்டும் நிச்சயம் ஜூலியன் வல்லரசு அமெரிக்காவை இன்னும் எதிர் காலங்களில் அதிக அளவு தண்ணீகாட்டுவார் .

நன்றி சுடுதண்ணி அண்ணே...

dsfs said...

Nice article sir

எஸ்.ஆர்.சேகர் said...

man of the year 2010 --julian asanj--blogger of the year 2010 "suduthannee"--vaazthukkal
sr.sekhar--santhana sitharal

Thomas Ruban said...

விக்கிலீக்ஸ் பற்றி தமிழில் மிக அருமையான தொடராக தொகுத்து அளிப்பதற்கு மனமார்ந்த நன்றிகள் சார்.....

Unknown said...

//பெயரிலிகள் இணைய நற்பணி மன்றம் (anonymous) என்று தங்களை அழைத்துக் கொண்ட குழு ஒன்று, "Operation Payback" என்ற தாக்குதல் திட்டத்தினை அறிவித்தது.//

அறியப்படாத புதிய செய்திகள், இப்படியும் ஒரு இணைய தளத்தை தாக்கலாமா?

Dhamu said...

Its Interesting....!

Unknown said...

வழக்கம் போல் அசத்திவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்...

-அன்புடன் பல்லவன்

சாமக்கோடங்கி said...

இணையத்தில் எத்தனை விதமான விஷயங்கள் நடக்கின்றன.. அடேங்கப்பா.. இப்பேற்பட்ட பெரிய இணையதளங்களையே முடக்க முடியும் எனும்போது, வங்கிகளில் இருக்கும் மக்களின் கணக்குகளுக்கு என்ன பாதுகாப்பு என்று எண்ணத்த தோன்றுகிறது.. ஆனா ஜூலியனின் அடுத்த அஸ்திரம் என்னவென்று தெரியவில்லை..

சுடுதண்ணி said...

தொடர்ந்து வரும் உங்களனைவரின் ஊக்கத்துக்கும், அன்புக்கும் மிக்க நன்றி.. நன்றி.. நன்றி..

தவிர்க்க இயலாத காரணங்களால் :D இத்தொடர் நிறைவடைகிறது, சிறிது காலம் கழித்து, ஜூலியனின் ஆட்டங்கள் தேவையான அளவுக்கு நிகழ்ந்த பின் மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_21.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்து தெரிவிக்கவும். நன்றி..

Anonymous said...

In your play cash bankroll, you win 35 times your unique bet should you get the quantity right on a single quantity bet. It is a significant win, and a great way} of learning realistic odds and payouts at no cost earlier than risking any money. In a casino, players who win at roulette are merely having a fortunate day. There are some methods which might help decrease your losses, however profitable numbers are all the time 바카라 사이트 random. By figuring out about odds and guidelines, players could be at a slight advantage when they place their bets.