Sunday, December 5, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 6


அடிப்படையில் ஜூலியன் மிக அமைதியான நபர். எந்தவொரு அலட்டலோ, மேதாவித்தனமோ இல்லாமல் மென்மையாகப் பேசிப் பழகும் ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் மட்டுமே உயிர்நாடி. அதற்கென்று பாதிப்பு வரும்பொழுது மனிதர் புயலென சீறுவதில் நொடிப்பொழுதும் தயங்குவதில்லை. ஊடக சுதந்திரத்திற்குப் பெயர் போன ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டில் சில இணையத் தளங்களைத் தடை செய்யப் போவதாகச் செய்த அறிவிப்பு, மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. ஊரெல்லாம் துயர்துடைக்கும் மண்ணின் மைந்தன், தன் வீட்டில் விசேஷம் என்றால் சும்மா இருக்க முடியுமா?. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரெலியாவின் ஊடகச் சுதந்திரக் கோவணம் காற்றில் பறக்க விடப்பட்டது, எந்தெந்த இணையத் தளங்கள் தடைசெய்யப்படப் போகின்றன என்ற பட்டியல் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அவற்றுள் சிறார் -பாலியல் சம்பந்தப்பட்ட தளங்கள், மற்ற சட்ட விரோத தளங்களோடு, சில நல்ல தளங்களும் இருந்தது. ஊடகங்களின் கேள்விக் கணைகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைத் துளைத்தெடுத்தன. முதலில் அப்பட்டியலை மறுத்த ஆஸ்திரேலியா, பின்னர் ஒருவாறாக ஒப்புக் கொண்டது.

ஆஸ்திரெலியாவுக்கு கொடுத்த அல்வாவின் விளைவு ஜெர்மனியில் விளைந்தது. இச்சம்பவம் நடந்த சில வாரங்களில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஜெர்மனி இணைய முகவரியின்(www.wikileaks.de) உரிமையாளரும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலருமான தியோடர் என்ற ஜெர்மானிய இளைஞரின் வீட்டில் அதிரடிச் சோதனை நடந்தது. விஷயம் கேள்விப் பட்டது ஜூலியன் சுருக்கமாக, காட்டமாக ஊடகங்களின் மூலம் ஒரு அறிக்கை விடுத்தார். அது அறிக்கை என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருத்தமானது. ஒரு நிறுவனத்தின் சார்பில் என்றாலும், ஒரு தனிப்பட்ட மனிதன், வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கெதிராக விடுத்த அறைகூவலாகவும், ஊடகவியலாளார்கள் பெருமை கொள்ளும் விதமாகவும் அந்த அறிக்கை அமைந்தது. "நீங்கள் எங்கள் நபர்களைத் தொடருங்கள், நாங்கள் உங்களைத் தொடர்வோம்", இது தான் அந்த அறிக்கையின் கடைசி வரிகள்.


ஜூலியனிடம் மோதினால் என்ன நடக்கும் என்று தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களான ஜெர்மனியர்களின் அரசாங்கத்திற்குப் புரிந்தே இருந்தது. அதற்குப்பின் விக்கிலீக்ஸ் சம்பந்தமாக ஜெர்மனி எதிலும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படியாக பலநாடுகளிடம் சோதனை அனுபவம் பெற்ற ஜூலியன், அமெரிக்காவின் பக்கம் திரும்பினார். அன்று பார்வையைத் திருப்பியவர் தான், இன்று குரல்வளைப் பிடி, பிடித்துக் கொண்டிருக்கும் வரை தொடர்கிறது. அமெரிக்காவில் ஜூலியனிடம் முதலில் சிக்கியது ஒரு தேவாலயக் குழுமம் (church of scientology). கிட்டத்தட்ட நம்மூர் சித்துவேலை பகவான்களின் ஆசிரமக் குழுமங்கள் மாதிரி, சுமார் 60 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. அதில் நடக்கும் உள்ளடி வேலைகள், முறைகேடுகள், சில போதைப் பொருட்கள் கையாடல் சம்பந்தமாக என்று நீள்கிறது ஆவண விவரங்கள். அனைத்தும் ஒருநாள் அதிகாலை பனிப்பொழுதில் விக்கிலீக்ஸ் தளத்தில் மங்களம் பாடப்பட்டது.


அடுத்த சில தினங்களில் தேவாலயக் குழுமத்தின் தலைமை, தங்களது வழக்கறிஞர்கள் மூலம் ஒரு கடிதம் அனுப்பியது. 'பேரன்பும் மதிப்பிற்கும் உரிய விக்கிலீக்ஸ் சமூகத்தாருக்கு, அனேக நமஸ்காரங்கள். தாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அமெரிக்க காப்புரிமைச் சட்டத்தின் படி எங்கள் குழுமத்திற்குச் சொந்தமானவை. அவற்றை நீங்கள் பயன்படுத்துவது கிரிமினல் குற்றம். நீங்களாக நீக்கினால் உத்தமம். இல்லையேல்...' என்ற கோணத்தில் சென்றது அக்கடிதம். சும்மாவே ஆட்டம் காட்டும் ஜூலியனுக்கு, இதைப் படித்ததும் கேட்கவா வேண்டும். "உங்கள் கடிதம் ஊடக சுதந்திரத்திற்கு நீங்கள் விடுக்கும் நேரடியான மிரட்டல். உங்களின் இந்த மிரட்டலுக்கு எங்களின் பதிலாக உங்கள் தேவாலயம் சம்பந்தப்பட்ட இன்னும் சில ஆயிரம் ஆவணங்கள் வெளியிடப்படும்" என்று பதிலறிக்கை விடப்பட்டது. அத்தொடு நில்லாமல் அடுத்த வாரமே, ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தில் சொன்னபடி வெளியிடப்பட்டது. 'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்பதை உலகுக்கும் சொல்லாமல் உணர்த்தினார் ஜூலியன். அதன் பிறகு அத்தேவாலயக் குழுமம் வாயேத் திறக்கவில்லை :).


இது வரை நிறுவனங்களையும், அரசாங்கத் துறைகளையும் சோதித்துப் பார்த்த ஜூலியனுக்கு அடுத்ததாக அமெரிக்காவின் தனிநபர் குறித்த சட்டப்பாதுகாப்பினைப் பரிட்சித்துப் பார்க்க சிக்கியவர் தான் அலாஸ்கா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் சாரா பாலின். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளர். அழகுக்கும் "அறிவு"க்கும் பெயர் போனவர். இவரின் 'புத்தி'சாலித்தனமான பேட்டிகளும், அறிக்கைகளும் அமெரிக்காவில் மிகப்பிரசித்தம் :D. சில பேர் முகத்தைப் பார்த்தாலே எப்படியும் கடன் தந்து விடுவார் என்று கணிப்பவர்கள் இருக்கும் இக்காலத்தில், சாராவைப் பார்த்ததும் என்ன நினைத்தார்களோ, அவரின் யாஹூ மின்னஞ்சல் முகவரி, விக்கிலீக்ஸ் புண்ணியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு மாகாணத்தின் கவர்னரின், அதுவும் ஒரு பெண்ணின் மின்னஞ்சலில் என்னென்ன வில்லங்கங்கள் இருந்தன?... அடுத்த பகுதியில்.


அநீதிகளைத் தடுப்பதற்கான முதல்படி, அநீதிகள் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது தான் - ஜூலியன்

39 comments:

sulthan said...

continue...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பணி சிறக்க வாழ்த்துக்கள்...

guna said...

welcome

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா! மர்ம நாவல்களையும் விட இந்த செய்திகள்
படு திரில்லாக இருக்கிறது! நன்றி.

வடிவேலன் ஆர். said...

வாழ்த்துக்கள் உங்களை தொடர்பு கொள்ள வேண்டுமே நண்பா முடியுமா ??

nrajas said...

மிகவும் சுவாரஸ்யமான தொடர்,
எளிமையான எழுத்து நடை.
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள.

நதிக்கரை
ராஜா நடராஜன்
http://www.nathikarai.blogspot.com

கவிதை காதலன் said...

வாவ்.. எவ்ளோ சுவாரஸ்யமா இருக்கு தெரியுமா?? ப்ளீஸ் தொடருங்கள்

Thomas Ruban said...

தன்னுடைய அபரிமிதமான தொழில்நுட்ப அறிவை நல்லவற்றிக்கு பயன்படுத்தும் ஜூலியன் பாரட்டுக்குரியவரே...
பகிர்வுக்கு நன்றி சார்.

கக்கு - மாணிக்கம் said...

தினமும் ஒரே மாதிரி டெம்ப்ளேட் பிக்ஸ் பண்ணிக்கொண்டு பின்னூட்டம் போட பிடிக்கவில்லை.
ஆனாலும் எப்படி பாராட்டுவது என்றும் தெரியவில்லை. முன்னரே சாரா பாலின் என்பவர் பற்றி கேட்க நினைத்தேன் இப்போது வருகிறது கதைகள்.
இதைத்தான் கேட்கத்தோன்றுகிறது.
இத்தனை நாள் எங்கிருந்தாய் ?
Hats Off :D

கக்கு - மாணிக்கம் said...

அய்யா சாமி. நான்தான் லேட்டா வந்துட்டேன். மன்னிக்கணும். :))))

அன்பரசன் said...

Interesting...

elangovan said...

It is very interesting like a crime novel...

புரட்டு said...

வணக்கம்... நண்பரே
நல்ல தகவல் சேகரிப்பு...
விறுவிறுப்பான தமிழ் நடை...
தேர்ந்த எடுத்துக்காட்டுகள்
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

pithamagan said...

kalakala....kkkkal post ,very good job

ithukkuperuthan pinni pedaledukirathu...

hats of for ur hard work ....

teeya velai seiyanum ok

♠புதுவை சிவா♠ said...

'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்'

:-)

ஜூலியனின் மனதிடம் வியப்பாக உள்ளது.

Anonymous said...

மிகவும் அருமை அண்ணா
தகவல்களை மிகவும் அழகாக தொகுத்து சொல்லுகிறீர்கள்
அனைவர்க்கும் கண்டிப்பாக பயனுள்ளதாய் இருக்கும்

Anonymous said...

Your blog will never be the same again after this wikileaks series.

சீலன் said...

நாங்க இப்ப என்ன படிக்க நினைக்கிறோமோ,
அதை தாய் மொழியில் தந்ததற்கு நன்றி.
விக்கிலீக்ஸைப்பற்றி ஒரு விக்கிபிடியா.

ஜோதிஜி said...

சரியா போய்க்கொண்டுருக்கு. தொடரவும்.

அருள் said...

ஜூலிய‌னுக்கு ச‌‌பாஷ்! விக்கிலீசின் வ‌ர‌லாற்றை த‌மிழில் கொடுக்கும் உங்க‌ளுக்கும் ஒரு ச‌பாஷ்.
உலக‌மே த‌ன்கையில் இருக்கு என்ற‌ இருமாப்பில் இருப்ப‌வ‌னை உச்சி ம‌யிர்பிடுத்து ஆட்டுவ‌துபோல் உள்ள‌து. ப‌டிக்க‌ ப‌டிக்க‌ ரொம்ப‌ விருவிருப்ப‌க‌வும் ச‌ந்தோச‌மாவும் இருக்கு...........உங்க‌ள் ப‌ணி தொட‌ர‌ வாழ்த்துக்க‌ள்

கோட்டை மகா said...
This comment has been removed by the author.
கோட்டை மகா said...

மிக அருமையா தகவல்கள் நண்பரே..
நல்ல எழுத்து நடை..
அருமையா எழுதி இருக்கிறீர்கள்
பனி சிறக்க வாழ்த்துக்கள்

http://mahamuthu.blogspot.com

Jegan said...

Dear Mr.சுடுதண்ணி, நான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்தான் உங்கள் blog ஐ பார்த்தேன். நீங்கள் post செய்திருந்த விஷயங்கள் அனைத்தும் அருமை. கிட்டத்தட்ட எல்லா போஸ்டையும் படித்து முடித்துவிட்டேன். இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும். ஒரு சிலரை போல உலக சினிமா என்ற பெயரில் நந்தலாலாவையும் கமலையும் விமர்சனம் என்ற பெயரில் மொக்கை போடாமல் உபயோகமான விஷயங்களை கொடுக்கின்றீர்கள். நன்றி.
ஜெகன்

Jegan said...

successfully I have voted most of your posts. Is there any options for கள்ள ஓட்டு
? :-)

தவறு said...

தொடருங்க சுடுதண்ணி

தேடல் said...

பல பதிய தகவல்கள்,தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தொடருங்க சார்.

அகல்விளக்கு said...

thala...

sema temptation-a poguthu thala....

keep rocking...

க.மு.சுரேஷ் said...

நன்றி தொடருங்கள்..
வாழ்த்துக்கள்.

Dhamu said...

Interesting தலைவா!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

sema intresting

thodarungo:)

UFO said...

தட்ஸ்தமிழ்: ///விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பாலியல் குற்றச்சாட்டின் பேரிலே கைது செய்துள்ளதாக லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

'அவர் மீது ஸ்வீடனில் செக்ஸ் புகார் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக ஸ்வீடன் இன்டர்போல் உதவியை நாடியது. இதைத் தொடர்ந்து லண்டனில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்'.

இதைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கை சுவிட்சர்லாந்தை சேர்ந்த போஸ்ட் பைனான்ஸ் வங்கி முடக்கியது. 'சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதாக பொய்யான இருப்பிட சான்றிதழ் வழங்கியுள்ளார். இதனால் அவரை எங்களால் சந்தித்து தகவல்களை பரிமாற முடியவில்லை. எனவே, அவரது வங்கி கணக்கை முடக்கியுள்ளோம்' என்று தெரிவித்துள்ளது.////

ஏதோ பக்கா தெலுங்கு அரசியல் அதிரடி மசாலா படம் பார்க்கிற மாதிரி இருக்கு.

இது இடைவேளையோ?

அப்புறம் அடுத்த பாதியில்தான் ஜெயிலில் இருந்து ஜூலியன் தப்பி வந்து அமெரிக்க அதிபரையும் சுவீடன் பிரதமரையும் சுவிஸ் வங்கி மேலாளரையும் கிளைமாக்சில் போட்டுத்தள்ளுவார் என்று எதிர்பார்க்கலாம்.... அதுவரை....

"காபி... போண்டா.... டீ..... வடை.... பாப்கார்ன்.... முறுக்கே...."

டயஷா said...

விக்கிலீக்ஸ் பற்றி தொடர்ந்து எழுதி வரும் உங்களுக்கு முதலில் நன்றி, உங்கள் அனைத்து ஆக்கங்களும் நன்று...... உங்கள் ஆக்கங்களை மேலும் எதிர் பார்த்து காத்து இருக்கின்றோம்....

Annaraj said...

Simply superp

Anonymous said...

//Is there any options for கள்ள ஓட்டு
? :-) //

That kalla oottu also will be revealed in wikileaks. is it ok for you?

சுடுதண்ணி said...

உங்கள் அனைவரின் அன்புக்கும், ஊக்கத்துக்கும் நன்றி நண்பர்களே. உங்களின் வார்த்தைகளே தொடர்ந்து எழுத தூண்டுகிறது.

Cablegates, Mirroring and julians surrender இவை அனைத்தும் விளக்கமாக விவரிக்கப்பட்டே இத்தொடர் நிறைவடையும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Dinesh said...

இந்த பதிவை நான் படிக்கும் பொழுது (08 Dec 2010 15.24 ) விக்கிலீக் நிறுவனர் ஜூலியன் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்...

dheepan said...

very interesting suduthanni..please consider changing the layout..it will attract more people and ur blogs will look nice
i have to say about the writing style its very good and interesting to read...i was curious to know all about these matters..thank you so much, continue the work..i am bookmarking ur blog
good luck

veer168 said...

what a men? r u great juu....

surimountain said...

பலே, பலே! - சூரி