Saturday, December 4, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 4

ஜூலியனுடன் கைகோர்த்த நண்பர்களில் ஒருவர் இந்த Tor வலையமைப்பில் relay எனப்படும் தொடர்புப்புள்ளியாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ஜூலியன் யதார்த்தமாக அதன் வலைப்போக்குவரத்தை உளவு பார்க்க, அதில் பதார்த்தமாக நிறைய சீன வலையமைப்பு எண்கள் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. கடுமையான இணையக் கட்டுப்பாடு கொண்ட சீனாவில் இருந்து Tor வலையமைப்பினை உபயோகிப்பது நிச்சயம் வில்லங்கமான நபர்கள் தான் என்று முடிவு செய்யப்பட்டு கொக்கிகள் அமைக்கப்பட்டு அந்த நண்பரின் relay தொடர்பின் முழுப் போக்குவரத்தும் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் அந்த வலைப் போக்குவரத்தின் சொந்தக்காரர்கள் சீன ஹேக்கர்கள். கடந்த காலங்களில் சீன மொழியில் பின்னூட்டங்கள் பெற்று, அது என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்குள் மொத்தமாக இழுத்து மூடப்பட்ட வலைப்பதிவுகள் ஏராளம் என்பது உபதகவல். திரைப்படங்களில் அதுவரை சாதரணமாகக் காட்டப்படும் கதாநாயகன், வில்லனின் அடியாட்கள் வரும் காட்சியில் திடீரென கராத்தே சாம்பியன் என ஒரு அவசரக் கதம்பம் மொத்தமாக சுற்றப்படுவதைக் கண்டுகளித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே போல் ஒரு தருணம் தான் ஜூலியனுடன் இணைந்திருந்தவர்களுக்கு.ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமியைப் போல் ஜூலியனும் சங்கேதக் குறியீட்டு முறை வித்வான் என்று அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது, மேலும் Tor வலையமைப்பிற்கான் மென்பொருள் கட்டமைப்பிற்கான மென்பொருளில் சில தொழில்நுட்ப பள்ளங்கள் இருந்ததும் காரணம். தேர்ந்த வித்வானாகிய ஜூலியன் அந்த பள்ளங்களில்லாம் நீக்கமற நிறைந்தார். சில வாரங்களில் சுமார் 1.2 மில்லியன் கோப்புகள் கைப்பற்றப்பட்டன. அவ்வளவும் புதையல். அதில் மொத்தமாக என்னெவெல்லாம் சிக்கியதென்பது ஜூலியனுக்கும் அவர் சகாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். 1.2 மில்லியன் கோப்புகள் என்பது அளவுகளில் டெராபைட்களில் இருக்குமென்பதால் மொத்தத்தையும் வலையேற்றுவதற்கு பொருளாதரம் கெட்டியாக இருக்க வேண்டும், மேலும் கொஞ்சம் கஷ்டமும் கூட. ஜூலியனுக்கு அப்படி கிடைப்பதையெல்லாம் வலையேற்றுவதில் விருப்பமில்லை. அதுவும் அமெரிக்காவிற்கு எதிரான முதல் வெளியீடு, ஒரே நாளில் உலகம் முழுதும் அத்தனை இடங்களில் தீப்பிடிக்க வேண்டுமென்பதே ஜூலியனின் கனவு.


நம்மூரில் 12 பேர் கொண்ட குழு அமைத்து ப்ளெக்ஸ் போர்டுகளுக்கு வாசகங்கள் எழுதுவது போல விக்கிலீக்ஸ் தளத்திற்கு நான்கு பேர் கொண்ட ரகசியக் குழு இருக்கிறது. அவர்கள் தான் கிடைக்கும் கோப்புகளையெல்லாம் சரிபார்த்து, மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் மொழிபெயர்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, பொய் வேஷத்தினைத் தோலுரிக்கும் கோப்புகளைத் தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. கிடைத்த 1.2 மில்லியன் கோப்புகளில் இவ்வாறு தேறியது சில ஆயிரங்கள் மட்டுமே. அவையனைத்தும் ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. உண்மையில் அந்த ஆவணங்களை உஷார்ப் படுத்திக் கொண்டிருந்த சீனர்கள் " நாங்க திருடிட்டு வரும் போது, அவன் எங்ககிட்ட இருந்து பறிச்சிட்டான்' என்று சொல்ல முடியாமல் கமுக்கமாகிப் போயினர்.

வெறும் நாடகத்தன்மையான, நிருபர்களால் வடிவமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட, ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ கோபப்படுத்துமோ என்றெல்லாம் யோசித்தே எழுதப்பட்ட செய்திகளையே பெரும்பாலும் படித்து வந்த உலகத்துக்கும் சரி, சக ஊடகங்களுக்கும் சரி, விக்கிலீக்ஸ் தளத்தின் அட்டகாசமான ஆரம்ப கால அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்துவிட்டது. சிலர் விக்கிலீக்ஸ் குறித்து நம்புவதா, வேண்டாமா என்றும் குழம்பினார்கள். இதனை முன்கூட்டியே கணித்த ஜூலியனின் ஏற்பாடு தான் முக்கியப் பத்திரிக்கைகளில் வெளியிட வைத்த சாமர்த்தியம். அமெரிக்க அரசாங்கத்தின் "நேர்மையான' போர் தந்திரங்கள், செலவீனங்கள் ஆகியவை குறித்து அனைத்துத் தகவல்களும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப் படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே போட்டுத் தள்ளியதும் அடக்கம். வட அமெரிக்காவில்அரசியல் உஷ்ணம் அதிகமானது.


நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நிலைமை அமெரிக்காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்கக் ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக்கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர்கொண்டதில்லை. 'இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை ' இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது', இல்லை இல்லை 'அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருத்திவிட்டோம், இல்லை இல்லை 'அந்த கனடா வீரர்களை நாங்கள் கொல்லவில்லை, அவர்களாகவே தோட்டாக்களின் மேல் பாய்ந்து உயிரை விட்டு விட்டார்கள்' என்றெல்லாம் உளறிக்கொட்டியது. அப்படி உளறிக் கொட்டினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத் தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா.

ஒருபுறம் ஏகாதிபத்தியங்கள் மூர்க்கங்கொண்டாலும், ஆதரவாளர்களும், பாராட்டுத் தெரிவிப்பவர்களும் எக்கச்சக்கமாகிப் போகினர். ஏகப்பட்ட ஆர்வலர்கள் விக்கிலீக்ஸ் மூலம் தங்களிடம் இருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள, ஜூலியனின் தொழில்நுட்பம் மூலம் தங்கள் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் முன்வந்தார்கள்.

பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ஜூலியனைத் தேடித் தேடி உலகமெங்கும் பயணித்துச் சோர்ந்தன. இவற்றுக்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை, அடுத்தடுத்த வெளியீட்டுத் தொகுப்புகளுக்கான ரகசிய இடத்தில் உழைப்பில் ஈடுபட்டிருந்தார். விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களை அனுப்பு விரும்பும் ஆர்வர்லர்களுக்கென்று சிறப்பு மாற்றங்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Tor மென்பொருள் அனுப்பி வைக்கப்பட்டது (அதற்கான் சுட்டி இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D). தனது ஒவ்வொரு வெளியீடுக்கும் ஜூலியன் சந்தித்த மிரட்டல்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடக வரலாற்றின் தங்கத் தருணங்கள். இவை அனைத்தையும் புறந்தள்ளி ஒரு குற்றச்சாட்டும் ஜூலியனை நோக்கி முன்வைக்கப்பட்டது, அவை அடுத்த பகுதியில்.

ஓவ்வொரு வாரமும் கூட ஒரு பெண்டகன் ஆவணத்தை எங்களால் வெளியிட முடியும் - ஜூலியன் :)


36 comments:

Anonymous said...

Super........
Super,Super......
Super,Super,Super......
Very Very Thanks..............

Thomas Ruban said...

மிகவும் எளிய நடையில் விறுவிறுப்பாக போகிறது பகிர்வுக்கு நன்றி சார்.

Thomas Ruban said...

பழைய விக்கிலீக்ஸ் wikileaks.org என்ற இணையதள முகவரி wikileaks.ch என்னும் புதிய இணையதள முகவரியில் விக்கிலீக்ஸ் இயங்கத்தளம் தொடங்கியுள்ளது.

பொன் மாலை பொழுது said...

இதைவிட சுவாரசியமான, வியப்பூட்டும்,திகைக்க வைக்கும் நிகழ்வுகளில் இதுதான் இறுதியாக இருக்கும் போல இப்போதைக்கு. உங்களின் தமிழ் நடை அழகு. சொல்லும் விதமும் மிக அழகு.
இரண்டாவது பாராவின் இறுதியில் உள்ள அந்த பிழையினை அகற்றிவிடுங்கள்.
கஷ்டமும் என்பது // குஷ்டமும் //என்று டைப் ஆகியுள்ளது.
மற்ற படி தூள் கிளப்புகிறீர்கள்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை மிக அருமை

Thomas Ruban said...

wikileaks.org அமெரிக்காவால் முடக்கப்பட்டதா? அல்லது அதன் நிறுவனர் பாதுகாப்பு காரணங்களால்,
புதிய(wikileaks.ch) இணையதள முகவரிக்கு மாறி உள்ளாரா சார்....

Thomas Ruban said...

// கக்கு - மாணிக்கம் said... இரண்டாவது பாராவின் இறுதியில் உள்ள அந்த பிழையினை அகற்றிவிடுங்கள்.
கஷ்டமும் என்பது // குஷ்டமும் //என்று டைப் ஆகியுள்ளது.//


அது பிழை இல்லை அவருடைய குசும்புத்தனம்....

அன்பரசன் said...

Fantastic...

Thomas Ruban said...

சீன ஹேக்கர்களுக்கே அல்வா கொடுத்த ஜூலியன் பலே கில்லாடி தான்...

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி பாலாஜி :), தாமஸ் :).

அன்புக்கு மிக்க நன்றி மாணிக்கம். அது கவுண்டமணியின் 'ஒரே குஷ்டமப்பா'வை நினைத்து எழுதப்பட்டது, இருந்தாலும் திருத்திவிட்டேன். மிக்க நன்றி :) தொடர்ந்து வாங்க.

நன்றி உலவு.

மொத்த அமெரிக்க அரசாங்கத்துக்கும், ஜூலியனுக்கும் நடக்கும் தொழில்நுட்பப் போர் :D. விக்கிலீக்ஸ் தளத்திற்கு நன்கொடை அளிக்கும் வசதியை paypal நிறுவனமும், தங்களிடம் இருந்த கோப்புகள் வழங்கிகளை amazon நிறுவனமும் முடக்கி விட்டன. அதிகாரம் அண்ட பாதாளம் வரை பாய்ந்து கொண்டிருக்கிறது, தனியொரு மனிதனை எதிர்த்து. @ தாமஸ்.

ஜோதிஜி said...

முதல் பின்னோட்டத்தில் உள்ள வாசகம் சும்மா போற போக்கில் எழுதப்பட்டது அல்ல. நானும் அதே போலத்தான் வரிக்கு வரி படித்து விட்டு கத்த வேண்டும் என்று ஆச்சரியப்படுத்திட்டீங்க. ஆனால்?

தயை கூர்ந்து அந்த வெள்ளைத்தோலை தமிழ்நாட்டுக்கு வர முடியுமா? என்று கேட்டுச் சொல்லுங்கள் இங்கு 1 போட்டு 73 போட்டு அதற்கு பின்னால் உள்ள நீநீநீண்டதாககககககக போட்டுக் கொண்டுருக்கும் சைபர் கணக்குகளை அதற்குப் பின்னால் உள்ள ரகஸ்யங்களையும் இந்த எத்தன் கண்டு பிடித்து விட்டால் பாராட்டலாம். பென்டகன் எல்லாம் சும்மா. எங்களுங்க பெண்ட நிமித்திடுவாங்க.

அது எப்படிங்க மதுரை ப்ளக்ஸ் போர்ட வீக்லி கூட இணைத்து இந்த அளவுக்கு ராவுடி செய்றீங்க.

பாவம் அஞ்சா நெஞ்சன்.

gunamanohar said...

very good article series and mega serial thankyou thankyou

puduvaisiva said...

வழக்கம் போல பதிவு ஜெட் வேகத்தில் போகிறது

அட கஷ்ட காலமே சேக்குவாராவை கூட இவனுங்க விட்டு வைக்கலையா ?

மேலும் சில ப்ளெக்ஸ் போர்டுகள்
1

2

3

Ravichandran Somu said...

Excellent....

சாமக்கோடங்கி said...

//இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D).//

விக்கிலீக்சை முடக்கிட்டாணுக.. ஆனா ஜூலியன் இதை எல்லாம் யோசிக்காம இருந்து இருக்க மாட்டார்.. தல ரமணா ரேஞ்சுல கேளப்புராறு...

அவர் படம் போட்ட பனியன் கிடைச்சா.. போட்டுக்குவேன்..

அகல்விளக்கு said...

தொழில்நுட்ப ஆச்சர்யங்கள்...

சும்மா பின்றீங்க தல....

ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கிக் காத்திருக்கிறேன்...

Thekkikattan|தெகா said...

hot water,

interesting, keep rocking :)

எஸ்.கே said...

பயங்கர சுவாரசியம் திரில்லர் கதைபோல் செல்கிறது!

Philosophy Prabhakaran said...

சுடச்சுட ஆரம்பித்து நான்கு பாகங்கள் வரை போய்விட்டீர்கள...

தமிழ்மணம் TOP 20ல் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

மர்ம நாவல் படிப்பது போல் இருக்கிறது!

துமிழ் said...

soooper writing.wel done

Killivalavan said...

நிறைய புது தகவல்கள்
அடுத்த பாகம் எப்போ?

Ram said...

அருமை நண்பரே.!!!
பகர்வுக்கு நன்றி...
தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/

Anonymous said...

Dear blog friends,

Suduthanni can write storie and poems as well. I have tons of his poems. Pasting two out of the list:p.

துடிக்கும் நெஞ்சம்

உன் மேல் நான் வைத்த
காதல் கண்டு
தென்றல் வந்து உன் ஜன்னல் தட்டும்
அது சொல்லும் சேதி கேட்டு
உன் கூந்தல் தலையாட்டும்

உனக்காக காத்திருந்த நேரத்தில்
என் பார்வை பட்டே தேய்ந்து போன
கடிகார முட்கள் உன் கண்கள் கண்டு
தன் துயரம் சொல்லும்

என் தனிமை தந்த கொடுமையும்
உன் நெருக்கம் தந்த இனிமையும்
என்னில் தந்த மாற்றம் சொல்ல
என் நாட்குறிப்பு உன் கதவைத் தட்டும்.

உன் முத்தம் எனக்குள் தந்த வெட்கம்
சொல்ல என் தலையணை
நாணி உன் முந்தானை இழுக்கும்...

இத்தனை செய்திகள் உனக்களித்தாலும்
உன் கண்கள் பேசும் வார்த்தைகள்
காணாத துயரம் சொல்ல
என் நெஞ்சம் துடிக்கும்...


பிரிவறியாது காதலில்லை..

உன் அருகாமையெனும் பொக்கிஷத்தோடு
கைகோர்த்து நடக்கையில்
கடலும் அலையும் ஈர்க்கவில்லை

உன் பேச்செழுப்பிய இன்னிசையில்
காற்று ஸ்பரிசம் தொட்டு
நலம் விசாரித்தது உரைக்கவில்லை

உன் கண்கள் பாடிய
கவிதைப் பார்வையில்
நிலவு உரைத்தக் கதைகள் கேட்கவில்லை

மெளன இரைச்சலில் கண்கள் நிலைத்து
உரைந்து போன நிமிடங்களில்
காலம் அழைத்தும் காதில் விழவில்லை

இன்று நீயில்லாத தனிமையில்சென்ற போது
அனைத்தும் பரிகசித்தன..
அலை மட்டும் நேசமாய் வருடி
சொல்லிச் சென்றது... "பிரிவறியாது காதலில்லை"

கைகள் எப்போதும் ஏந்தியே இருக்கிறேன்
உன் விரல் கோர்த்தபடி காலத்தின் பயணத்தில்
மீண்டும் அலை ரசிக்க..

Suduthanni, I am really sorry for doing this to you:p I do not want people to think you can only write IT stuff!

Santhosh said...

அருமையான ஒரு தொடர் நண்பரே.. பட்டைய கிளப்புங்க...

http://thavaru.blogspot.com/ said...

சுடுதண்ணி நீங்க இப்ப சுடுதண்ணி தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விறுவிறுப்பா இருக்கு .. எப்படியா தடுக்க முயல்கிறாங்களே தவிர சரி செய்ய முயலமாட்டாங்க :(

Unknown said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். உங்கள் எழுத்தின் நடை என்னை கவர்ந்தது.உ.ம்( டவுசர் கிழிந்தது, தைக்க,நெளிந்த சொம்பு...)

-அன்புடன் பல்லவன்.

கோவை செய்திகள் said...

திரு.சுடுதண்ணி அவர்களுக்கு, தமிழ் மீடியா வில் செய்திகளை பார்த்தேன். அது தங்களுடைய இணையத்தில் இருந்து எடுத்த தகவல் என்று தெரிந்தது கொண்டேன். அந்த செய்திகளை எமது தளத்தில் வெளியிட்டுள்ளோம் (சிறு திருதங்களோடு) தங்களின் வலைப்பூவின் முகவரியோடு. தங்களின் அனுமதி இன்றி வெளியிட்டுவிட்டோம். அதற்காக வருந்துகிறோம். தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிருந்தால் உடன் நீக்கி விடுகிறோம். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

சி.பி.செந்தில்குமார் said...

இன்று நடந்த ஈரோடு வலைப்பதிவாளர் மீட்டிங்கில் நண்பர் நண்ண்டு நொரண்டும் சங்கவியும் உங்கலைப்பற்றி சொன்னார்கள்,வந்தேன் அருமையான பதிவு,புலனாய்வு இதழ்கலான ஜூ வி,நக்கீரன்க்கு சவால் விடும் நடையழகு

சுடுதண்ணி said...

அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி, அதற்கு இந்தியாவிற்கு வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. உலகின் எந்த மூலையிலிருந்து செய்யலாம். உங்கள் வேண்டுகோள் அப்படியே விக்கிலீக்ஸ் தளத்திடம் சேர்ப்பிக்கப்படும் ;)

நன்றி @ மனோகர்.

மிக்க நன்றி சிவா :). உங்கள் ப்ளெக்ஸ் போர்டுகள் படைப்பின் உச்சம் :D.

நன்றி ரவிச்சந்திரன், சாமக்கோடங்கி (சீக்கிரமே பனியன் கிடைக்க ப்ராப்திரஸ்து).

மிக்க நன்றி நண்பா @ அகல்விளக்கு.

மிக்க நன்றி தெகா (பெயர் அருமை), எஸ்.கே.

வாழ்த்துக்களுக்கு நன்றி பிரபாகரன்.

மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா, துமிழ், கிள்ளிவளவன், கூர்மதியன்.

கவிதைகள் அருமை @ அனானி :o. (கடவுச்சொல் மாற்றப்பட்டது ;))

வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சந்தோஷ், முத்துலெட்சுமி (கசப்பான நிதர்சனம்), பல்லவன்.

உங்கள் தமிழ்ச் சேவை வருத்தங்களின்றி தொடரட்டும். என்னோடு போட்டி போட்டுக் கொண்டு வெள்யிடாமல், கொஞ்சம் இடைவெளி விட்டு வெளியிடவும். @ கோவைச் செய்திகள்.

மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஊக்கத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி சி.பி. செந்தில்குமார். ஈரோட்டு நண்பர்களின் அன்புக்கும் நன்றி.கள்.

Paleo God said...

தொடருங்கள்..:))

MANO நாஞ்சில் மனோ said...

//Super........
Super,Super......
Super,Super,Super......
Very Very Thanks.............. //
vadai'yum ungalukku'thaan....

DR said...

ஐயோ சாமி முடியலை... எவ்வளவு விஷயம்... இதை எல்லாம் படிச்சு எங்களுக்காக உக்காந்து எழுதுற உங்க நல்ல மனசை கண்டிப்பா பாராட்டனும் நண்பரே... தொடர்ந்து எழுதுங்க... எங்களுடைய முழு ஆதரவும் தங்களுக்கு உண்டு...

Unknown said...

அருமை

பகிர்வுக்கு நன்றி

surimountain said...

அருமை! பாராட்டுக்கள்!! - சூரி