Wednesday, November 24, 2010

Virtual Private Network : VPN என்றால் என்ன? - 1


' Virtual Private Network என்பது எல்லாருக்கும் கேட்கிற மாதிரி ரகசியமாப் பேசுறது' என்று சொன்னால் கமலஹாசன் பேட்டி போல் ஆகிவிடும் என்பதால், சற்றே எளிமையாக, புரியும் படியாக VPN குறித்து இப்பதிவில் காண்போம்.

VPN சாமானியர்களுக்கு இன்னும் வசப்படவில்லையெனினும், நாளுக்கு நாள் ஊழல் தொகை பெருக்கத்துக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இருக்கும் போட்டியை வைத்துப் பார்க்கும் போது விரைவில் ரகசியமாய் டாஸ்மாக்கில் யாருக்கும் தெரியாமல் VPN மூலம் சரக்கு கொள்முதல் செய்து கொள்ளும் வசதி இலவசம் என்று தேர்தல் அறிக்கை வர வாய்ப்பிருக்கும் காரணத்தால், VPN என்று கேட்டவுடன் ஆச்சர்யப்பட்டு விடாமல் எகிறி அடிக்கும் வசதியை அளிக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையே இப்பதிவு.


VPN பற்றி விளக்கிச் சொல்ல உதாரணத்திற்கு ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் புதுமணத்தம்பதியர் எல்லாருக்கும் நடுவில் சங்கேதமாய் சில வார்த்தைகளில் பேசிக் கொள்வது தான் இத்தொழில்நுட்பத்தின் அடிப்படை விஞ்ஞானம். பொதுவில் கேட்பதற்கு சாதரணமாய்ப் பேசிக் கொள்வது போல் இருந்தாலும், பேசுபவருக்கும் - கேட்பவருக்கும் இடையில் அதற்கான புரிதலில் மின்சாரம் பொறி பறக்கும். இந்த விஷயத்தைத் தான், நம் தமில் பேசும் தொலைக்காட்சிகளில் ஏதாவது சில மொக்கைப் பாடல்களைத் திரும்பத் திரும்ப ஓட விட்டு, திரைக்கு அடியில் நேயர்களின் குறுந்தகவல்களை ஓட விடும் அளவுக்கு வளர்த்திருக்கிறார்கள். Hi kutti, I luv u, Good night - Neo" என்று குறுந்தகவல் ஒடினாலும் யார்,யாருக்கு கொடுக்கும் தகவல் என்பது அந்த குட்டிக்கும், நியொவுக்குமே வெளிச்சம். இப்படி 152 நாடுகளில் பார்க்கப்படும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் முழுமையான ரகசியாமாய் நம் கண் முன்னே எப்படி தகவல்கள் பறக்கின்றனவோ அதே போல் உலகமே கூடிக் கும்மியடிக்கும் இணையத்தினைப் பயன்படுத்தி ரகசியமாய், பிரத்யேகமாய்த் தொடர்பு கொள்வதே VPN தொழில்நுட்பம்.


வலையமைப்பில் தொடர்பு கொள்வதற்கு பல நூறு வரைமுறைகள் உள்ளன (Protocols), அவை தகவல் தொடர்புமுறைகளை நெறிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்பினையும் வழங்குகின்றன. அதுபோல் VPN செயல்பாட்டிற்கென பல பிரத்யேக வழிமுறைகள் உள்ளன, அவை மூலம் தகவல் அனுப்புபவரிடத்திலும், பெறுபவரிடத்திலும் தகவல்கள் அவர்களுக்கும் புரியும் வண்ணம் மாற்றி வழங்கப்படும். இவற்றுக்கென சிறப்பு உபகரணங்களும் உள்ளன.


அதெல்லாம் சரி, இ்தன் மூலம் யாருக்கு என்ன பயன்? எவருக்கு உதவுகிறது என்று போர்க்குரல் எழுப்பும் அன்பர்கள் சிறப்பானக் கைதட்டல்களை பெற்றுக் கொண்டு தொடர்ந்து படிக்கவும். இன்றைய பொருளாதார தாராளமயமாக்கலில் மொத்த பூமிப் பந்தும், கூகுளுக்குள் அட்ங்கிப் போனது போல், எல்லைகளின்றி தொழில் வளர்க்கும் பெரும் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்கள் உலகின் எந்த மூலையாக இருந்தாலும், உடனுக்குடன் ரகசியமாக தங்கள் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வதற்கும், மென்பொருள் வல்லுநர்கள் வீட்டிலிருந்த படியே வெட்டி முறிப்பதற்கும், மிகச்சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் கணக்குப் பறிமாற்றத்திற்கும் கூட VPN தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றன.

VPN வருவதற்கு முன்னர் மேற்கூறியவையெல்லாம் நடக்காமல் இருக்கவில்லை. பிரத்யேக தொலைதொடர்பு முறையில் (leased line) நடந்தன, இருந்தாலும் அதற்கான செலவு மிக மிக அதிகம். இன்று VPN மூலம் சில்லறைச் செலவில் ஆலிவர் ரோட்டில் இருந்து கொண்டே மத்திய கிழக்கில் உள்ள etisalat நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய முடியும் :D, ரகசியமாக, பாதுகாப்பாக.

சாதாரணமாக இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் போது சங்கேதக் குறிப்பு முறையில் (encryption) பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ள முடியும், இருந்தாலும் VPN எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது, இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, VPN தொழில் வாய்ப்புகள், ஆகியவை குறித்து அடுத்த பகுதியில் தொடரும்.

22 comments:

puduvaisiva said...

வணக்கம் சுடுதண்ணி அண்ணே நலமா?
VPN பதிவுக்கு நன்றி
எவ்வளவு நாளாச்சு புதிய பதிவு போட்டு
இனி தொடர் பல பதிவுகள் எழுதவும்.

சுடுதண்ணி said...

வணக்கம் சிவா தம்பி :). எப்படி இருக்கீங்க. நான் நலம். நிச்சயம் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். ஊக்கத்துக்கு மிக்க நன்றி :)

Unknown said...

நல்லா எழுதறீங்க. இன்னும் எழுதுங்கள். //மென்பொருள் வல்லுநர்கள் வீட்டிலிருந்த படியே வெட்டி முறிப்பதற்கும்,// குறிப்பா, பொட்டி தட்டும் நமக்குச் சோறு போடும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை இன்னும் விவரித்திருக்கலாம்.

வாழ்த்துகள்!

(மைக்ரோவேவ் பற்றின்னா கூட சரி தண்ணி அதுல தான் சுட வச்சீங்க என்று கருதலாம், VPNல எப்படிங்க சுடுதண்ணி காய்ச்சிறது? ஹிஹி எஸ்.எஸ்.எல். VPN சுடுதண்ணியோ!)

bandhu said...

ரொம்ப நல்லா எழுதறீங்க. புதிசாலித்தனமா oliver road மற்றும் etisalat இடையில் இருக்கும் லிங்க் கோர்த்து விட்டது சூப்பர்!

அன்பரசன் said...

வித்தியாசமான தகவல்.
எனக்கு புதுசு.

சுடுதண்ணி said...

ரொம்ப நன்றி பிக்குணி.மேலதிக விவரங்கள் அடுத்த பகுதியில் விரிவாக அலசப்படும் :). அந்தளவுக்கு சுடுதண்ணி HIFI கிடையாது, விறகடுப்புல காய்ச்சினது தான் :D.

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி bandhu :).

நன்றி அன்பரசன் தொடர்ந்து வாங்க.

ஜோதிஜி said...

மகா ஜனங்களே, அறிவு சார் பெருமக்களே எங்க தங்கம் களத்தில் மீண்டும் இறங்கி விட்டார். மேலே உள்ள புகைப்படத்தின் ஆளுமையைப் போல இந்த வலையுலகத்தை ஆள வந்த அரசனுக்கு என் வணக்கம்.

இங்கே மழை கொட்டுது. கூடவே கலாச்சாரம் என்ற சளித் தொந்தரவும் படாய் படுத்து படுத்து படுத்து......

எண்ணங்கள் 13189034291840215795 said...

Well written.. Are you in networking?.

I worked in this...

Thanks for sharing..

Best wishes..

Anonymous said...

Can u move your non tech articles to some other blog since you are listed in top ten tech articles.

guru said...

ரொம்ப நாட்கள் கழித்து, உங்களது எழுத்துக்களை படிப்பதில் மிகவும் மகிழ்ச்சி

dsfs said...

thanks for sharing. goog post. keep it up

ராஜ நடராஜன் said...

ஸ்டெடியாகிட்டீங்க போல இருக்குது!வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

எத்தன நாள் ஆச்சு நண்பா...

தயவு செய்து தொடருங்கள்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வழக்கம்போல எனக்கும் கூட புரியராப்ப்ல இருக்கு கட்டுரை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்பநாளா சுடவைக்கலையே.. தண்ணிய.. :)

சுடுதண்ணி said...

நடத்துங்க.. நடத்துங்க :D @ ஜோதிஜி

ஊக்கத்துக்கு மிக்க நன்றி பயணமும் எண்ணங்களும். உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஆம் ;).


கண்டிப்பாக ஆவண செய்கிறேன் @ சாய்தாசன். வருகைக்கு நன்றி :).


ஊக்கத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி குரு, பொன்மலர் :).

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் :). மிக்க நன்றி @ ராஜராஜன்.


185 நாட்கள் @ அகல்விளக்கு :D. நிச்சயம் முயற்சிக்கிறேன், அன்புக்கு நன்றி நண்பா.

உங்கள் அன்புக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி. புதிய வானம், புதிய பூமி.. அதன் சுட வைக்க கொஞ்சம் தாமதம். தொடர்ந்து வாங்க :).

laughingman said...

anna konjam NAT Network Address Translation pathi solunga

historypak said...

Thanks for taking the time to discuss this, I feel strongly about it and love learning more on this topic. If possible, as you gain expertise, would you mind updating your blog with more information? It is extremely helpful for me. pure vpn

rampage said...

در صورت نیاز به خدمات طراحی لوگو در تیم خلاق ریوال آنلاین بهترین گزینه ی شما است.

RKNSEO said...

لوگو با بیان خلاقانه مفهوم برند، تعامل مشتری را فراهم می کند.

ایجاد لوگوی خلاقانه با پنهان کردن مفهوم برند در لایه‌های طراحی لوگو و رنگ‌ها، برند شما را بدون زحمت و به سادگی وادار می‌کند، رهبری را از دیگران ربوده و در حالی که در ناخودآگاه مخاطب قرار می‌گیرد، سود را تضمین می‌کند.

rampage said...

مقاله شما درباره VPN بسیار آموزنده بود! ما در "کشتیرانی دروازه طلایی دریای نور" خدمات حمل‌ونقل تجهیزات فناوری اطلاعات از هر نقطه دنیا به ایران و بالعکس را با امنیت کامل ارائه می‌دهیم. برای اطلاعات بیشتر: daryaienoor.com