Wednesday, December 15, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 10

'நான்கு மாதங்களுக்கு முன்பு' என்று திரைப்படப் பாணியில் அறிவிப்புப் போட்டால் அடுத்த காட்சியில் ஸ்விடன் விமான நிலையத்தில் ஜூலியன் இறங்கி வரும் காட்சியினைக் கண்டு இன்புறலாம். சுமார் ஒரு வார காலம் தங்க வேண்டிய பயணம், பயணத்தின் நோக்கத்தினை "போரும், ஊடகங்களின் பங்கும்" என்ற தலைப்பில் இணையத்தின் போர்வாள் ஜூலியன் சிறப்புரையாற்றுகிறார், அலைகடலென வாரீர் என்று ஸ்விடன் முழுக்க விளம்பரப்படுத்தியாகி விட்டது. இப்பயணத்திற்காக ஜூலியனிடம் ஸ்விடனைச் சேர்ந்த ஒரு தேவலாயக் குழுமத்தின் ( Sweden association of Christian social democrats) செயலாளரும், ஊடகத் தொடர்பாளாருமான அன்னா (anna ardin, age: "31" ) தொடர்பு கொண்ட பொழுது ஜூலியனின் ஒரே நிபந்தனை, தனக்கு தங்குவதற்கு ரகசியமான இடம் வேண்டும் என்பது தான். தொடர்ச்சியாக அடுத்தடுத்து collateral murder காணொளி மற்றும் ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியான நேரமது என்பதால் ஜூலியனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

அந்நேரத்தில் ஜூலியன் என்ன கேட்டாலும் செய்து கொடுத்து தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதற்கு பலரும் வரிசை கட்டி நிற்கும் காலமது என்பதால், தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் எனவும், நிகழ்ச்சி நாட்களில் தனக்கு வேறொரு முக்கிய வேலை காரணமாக, தான் வெளியூர் சென்றுவிட்டு, நிகழ்ச்சி நடக்கும் தினத்தன்றே திரும்புவதால் தனக்கு எந்த வித தொந்திரவும் இல்லை என்றும் தயங்காமல் சொல்ல, ஜூலியனும் சம்மதித்தார். ஸ்விடன் சென்றதும் அனைத்தும் சொன்னபடி நடக்க நிதானமாக இருந்த ஜூலியன் எனும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், எதிர்பாராதவிதமாக (?) சென்ற வேலை முடிந்த காரணத்தால் நிகழ்ச்சிக்கு முதல் நாளே திரும்பி வந்த அன்னாவைக் கண்டதும் கரையைக் கடந்தது :). இருவரும் ஒரே வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை குறித்து சிறு விவாதத்திற்குப் பிறகு இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.


அன்னா

இன்றையத் தேதிக்கு உலகிமே அண்ணாந்து பாக்கும் ஒரு நபர், இணையத்தின் புரட்சி நாயகன், அட்டகாசமான தோற்றமும், தொழிநுட்ப அறிவும் கொண்ட ஒருவருடன் தனியே தங்கும் வாய்ப்பு. செல்லுமிடமெல்லாம் ஜூலியனின் வலையில் சிக்குவதற்காக பெண்கள் தாங்களே கையில் வலையுடன் காத்திருந்த தருணத்தில், ஜூலியன் அன்னாவை நோக்க, அன்னா ஜூலியனை நோக்க..மேற்கத்தியக் கலாச்சாரத்தின் சம்பிரதாய வைபவங்கள் இருமன விருப்பத்துடன் இனிதே அரங்கேறின. இடையில் ஜூலியன் பயன்படுத்திய ஆணுறை கிழிந்து போனதும், சற்றேத் தயங்கிய அன்னா பின் உணர்ச்சி வேகத்தில் தொடர்ந்ததும் சரித்திர நிகழ்வுகள். மறுநாள் ஜூலியன் உரையாற்றும் நிகழ்ச்சி நன்றாகவே நடந்தது. நிகழ்ச்சியின் போது எல்லாரும் ஜூலியனைப் பார்க்க, ஜூலியன் மட்டும் முதல் வரிசையில் இருந்த ஒரு பிங்க் ஸ்வெட்டரையே அவ்வப்போது கவனிக்க, அங்கு ஒரு பூந்தோட்டமே பூத்துக்குலுங்கியது. பிங்க் ஸ்வெட்டரின் பெயர் சோபியா, வயது 26. நல்ல நேரத்திலும் :D ஒரு கெட்ட நேரமாக, ஒரே நேரத்தில் பல மைதானத்தில் விளையாட ஆசைப்பட்ட ஜூலியன், நிகழ்ச்சிக்குப் பின் நடந்த விருந்தின் போது சோபியாவின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டார்.


சோபியா

அன்றிரவு ஜூலியனுக்கு தனது வீட்டில் சிறப்பு விருந்தளித்த அன்னா, அதனை மகிழ்ச்சியோடு ட்விட்டரில் "உலகின் மிகச்சிறந்த, புத்திசாலியோடு இருக்கிறேன்" என்று பதிவு செய்தார். விருந்தோடு விருந்தாக சோபியாவிடம் தொலைபேசிய ஜூலியன், மறுநாள் அன்னாவிற்கு போக்குக் காட்டி விட்டு, மல்லிகைப்பூ, அல்வா சகிதம் சோபியாவை சந்திக்கச் சென்றார். அங்கும் இரவும் மறுநாள் காலையும் உணவோடு, உறவும் பரிமாறப்பட்டது. இரவுச் சாப்பாட்டுக்கு ஆணுறை பயன்படுத்திய ஜூலியன், காலை சிற்றுண்டிக்கு எதுவும் பயன்படுத்தவில்லை. முதலில் தயங்கிய சோபியா, பின்னர் தடுக்கவில்லை. அன்னாவின் வீட்டிற்குத் திரும்பிய ஜூலியன், பின்னர் ஸ்விடனை விட்டு வெளியேறி, விக்கிலீக்ஸ் தளத்தின் அடுத்த வெளியீட்டுக்கான (cable gates) வேலைகளில் ஆழ்ந்தார். இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்தது. சோபியாவிற்கு மட்டும் ஜூலியனுடனான தனது காலைச் சிற்றுண்டி குறித்து மனக்கவலை(STD) இருந்து கொண்டே இருந்தது, அன்னாவுடன் தானே தங்கியிருந்தார் ஜூலியன், அன்னாவிடம் இது குறித்து கேட்டுப் பார்ப்போம் என்று பேச்சு வாக்கில் கேட்கப் போக, இங்கே கிழிந்து போனது தெரியவர, அதுவரை தனக்கு மட்டும் தான் கிடைத்தது என்ற கர்வம் கலகலக்க, கலவரம் பிறந்தது. ஸ்விடன் நாட்டு சட்டத்தின் படி அன்னா வழக்குத் தொடர்ந்தார், முதலில் விசாரித்த நீதிபதி வழக்கினைத் தள்ளுபடி செய்ய, பின்னர் மேல்முறையீட்டின் படி வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணைக்கும், ஜூலியனின் கைதுக்கும் உத்தரவிடப்பட்டது. இது குறித்து ஊடகங்களில் தகவல் வந்த தருணத்தில், ஒட்டு மொத்த இணைய உலகமும் அந்த பெண்களின் புகைப்படங்களைத் தேடித் தேடி ஓய்ந்தது உபதகவல் :).

இனி நடந்தவைகளின் சிக்கலான பக்கங்களைப் பார்ப்போம். ஸ்விடன் பெண்ணுரிமைக்குக் கட்டற்ற சுதந்திரமும், செல்லமும் கொடுக்கும் இடமென்பதால் இயற்கையாகவே 'பம்மல் K. சம்பந்தம்' சிம்ரன்கள் நிறைந்த நாடு. ஆணுறை இல்லாமல் உறவு கொண்டாலோ அல்லது உணர்ச்சி வேகத்தில் தடுக்க முடியாமல் போனாலோ, அடுத்த வாரம் ஆற,அமர வழக்குத் தொடுக்கலாம் (ஸ்விடன் செல்லும் அன்பர்கள், கவனம் :D ). மேற்சொன்ன இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலுமே தங்கள் சம்மதத்துடன் தான் அனைத்துமே நடந்த்துள்ளதென்பதை இருதரப்பினருமே மறுக்கவில்லை. ஆணுறை உபயோகிக்காமல் சோபியாவிடமும், கிழிந்து போனதாக அன்னாவிடமும் நிகழ்ந்தது இரண்டும், ஜூலியன் வேண்டுமென்றே செய்தது என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இல்லை அதெல்லாம் எதேச்சையாக நிகழ்ந்தது, இந்த வழக்கே அரசியல் பின்ணணி வாய்ந்தது என்பது ஜூலியனின் வாதம்.


இந்த வழக்குப் பிரச்சினை உச்சத்திற்கு வருவதற்குள் 'Cable gates' எனப்படும் உலகெங்கிலுமுள்ள அமெரிக்காவின் தூதரகங்களின் ஆவணங்கள் இணைய வரலாற்றில் முதல் முறையாக அம்பலப்படுத்தப்பட்டது குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். அனைத்து ஆவணங்களும் இரண்டு விஷயங்களை அம்பலப்படுத்தி அமெரிக்காவை நிலைகுலையச் செய்தது. ஒன்று அமெரிக்காவின் அனைத்து தூதரகங்களும் தாங்கள் செயல்படும் நாடுகளை வேவு பார்க்கின்றன. இரண்டு அந்தந்த நாட்டுத் தலைவர்களை முள்ளம்பன்னித் தலையா, டப்பாத் தலையா என்று கவுண்டமணியே கூசும் அளவுக்கு தனிப்பட்ட முறையில் விளித்திருந்தது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கெதிரான அச்சுறுத்தல், உலக நாடுகளின் ஒற்றுமையின் மீதானத் தாக்குதல் என்றெல்லாம் ஹிலாரி ஊடகங்களில் ஒருபுறம் கபடியாடிக் கொண்டே, மறுபுறம் ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து 'அதெல்லாம் டூப்ளிக்கேட்டு.. ஏமாத்துறான்..நம்பாதீங்க" என்றெல்லாம் கெஞ்சிக் கொண்டிருந்தார். முதல் முறையாக வரலாற்றில் அமெரிக்காவை சகநாடுகளிடம் சிரம் தாழ்ந்து, பணிந்து பேச வைத்த ஜூலியனை, ஸ்விடனின் சிற்றின்ப வழக்கு விவகாரங்கள் துரத்த, விக்கிலீக்ஸ் குழுவின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப் படி ஜூலியன் இங்கிலாந்து பறந்தார். விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க தனது சகல அதிகாரங்களயும் பிர்யோகிக்க ஆரம்பித்திருந்தது அமெரிக்கா.


அமெரிக்காவின் முயற்சிகளை மீறி விக்கிலீக்ஸ் தளம் எவ்வாறு தொடர்ந்து செயல்படுகிறது, ஜூலியன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்ணணி என்ன? இது சம்பந்தப்பட்ட பெண்களின் குற்றச்சாட்டா அல்லது அமெரிக்காவின் அரசியல் சதியா?, அதற்கான தொடர்புகள் குறித்த அலசல்கள், இங்கிலாந்து சென்ற பின் ஜூலியனுக்கு நடந்தவை ஆகியவை குறித்து அடுத்த பகுதியில்.


"உண்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் உலகெங்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது மட்டுமே விக்கிலீக்ஸ் தளத்தின் குறிக்கோள்" -ஜூலியன்.

32 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

தொடருங்கள், தொடர்கிறேன்.

sathishsangkavi.blogspot.com said...

//"உண்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் உலகெங்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது மட்டுமே விக்கிலீக்ஸ் தளத்தின் குறிக்கோள்"//

உண்மைகள் என்றும் மறையாது.. இவர்களைப் போல் ஒருவரால் நிந்நயம் வெளி வரும்...

Unknown said...

தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

உமர் | Umar said...

அனுபவம் - இந்த லேபிளுக்கும்,
(ஸ்விடன் செல்லும் அன்பர்கள், கவனம் :D ). - இந்த எச்சரிக்கைக்கும் ஏதும் தொடர்பு இல்லையே?

:-)

சுடுதண்ணி said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா :).

உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் சங்கவி :).

நன்றி கூட்டாளி.

இல்லவே இல்லையே ;) :)) @ கும்மி

puduvaisiva said...

நன்றி சுடுதண்ணி அண்ணே

Thomas Ruban said...

பகிர்வுக்கு நன்றி சார். தொடருங்கள், தொடர்கிறோம்.

heartsnatcher said...

thanks carry on my best wishes

ஜோதிஜி said...

உண்மைகள் தாமதமாக வெளிவரும். ஆனால் கிழிந்த ஆணுறைகளுக்கு இத்தனை விளம்பரம் கிடைக்கும் என்று சம்மந்தப்பட்டவர்களே நினைத்துப் பார்த்து இருப்பார்களா?????????????????????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புலிகுட்டி said...

எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது வீக்னஸ் பாயிண்ட் இருப்பது உண்மைதானோ?.

Santhosh said...

தொடர் விறுவிறுப்பா போவுது தொடருங்கள்..

பூபேஷ் பாலன் said...

செம!

குசும்பன் said...

//இடையில் ஜூலியன் பயன்படுத்திய ஆணுறை கிழிந்து போனதும்,//

புயல் கொஞ்சம் வேகமா கரைகடந்து அடிச்சிட்டோ:))

தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு அருமையாக எழுதுவருகிறீர்கள்.

குசும்பன் said...

//அன்னாவிடம் இது குறித்து கேட்டுப் பார்ப்போம் என்று பேச்சு வாக்கில் கேட்கப் போக, இங்கே கிழிந்து போனது தெரியவர,//

இதெல்லாமா கேட்பாய்ங்க?:))

நல்லா கேட்கிறாய்ங்கய்யா டீடெயிலு....

குசும்பன் said...

//ஸ்விடன் நாட்டு சட்டத்தின் படி வழக்குத் தொடரப்ப்ட்டது, முதலில் விசாரித்த நீதிபதி வழக்கினைத் தள்ளுபடி செய்ய, பின்னர் மேல்முறையீட்டின் படி //

வழக்கை தொடர்ந்தது யார்?

குசும்பன் said...

//ஜூலியன் வேண்டுமென்றே செய்தது என்பதே பெண்களின் குற்றச்சாட்டு.//

நம்ம ஊரில் சொல்வது மாதிரி ஊசி நுழைய இடம் கொடுத்தால் தானே நூல் நுழையமுடியும் என்று எல்லாம் வாதாட முடியாதா?:))

movithan said...

குசும்பனின் கருத்திற்கு ஒரு ஆமா ;-)
சுடுதண்ணி சார்,சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க.வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

///ஜூலியன் பயன்படுத்திய ஆணுறை கிழிந்து போனதும், சற்றேத் தயங்கிய அன்னா பின் உணர்ச்சி வேகத்தில் தொடர்ந்ததும் சரித்திர நிகழ்வுகள். ///

//நிகழ்ச்சியின் போது எல்லாரும் ஜூலியனைப் பார்க்க, ஜூலியன் மட்டும் முதல் வரிசையில் இருந்த ஒரு பிங்க் ஸ்வெட்டரையே அவ்வப்போது கவனிக்க, அங்கு ஒரு பூந்தோட்டமே பூத்துக்குலுங்கியது.//

//அன்னாவிடம் இது குறித்து கேட்டுப் பார்ப்போம் என்று பேச்சு வாக்கில் கேட்கப் போக, இங்கே கிழிந்து போனது தெரியவர, ///


யப்பா.. சாமி....

செம டீடெயிலுப்பா....

தொடருங்க தல....

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி :).

வழக்குத் தொடர்ந்தது அன்னா :) @ குசும்பன். பதிவில் திருத்தியிருக்கிறேன். அலசி, ஆராய்ந்து, அனுபவித்துப் படித்து :D, சுட்டிக்காட்டியதற்கு மிக்க் நன்றி :).

சுடுதண்ணி said...

மிக்க் நன்றி @ சிவா, தாமஸ், ஜோதிஜி, அகல்விளக்கு, மால்குடி, புலிக்குட்டி, பாலன், heartsnatcher.. தொடர்ந்து வாங்க.


//நம்ம ஊரில் சொல்வது மாதிரி ஊசி நுழைய இடம் கொடுத்தால் தானே நூல் நுழையமுடியும் என்று எல்லாம் வாதாட முடியாதா?:))//

ஸ்விடன்ல அது ரொம்ப குஷ்டம் :D...

சாமக்கோடங்கி said...

//இரண்டு அந்தந்த நாட்டுத் தலைவர்களை முள்ளம்பன்னித் தலையா, டப்பாத் தலையா என்று கவுண்டமணியே கூசும் அளவுக்கு தனிப்பட்ட முறையில் விளித்திருந்தது.//

கவுண்டமணியே கூசுராருன்னா எவ்வளவு கெட்டவார்த்தையாய் இருக்கணும்.. நம்ம மன்மோகன் சிங்கையும், வாஜ்பாயையும், அப்புறம் நரசிம்ம ராவையும் எப்படி வருணித்து இருப்பாங்களோ...

Myooou Cyber Solutions said...

அண்ணா உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாகவும்,சிறந்த நடையிலும் உள்ளது.எனது வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

அசத்தல் அண்ணா. (டெய்லி இதையே சொல்ல போரடிக்குது. ஆனா அது தானே உண்மை)

ரோஸ்விக் said...

//அன்னாவிடம் இது குறித்து கேட்டுப் பார்ப்போம் என்று பேச்சு வாக்கில் கேட்கப் போக, இங்கே கிழிந்து போனது தெரியவர, ///

இங்கே "கிழிந்து போனது" - ரொம்ப ரசிச்சேன் உங்களின் குசும்பை

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஜூலியன் அசாஞ்சே செய்தது கற்பழிப்பு குற்றம் அல்ல. விபச்சாரம் என்ற குற்றம்.

அந்நாட்டில் விபச்சாரம் அனுமதிக்கப்பட்டதுதான். அதனால் அந்நாட்டு 'பெட்டிக்கடை' சட்டப்படி அசாஞ்சே நிரபராதி.

பெண்கள் விஷயத்தில் பொதுவாய் எல்லா நாட்டு சட்டங்களும் குருட்டுத்தனமாய் கேவலாமாய்த்தான் உள்ளன.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

கடந்த ஒன்பது பதிவில் ஹீரோவாக இருந்தவர் இந்த பதிவில் ஸீரோவாகி விட்டாரே...!

//"உண்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் உலகெங்கும் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது மட்டுமே விக்கிலீக்ஸ் தளத்தின் குறிக்கோள்" -ஜூலியன்.//---இவர்விஷயத்தில் இது மற்றவர்களின் குறிக்கோள்.

guru said...

இங்கதான் அசாங்கே கொஞ்சம் சறுக்கிட்டார்...

iniyavan said...

அருமையா எழுதறீங்க.

உங்களுக்கு எப்படி இவ்வளவு விசயங்கள் தெரிய வந்தது?

DR said...

தொடந்து எழுதுங்கள். பதிவு மிக சுவாரஸ்யமாகவும் நக்கலாகவும் செல்கின்றது...

http://thavaru.blogspot.com/ said...

ம்ம்ம்...சொல்லுங்க சொல்லுங்க அடுத்தது என்ன?

Ashok D said...

:)

surimountain said...

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுகிறீர்கள். நன்றி - சூரி