Thursday, December 9, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 8


அமெரிக்க ராணுவத்தின் பலமே வான்படை தான். தரை வழித் தாக்குதலில் பலத்த அடிவாங்கிய அனுபவம் அமெரிக்காவிற்கு வரலாற்றில் பல இடங்களில் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றதால் தான் இன்றும் உலகின் எந்தப் பகுதிக்கு உரண்டை இழுக்கப் போனாலும் தரை வழித் தாக்குதலில் மிகப் பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் வம்படியாக இழுத்துக் கொண்டு போவது தொடர்கிறது. இப்படி உலகின் பலம் வாய்ந்த வான்படையின் முக்கிய ஆட்டக்காரர் தான் அபெச்சி (apache) எனப்படும் கனரக ஆயுதங்கள் பொருத்தப் பட்ட உலங்கு ஊர்தி (helicopter). ஈராக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் அமெரிக்க வான்படையினர், அபெச்சி ஒன்றினில் நகர்வலம் செல்லும் பொழுது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒன்று குறித்த காணொளி வெளியீடு தான் ஜூலியனின் ஐஸ்லாந்து விஜயத்தின் முக்கிய நோக்கம்.


விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் அனைத்து ஜூலியனால் ஹேக் செய்தே வெளியிடப்படுகின்றன,சி.ஐ.ஏவின் கையாள், விக்கி என்பதே ஒரு மோசடி போன்ற பல மாங்காய்களுக்கு இந்த ஒரு வெளியீடு மூலம் ஒரு சேர குறி வைத்திருந்தார் ஜூலியன். தன் நியூயார்க்கர் பத்திரிக்கை நண்பருடன் ஐஸ்லாந்தில் வந்திறங்கியதும் ஜூலியன் செய்த முதல் வேலை 'நாங்கள் ஐஸ்லாந்து போலீஸ் மற்றும் சி.ஐ.ஏ வின் கூட்டுக் கண்காணிப்பில் இருக்கிறோம்" என்று டிவிட்டியது தான். ஜூலியன் ஏதோ விபரீதத்திற்குத் திட்டம் போடுவதை ஒருவாறாக அமெரிக்கா மோப்பம் பிடித்திருந்தாலும், இம்முறை பலியாடு யாரென்பதை அவர்களால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமலே போனது ஜூலியனின் தொழிநுட்பத்திற்குக் கிடைத்த வெற்றி. ஐஸ்லாந்தின் ஆளரவம் அதிகமில்லா ஒரு வீடு "எரிமலை குறித்து எழுத வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்காக" என்று வாடகைக்கு எடுக்கப்பட்டது.


அடுத்த சிலமணி நேரத்தில் விக்கிலீக்ஸ் தளத்தின் ஐஸ்லாந்து கிளைக் கழகக் கண்மணிகள் புடை சூழ ஆறு மடிக்கணினிகள் வலையமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு போர்க் கட்டுப்பாடு அறை போல காட்சியளித்த அந்த வீட்டில், ஜூலியனின் தலைமையில் வேலை ஆரம்பித்தது. அறையில் குளிர்சாதனப் பெட்டி முழுவதும் உணவுப்பொருட்கள் நிரப்பபட்டிருந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கிருந்த யாருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை. எப்பொழுதாவது கேட்கப்படும் ஒரு சிலக் கேள்விகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலியன். அவர்கள் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு காணொளிக் கோப்பு. அதன் உண்மைத் தன்மை முதலில் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டு, அதனை அனுப்பியவர் குறித்த பின்புலங்கள் விசாரித்த பின் திருப்தியளித்ததும், காணொளியின் தேவையில்லாத பகுதிகள் வெட்டப்பட்டன. வெகுஜன ஊடகங்களுக்கான செய்தியறிக்கைத் தயார் செய்யப்பட்டது. அனைத்தையும் ஒரு முறை ஆழ்ந்து கவனித்த ஜூலியன் சிற்சிறு குறைகளைச் சுட்டிக் காட்டியதும் சரிசெய்யப்பட்டது.அனைத்தும் தயார், இறுதியாக ஒரு முறை ஜூலியன் அனைத்தையும் சரிபார்த்ததும், அனைத்துக் கோப்புகளும் ஜூலியனின் மடிக்கணினிக்கு நகலெடுக்கப்பட்டன. மற்ற மடிக்கணினிகளின் கோப்புகள் அனைத்தும் சிறப்பு மென்பொருட்கள் கொண்டு துடைத்தெடுக்கப்பட்டன. ஜூலியன் அனைத்துக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் (file headers) தகவல்களை நீக்குவதில் மூழ்கியிருந்தார். அதே நேரத்தில் வீட்டின் அறைகள், குளிர்சாதனப் பெட்டி அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து வேலைகளும் முடிந்ததும் அனைவரையும் நிமிர்ந்து கூர்மையான பார்வை பார்த்தபடி ஜூலியன் கேட்ட கேள்வி, 'காணொளிக்கு என்ன பெயர் வைக்கலாம்?".. பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் ஜூலியன் தேர்வு செய்தது "collateral murder". விக்கிலீக்ஸ் தளத்திற்கான வழங்கிகளைச் செயல்படுத்தும் நிறுவனங்களுடன் காணொளியின் தீவிரத்தையும், எந்த நிர்ப்பந்தத்திலும் நீக்காமல் இருக்கவும் உறுதிசெய்து கொண்ட ஜூலியன், கூகுளின் யூ-டியூப் தள நிர்வாகிகளிடமும் பேசி அங்கும் காணொளியினை வெளியிட ஏற்பாடு செய்து கொண்டார். அடுத்த சில நொடிகளில் கோப்புகள் வலையேற்றப்பட்டன. ஜூலியன் திருப்தியென கட்டை விரல் உயர்த்தியதும், சடுதியில் அறையிலிருந்த அனைத்துப் பொருட்களும், மடிக்கணினிகளும் மூட்டை கட்டிக் கொண்டு அனைவரும் வெளியேறி மறைந்தனர்.


யாரும் அங்கிருந்ததற்கான அந்த அறிகுறியுமில்லாமல் உலகின் முகத்தில் ஓங்கியறையும் உண்மை குறித்த ஒரு காணொளியினை வலையேற்றிட உதவியத் திருப்தியுடன் அந்த இடம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. மறுநாள் உலக ஊடகங்கள் அனைத்தும் கூவிக்கூவிக் களைத்தன. ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது. அப்படி என்ன இருந்தது அந்த காணொளியில்?. எந்த வித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்சரிக்கைக்காக என்ற காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடத்தினை என சகட்டுமேனிக்கு வேட்டையாடப்படுவதை விரிவாகக் கூறிக்கொண்டிருந்தது. அதில் இறந்தவர்களில் புகழ்பெற்ற "reuters' செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்தததும், அந்த காணொளி தாக்குதலில் ஈடுபட்ட அதே அபெச்சி உலங்கு ஊர்தியிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யக் குறிப்பு. அமெரிக்காவின் மனித உரிமை, சர்வதேசப் போர் விதிமுறைகள் சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது.


ஜூலியன் சி.ஐ.ஏவின் கையாள் என்றவர்கள் தலையை சொறிந்து கொண்டிருந்தனர். இராணுவத் தாக்குதலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த காணொளி எப்படி ஜூலியனின் கைக்குச் சென்றது, எடுத்தது யார், விக்கிலீக்ஸ் தளத்திற்குக் கொடுத்தது யார் ? இல்லை தன் பழையப் பழக்கத்தில் ஜூலியன் 'தன் கையே தனக்கு உதவி' முறையில் இராணுவ வலையமைப்பிலிருந்து சுடப்பட்டதா என்று பல கேள்விகளோடு அலைந்த கொண்டிருந்த அமெரிக்காவிற்கு, சில வாரங்களில் பதில் தேடி வந்தது... அடுத்த பகுதியில்...

"எங்களை முடக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், விக்கிலீக்ஸ் தளத்தினை மென்மேலும் பலப்படுத்துவதற்கு நீங்கள் செய்யும் உதவி" - ஜூலியன்


38 comments:

ஜோதிஜி said...

தன் கையே தனக்கு உதவி ன்னு வச்சுருக்கலாமோ?

சுடுதண்ணி said...

வச்சாச்சு ஜோதிஜி :D..ஊக்கத்துக்கு மிக்க நன்றி :)

Thekkikattan|தெகா said...

நினைச்சாவே கொல நடுங்குது... இன்னும் என்னவெல்லாம் இருக்கோ. அந்த விடியோவில தரையில நடந்து திரியிறவங்களா இருந்தா நம்மோட ச்சாய்ஸ் என்னவா இருக்கும்? ரொம்ப கலக்கம் ஏற்படுத்தும் காணொளி - சுடுதண்ணி.

Philosophy Prabhakaran said...

Present Sir...

பொன் மாலை பொழுது said...

தொடரட்டும், தொடர்கிறோம்.

சைவகொத்துப்பரோட்டா said...

விறுவிறுப்பான திரைப்படம் போல இருக்கிறது!

Anonymous said...

you have missed a golden chance by not asking junior vikatan/vikatan to publish this serial first

dont know if you will get another hot topic like this in future.

with regret.

Anonymous said...

at least consider publishing it as book at least now. pls contact publishers.

Unknown said...

அடுத்த பதிவு எப்போது வரும், என ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது உங்கள் பதிவு.நன்றி.

Alim said...

ur wikileaks secrets is very interesting. We are eagerly waiting for ur 9th episode.

அகல்விளக்கு said...

வாவ்....

ரொம்ப அருமையா போகுது தல.....

ப்ளீஸ் கன்டினியூ........

The Trainer said...

Interesting.Keep writing :)

Ashok D said...

Nice way of writing... Keep it up :)

Unknown said...

Really super sir,

I expect for your next episode.

calmmen said...

great writting

Good citizen said...

I came to Knom about Wikileaks only by you , A great thanks from me for changing my views from reading kolywood and bolywood (useless rubish thing)
to have a wordly look with hearts,Thank you once again sir,Now I got many links bookmarked to continue
I wish you all success

மாற்று said...

ஊடகங்கள் பொய்யள்ளித்தெளிக்கும் இந்த நேரத்தில் ஒரே ஆறுதல், நமது வலைப்பதிவர்கள்.

விக்கிலீக்ஸ் உண்மைகளை நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். ஜூலியன் அசாங்கேயின் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் மாற்று ஊடகத்தின் வாழ்த்துக்கள். ! ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்து குரல்கொடுப்போம்.

தல தளபதி said...

கலக்குறிங்க பாஸ்.....

சாமக்கோடங்கி said...

உலகம் ஒரு உண்மையான கதாநாயகனைச் சந்திக்கிறது.. அவருக்கு ஒன்றும் நடந்து விடக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். அதே நேரத்தில், இந்தத் தொடரை திகில் படம் போலப் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்களே.. கொஞ்சம் யோசியுங்க.. நீங்கள் மேட்னிஷோ பார்க்க வரவில்லை.. பின்னூட்டம் போடும்போது அது ஜூலியனுக்கு மரியாதை தருவதாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. அதை விடுத்து இதை வித்து காசாக்குங்கள், போன்ற விஷயங்களைத் தவிர்க்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஜூலியன் காசுக்காக இதைச் செய்யவில்லை. எல்லாவற்றையும் காசாக்க வேண்டும் என்று நினைப்பவர்களால் தான் இந்த நாடு இந்நிலைமையில் உள்ளது என்பதை உணர்வீராக.. இந்தப் பதிப்பு முழுதும் ஜூலியன் செய்யும் நல்ல செயல்களுக்குச் சமர்ப்பணம்.. சுடுதண்ணி அவர்களுக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள்.. பணம் என்ன சார் பெரிய பணம்..

Anonymous said...

//பணம் என்ன சார் பெரிய பணம்.. //

ok. if you dont need that please give it to me.

Anonymous said...

//எல்லாவற்றையும் காசாக்க வேண்டும் என்று நினைப்பவர்களால் தான் இந்த நாடு இந்நிலைமையில் உள்ளது என்பதை உணர்வீராக.//

correction.

எல்லாம் ஓசியில் வேண்டும் என்று நினைப்பவர்களால் தான் இந்த நாடு இந்நிலைமையில் உள்ளது என்பதை உணர்வீராக

Anonymous said...

//அதை விடுத்து இதை வித்து காசாக்குங்கள், போன்ற விஷயங்களைத் தவிர்க்கலாம் என்பது என்னுடைய கருத்து//

You will neither give money to suduthanni nor let him convert his hardwork to money.

If Suduthanni earns money making it as book it will not result in you being affected in any way. Then why you stop him. Are you jealous?

சாமக்கோடங்கி said...

நண்பர் ஷிர்டி அவர்களே.. நான் யாரையும் தாக்கிப் பேசுவதில்லை. அது என்னுடைய கருத்து என்று மட்டுமே தெரிவித்துக் கொண்டேன். ஜூலியன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இயேசு சிலுவையில் அறையும் காட்சியைப் பார்த்து சுவராஸ்யமாக இருக்கிறது என்று சொல்வது எப்படி இருக்கும்..? சில பின்னூட்டங்களைப் படிக்கும் போது எனக்கு அப்படித் தோன்றியது. இது வருத்தம் தெரிவிக்க வேண்டிய இடம், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் இடம் இல்லை, அதனால் மற்ற விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்கலாம் என்ற நோக்கில் எழுதப் பட்டது என்னுடைய பின்னூட்டம். எவ்வகையிலும் உங்களைத் தாக்குவதாக நீங்கள் நினைத்தால் அது அந்த நோக்கில் எழுதப் பட்டது அல்ல என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்..

மற்றபடி, இவருடைய எழுத்து புத்தகமாக வந்தால் நிறைய பேர் இவரைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவர். அவர் எழுத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அவர் எழுத்துக்கு எங்கும் ஆதரவு இருக்கும்..

//Are you jealous? // எதற்கு..?? சத்தியமாக இல்லை. அவர் வளர்ச்சி அடைந்தால் எனக்குப் பெருமையே..

சாமக்கோடங்கி said...

சுடுதண்ணி அவர்களே.. ஜூலியனை பிடித்த பின்னரும், ஒன்றும் செய்யாமல் இருப்பது ஏன்..? விசாரணை செய்து மிரட்டி, ஆதாரங்களைத் திரும்ப வாங்கும் முயற்சியா...??

Unknown said...

Please explain about mirror websites,now wikileaks functioning through mirror websites.Thank you for your interesting serial regarding wikileaks.

Thomas Ruban said...

மிகவும் விறுவிறுப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி சார்.

puduvaisiva said...

அந்த "collateral murder" காணொளியை பல மாதங்களுக்கு முன்பே பார்த்த போது எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்த்து என்ன இது மனசாட்சி இல்லாமல் இப்படி கொள்கிறார்களே.

நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

//"எங்களை முடக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், விக்கிலீக்ஸ் தளத்தினை மென்மேலும் பலப்படுத்துவதற்கு நீங்கள் செய்யும் உதவி" - ஜூலியன்///
இவர்தான்யா ஹீரோ....

Santhose said...

//அமெரிக்க ராணுவத்தின் பலமே வான்படை தான். தரை வழித் தாக்குதலில் பலத்த அடிவாங்கிய அனுபவம் அமெரிக்காவிற்கு வரலாற்றில் பல இடங்களில் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றதால் தான் இன்றும் உலகின் எந்தப் பகுதிக்கு உரண்டை இழுக்கப் போனாலும் தரை வழித் தாக்குதலில் மிகப் பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் வம்படியாக இழுத்துக் கொண்டு போவது தொடர்கிறது//

I think it is not correct. US Marines are the best and it is proved in most of the times. Marines in Iraq and Afhan proved themselves. It is proved that one Marine is equal to 10 Army men (in US and abroad.

You should agree if any publishers approach you to publish your articles, then only it reaches thousands.

Why don't you write an article about U.S military power especially about U.S Air Force and its superiority over other countries. (Stealth F117 & B2 Bombers)

Santhose

Anonymous said...

//சாமக்கோடங்கி said.. நண்பர் ஷிர்டி அவர்களே.. நான் யாரையும் தாக்கிப் பேசுவதில்லை. அது என்னுடைய கருத்து என்று மட்டுமே தெரிவித்துக் கொண்டேன்.//

Its ok. I am anxious that suduthanni should begin writing books and get famous and earn money for his hardwork.

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் -வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

Annaraj Ponpandi said...

I am also appreciating your writing style. Please continue.

pichaikaaran said...

டாப் டென்னில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்

சாமக்கோடங்கி said...

http://213.251.145.96/

இந்த லின்க்கில் தொடர்ந்து விக்கிலீக்சைப் பார்க்கலாம்..

சுடுதண்ணி said...

அனைவரின் அன்புக்கும், ஊக்கத்த்துக்கு, ஆதரவுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க :).

உங்கள் பேரன்புக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி சாய்தாசன், சாமக்கோடங்கி.

ஜூலியனைக் கைது செய்திருப்பது விக்கிலீக்ஸ் சம்பந்தமாக அல்ல. மிகச்சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டிருக்கும் ஜூலியனிடம் முறையற்ற விசாரணை அத்தனை எளிதல்ல @ சாமக்கோடங்கி.

mirroring, DNS ஆகியவைக் குறித்து விரைவில் விரிவாக விளக்கப்படும் :) @ born to win.

உங்களனைவின் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும் மீண்டும் நன்றிகள்.

சுடுதண்ணி said...

Hi santhose,

you are right, I agree with your point. But those lines written in the context of comparing just the land and air force.

Definitely I will agree if anyone approaches, i will be happy as it will reach the bigger scale of audience.

Will write soon about those fighters. thank you so much for your concern and extended support since the beginning. :).

Unknown said...

அருமை

பகிர்வுக்கு நன்றி

surimountain said...

நம்மூர் அரசியல்வாதிகளையும் இதுபோல் தோலுரித்துக் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும். குறிப்பாக, சுவிஸ் வங்கிகளில் யார் யார் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று வெளியிட்டால் நாட்டின் சரித்திரமே மாறிவிடும். - சூரி