இத்தொடரின் கதாநாயகனும், ஸ்விடனின் மைனர் குஞ்சுமான ஜூலியன் சரணடைந்த பின்னர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் சிறை சென்றதும் கடலலைகள் பாறைகள் மீது மோதியபடி நின்றன, பறவை கூட்டங்கள் வானில் பறந்தபடி நின்றன, உலகமே ஸ்தம்பித்துப் போனது. ட்விட்டர், வலைப்பதிவுகள், பேஸ்புக் என இணையமெங்கும் சோக கீதங்கள் தட்டச்சிடப்பட்டது. விக்கிலீக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் ஜூலியன் விரைவில் வழக்கிலிருந்து மீண்டு வர மண் சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, பால் குடமெடுத்து அனேக நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க, ஸ்விடனும், பிரிட்டனும் மைனர் குஞ்சை சுட்டே தீருவது என்று உறுதியாக இருந்தன.
அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் ஸ்விடனுக்கு ஜூலியனை அனுப்பி வைப்பதற்கான விசாரணை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை மட்டுமே அடைத்து வைக்கும் தனிச் சிறையில், வெறும் வானொலி வசதி மட்டுமே கொண்ட அறையில் அடைக்கப்பட்டார் ஜுலியன். அவ்வாறு அடைக்கப்பட்டது ஜூலியனின் உயிர்ப் பாதுகாப்புக்காக என்று சமாளித்தது இங்கிலாந்து. பயன்பாட்டுக்கு இணைய இணைப்பு ஏதுமில்லாத ஒரு மடிக்கணினி ஒன்று கேட்கப்பட்ட போது, அச்சத்துடன் மறுக்கப்படும் அளவுக்கு ஜூலியனின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது இங்கிலாந்து அரசாங்கம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தாயுடன் சில நிமிடங்கள் பேச மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது, அதைப் பயன்ப்டுத்தி தன் தாய் மூலம் "நான் குற்றமற்றவன், இவையனைத்தும் ஆதாரமின்றி, பழிவாங்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுகின்றன" என்று அறிக்கை விட்ட ஜூலியன், ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, விக்கிலீக்ஸ் ஆர்வலர்களான இங்கிலாந்தின் எழுத்துலக, திரையுலக பிரபலங்கள் பலர் ஜூலியனின் பிணைக்கு உத்தரவாதம் அளிக்க முன்வர, அனைத்து தரப்பிலும் திருப்தியடைந்த நீதிபதி ஜூலியனுக்கு பிணை வழங்க உத்தரவிட, இங்கிலாந்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்து அனைத்தையும் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திப்போட்டது.
ஜூலியன் தற்போது வசிக்கும் பண்ணை வீடு
இங்கிலாந்தின் இச்செயல் மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. விக்கிலீக்ஸ் ஆர்வலரும், முன்னாள் இராணுவ வீரருமான வாகன் ஸ்மித், தனது 600 ஏக்கர் பண்ணை வீட்டில் ஜூலியனைப் பிணைக் காலத்தில் தங்க வைக்க முன்வந்தும், பல பிரபலங்கள் உத்தரவாதம் அளித்தும், இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக, ஒரு தனி மனிதனை இப்படி அலைக்கழிக்கக் கூடாது என்று அனைவரும் கொந்தளித்தனர். அடுத்த வாய்தாவில் 240,000 பவுண்ட்களுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆதரவாளர்கள் அனைவரும் பணம் திரட்டி, உடனே செலுத்தி ஜூலியனை வெளிக்கொணர்ந்தனர். பிணைக்காலத்தில் ஜூலியனின் இருப்பிடத்தினை கண்டறியும் பொருட்டு ஒரு இலத்திரனியல் தாயத்து ஒன்று மந்திரித்து, அவரது காலில் கட்டிவிடப்பட்டது, மேலும் தினமும் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் 'உள்ளேன் ஐயா' சொல்லவும் உத்தரவிடப்பட்டது. விடுவிக்கப்பட்ட ஜூலியன், சுதந்திர காற்றை சுவாசிப்பது சுகமாயிருக்கிறதென்றும், பாரம்பரிய வசனமான தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும், நீதி வென்றது போன்றவற்றை உதிர்த்து விட்டு விக்கிலீக்ஸ் தளத்தின் இயக்கமும், ஆக்கமும் தொடரும் என்று சூளுரைத்து வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டிற்குச் சென்ற காரில் ஏறி மறைந்தார்.
லண்டன் காவல்துறை வாகனத்துக்குள் இருந்து ஜூலியன்
ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு போகும் பொழுதும், வரும் பொழுதும் லண்டன் மாநகரச் சாலைகளில் ஜூலியன் பயணித்தக் காவல் துறை வாகனத்தைத் துரத்திச் சென்று, ஜூலியனுக்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்ததில் லண்டனுக்கு மதுரை அந்தஸ்து கிடைக்கப்பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது. இத்தனை களேபரத்திலும் தினமும் ஆவணங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது விக்கிலீக்ஸ் தளத்தின் சிறப்பம்சம். ஜூலியனை ஸ்விடனுக்கு அழைத்துச் செல்வதற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மைகளை சட்டத்திற்கு புறம்பின்றி வெளிக்கொணர்ந்த ஒரு தனி மனிதனை வல்லரசு வல்லூறுகள் அலைக்கழிப்பது தொடர, உலகம் வழக்கம் போல் ஊமையாய் உறைந்திருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
இதுநாள் வரை ஜூலியன் மீது விக்கிலீக்ஸ் விவகாரங்கள் எதிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதது, ஆஸிதிரேலியக் குடிமகனான ஜூலியனும், ஐரோப்பிய யூனியனில் பதிவுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனமும் (sunshine) அமெரிக்க சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பதால், ஜூலியனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் சகாக்கள் மூலம் சிரமப்பட்டு முக்கி, முனகுவது, இன்று வரை விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது, தனக்கு ஆவணங்கள் தருபவர்கள் குறித்துத் தகவல்கள் கசியாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை ஜூலியனின் தொழில்நுட்பத் திறனுக்கும், சிறப்பானத் திட்டமிடலுக்கும் அத்தாட்சிகள். விக்கிலீக்ஸ் மீதும் ஜூலியன் மீதும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்து அதிகார மையங்களுக்காக தங்கள் நிர்வாகக் கொள்கைகளை வளைத்து அதிர்ச்சயளித்தவை நிதி-வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, அச்சு ஊடகமான டைம்ஸ் பத்திரிக்கை கூட 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் தேர்வில் அதிக வாக்குகள் பெற்றிருந்தும், ஜூலியனை அறிவிக்க மறுத்து பேஸ்புக் தளத்தின் நிறுவனரான சுகர்பெர்க்கினை அறிவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது.
கையில் பிணைக்கான ஆணையுடன்
மனித குலத்திற்கு எத்தனையோ வசதிகளையும், வரங்களையும் தந்துள்ள இணையமெனும் தொழில்நுட்பத்தின் சிறப்பு வெளியீடு தான் ஜூலியன். இணையத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஜூலியனுக்கு என்றென்றும் நீங்கா இடமுண்டு. விக்கிலீக்ஸ் தளம் பல சீர்திருத்தங்களுக்கான காரணியாக அமைவதற்கும், ஜூலியனின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது.
நன்றியுரை:
"எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்" - ஜூலியன்.
இது வரை தொடர்ந்து இவ்வளவு எழுத சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அமைந்ததில்லை. ஒரே ஒரு சிறிய பதிவிடலாம் என்று எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இன்றி தொடங்கப்பட்ட இத்தொடர் இவ்வளவு தூரம் நீண்டதற்கு தொடர்ந்து ஊக்கமளித்த நீங்களனைவருமே காரணம். உங்கள் பின்னூட்டங்களும், அறிவுரைகளுமே கம்பெனியின் சோம்பலை விரட்டியடித்து, இயங்க வைத்ததென்பது குறிப்பிடத் தக்கது. ஜூலியன் ஒரு வாழும் வரலாறு என்பதாலும், பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆளென்பதாலும், குறிப்பிட்டக் கால இடைவெளியில் ஜூலியன் குறித்து நிச்சயம் எழுத முயற்சிக்கப்படும்.
இத்தொடர் முழுமைக்கும் தொடர்ந்து ஆதரவளித்த அன்பர்களுக்கும், எந்தவித பிரதிபலனுமின்றி தங்கள் பதிவுகளில் இத்தொடர் குறித்து வெளியிட்டு சுட்டிகள் வழங்கிய அன்பர்கள் சுதந்திர மென்பொருள் - சாய்தாசன், வெட்டிக்காடு - ரவிச்சந்திரன், ஜோதிஜி, கேபிள் சங்கர் ஆகியோருக்கும், சொல்லிவிட்டு மறுபிரசுரம் செய்த தமிழ்மீடியா, கோவைச்செய்திகள் இணையத்தளங்களுக்கும் சொல்லாமலேயே மறுபிரசுரம் செய்து மகிழ்ச்சியூட்டிய பிறதளங்களுக்கும் சுடுதண்ணியின் தாழ்மையான வணக்கங்களும், நன்றிகளும். ஒவ்வொரு தொடரினையும் படித்தப்பின் பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை (அனைத்துப் பெயர்களும் சொல்ல வேண்டியிருப்பதால் தவிர்க்கப்படுகிறது - மன்னித்தருளவும்) பதிவு செய்து மகிழ்ச்சியளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சுடுதண்ணி - இன்னும் கொதிக்கும் :)
91 comments:
தொடரை சிறப்பாக நிறைவு செய்துள்ளீர்க்ள். வாழ்த்துகள்!
மிக்க நன்றி கும்மி :). தொடர்ந்து வாங்க :)
படிச்சிட்டு வர்றேன்...
தொடருக்குப் பாராட்டுக்களும், மீள் பிரசுர அனுமதிக்கு நன்றிகளும்!
தமிழ்படம் மாதிரி சுபம் போட்டு எல்லாருக்கும் நன்றி சொல்லி முடிச்சாச்சா ?
ஜூலியன் இருக்கின்ற வரை இந்த தொடர் தொடரும்னு நினைத்தேன். பாவம் நீங்களும் தான் என்ன பண்ணுவீங்க...
13 அத்தியாயம் எழுதுனதே பெரிய விஷயம்.உங்கள் பொறுமைக்கும், எழுத்தாளுமைக்கும் என்னுடைய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்...
இந்த தொடருக்கென்று தனியாக ஒரு "டாக்" உருவாக்கினால் நண்பர்களுடன் பகிர உதவியாக இருக்கும்.
அருமையான விறுவிறுப்பான தொடர்.. அதிலும் வெகு சுவைபட எங்களுக்கேற்றவாறு நகைச்சுவையுடனும் சொல்லிய உங்கள் ரைட்டிங் ஸ்டைல் வெகு அழகு... இதையே உங்களிடமிருந்து புத்தக வடிவில் மேலும் விரிவாக எதிர்பார்க்கிறேன்.. சிறப்பான பணி வாழ்த்துக்கள்...
அருமை.........
ஏதாவது ஒரு செய்தியின் இழை கிடைத்தால் அதை புக்காகப் போட்டு எழுத்தாள டவுசராக ஆகப் பார்க்கும் வேளையில், கட்டற்ற இணையத்தைப் பயன்படுத்தி கடட்ற்ற தகவல்களை இணையத்தின் வழியாகவே வழங்குவது தொடரவேண்டும்.
அந்த வகையில் செய்தி சார்ந்த மேலும் இணையம் கணனி சார்ந்த சிறப்பான கட்டுரையை தமிழில் எழுதிய உங்களுக்கு நன்றி.
ஹாலிவுட் பால எழுதிய மென்னூல் போல இதையும் செய்து வெளியிடவும்.
https://docs.google.com/fileview?id=0B_fcNC8PWNURODk3ODZkZjYtNDYxNi00YmY4LWIyZTYtYzE3OTBlMTgyZmRk&hl=en
தயவு செய்து மேலும் படிக்க புத்தகம் வாங்குங்கள் என்று சொல்லிவிடதீர்கள். :-)))
OS சே ஓப்பனாகக் கிடைக்கும் போது டுபாக்கூர் Browser ஐ காசு கொடுத்து வாங்க சொல்லும் பார்முலா வேண்டாம் தமிழ் இணைய சுதந்திரவாதிகளுக்கு
.
அசானேஜ் விக்கி லீக்ஸுக்கு பிளான் பண்ணுனதை விட நீங்க அதை பதிவுலகில் தொகுத்து வழங்கியது மிகச் சிறப்பு. அருமையான எழுத்து நடை, லோக்கல் டச்சிங்காய் சின்ன சின்ன குசும்பு வார்த்தைகள், முடிக்கும் போது ஓரு கேப்சன்...இப்படி எத்தனை விசயங்களை பார்த்து பார்த்து தொகுத்திருக்கீங்க. சுடுதண்ணி... சூப்பு... ஹி...ஹி... சூப்பர்.
நன்றிகள் பல
ஆயிரம்தான் கூகுளார் கொடுத்தாலும், நம் மொழியில் இவ்ளோ அழகாக படிக்க பச்சென்று ஒட்டிகொண்டது. ஏதோ மர்ம தொடர்கதை படிப்பது போல படித்து வந்தேன். ஜுலியன் மற்றும் தங்களது சேவை தொடரட்டும். (என்னமா எழுதறாரு....)
மிகவும் சுவாரசியமாக தகவ்லகளை பதிவு செய்து சிறப்பாக முடித்துள்ளீர்கள் அருமை
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
Thanks for sharing :)
சுடுதண்ணி - இன்னும் கொதிக்கும் :)
சூப்பர் நண்பா... :-)
Sooper sir.Great series.
இந்த தொடர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இது தொடர்பான சேதிகளை தொடர்ந்து எழுதுங்கள், நன்றி..
எனக்கு எதுவாக இருந்தாலும் தமிழில் படிப்பதுதான் பிடிக்கும். அந்தவகையில் உங்களின் கட்டுரையும் மிக ஏதுவாக இருந்தது. நிறைய விவரங்கள் குசும்பான் விவரிப்புகளுடன், படிக்க எவ்வித புரிதல் தடையுமின்றி அமைந்ததில் மகிழ்ச்சியும், என் அன்பார்ந்த வாழ்த்துகளும்.
மிக்க நன்றி அண்ணே.
விறுவிறுப்பான கட்டுரை கொடுத்தமைக்கு நன்றி.
திடீர் மின்னல் மாதிரி வந்திறங்கி சீரியல் போட்டு கடந்த மாத அலெக்ஸா ரேங்கில் லட்சத்தை உடைத்து 86,460 தொட்டுவிட்டீர்கள்.
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
ஓசியிலே ஈபுக் போடுன்னு கேட்பாங்க.
புத்தகமா வரும். காசு கொடுத்து வாங்கிக்க சொல்லுங்க. பின்னே எவ்வளவுதான் அள்ளிக்கொடுக்க முடியும்.
Suduthanni's Alexa Rank
வணக்கத்திற்குரிய நண்பர் சுடுதண்ணிக்கு, உங்களின் தொடர் முழுதும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அந்த அளவுக்கு விறுவிறுப்பாக தொடர் சென்றது. ஒரு ராஜேஷ்குமார் குற்றப்பின்னணி கதையைப் படிப்பது போல் நல்ல திருப்பங்களுடன் செல்கிறது. இப்படி எழுதுவது ஒரு தனித்திறமை. வரம் என சொல்லலாம்.
உங்கள் மூலம் தாய் மொழியில், ஜூலியன் ஆசான்ஜ் பற்றிய முழு விபரம் தெரிய முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் பணி மகத்தானது. பாராட்டுக்குரியவர்.
நீங்கள் எங்கே தகவல்களை சேகரித்தீர்கள் என்பதும், அருகில் இருந்து பார்த்து பார்த்து எழுதியது போல் எழுதி இருக்கும் உங்கள் நடையும் சற்றே அயரவைக்கின்றன. இது எப்படி சாத்தியம்..? உங்கள் அளவுக்கு இதை இங்கே நம்ம நாட்டுல யாரும் இந்த அளவுக்கு கவனம் எடுத்து எழுதவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
அவர்களுக்கு சினிமாவின் பின்னாலும், அரசியலின் பின்னாலும் சொம்பு தூக்கியே பழக்கம். உண்மையை பேசவோ, எழுதவோ திராணி இல்லாத முதுகெலும்பற்ற சில்லறை வியாபார புத்தியுடைய கைக்கூலி வாழ்க்கையில் இது அனாவசியமாய் பட்டிருக்கலாம்.
உங்களின் இந்த பதிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
வருகைத் தாருங்கள் ( ithayasaaral.blogspot.com & thamizhththenral.blogspot.com )
நானும் முழுசா படிச்சிட்டேன். சூப்பரா இருந்திச்சு. நெறய புதுசா தெரிஞ்சிகிட்டேன். நீங்க சீக்கிரம் முடிச்சிட்டீங்க. தொடர்ந்து இது பற்றி மேலும் updates தெரிந்து கொள்ள எதாவது links கொடுத்துட்டு போங்களேன்
மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள்
Good Job Mate. Keep it up.
Possible write about these F**king Tamil Nadu Political People(Kalaingar Thatha, Jayalalitha, Rasa... big list mate, and I can be your assistant and help you from Moscow. If you do so, you will be a Junior Julian in India. All the best.
From Cold Moscow with warm heart.
சுடுதண்ணி,
செய்திகளை உண்மை பிறழாமல் சுவையுடன் எழுதுவது மிக கடினம். உங்கள் தொடர் சுவை மட்டுமின்றி, ஆர்வத்தையும் தூண்டுவதாக இருந்தது. வாழ்த்துக்கள்!
மிகுந்த பாரட்டுக்கள் சார் ...
தொடர் மிகவும் நன்றாயிருந்தது.
அருமையான தொடர்
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்
ஊடாக நீங்கள் வெளியிட்ட தகவல்களுக்கு மிக்க நன்றி.
தொய்வில்லாத எழுத்து நடைக்கு வாழ்த்துக்கள்.
தொடர் முழுவதையும் PDF கோப்பாக ஆக்கினால், இணையப் பயன்பாடு இல்லாத சிலருக்கும் கொண்டு சேர்க்க வசதியாக இருக்கும். ஆவண(ம்) செய்யுங்கள்!!!;-)
மிக்க நன்றி..தொடரை முடித்ததிக்கு வருத்தம் ...வரும் காலத்தில் தொடர வாழ்த்துகள்...
கம்பெனி சோர்வில்லாமல் தொடர்ந்து இயங்க வாழ்த்துக்கள்... :)
இன்னும் நல்ல சூடாகுங்க சுடுதண்ணி..வாழ்த்துகள்.
சுடுதண்ணி தனக்கே உரித்த பாணியில் வரலாறு படைத்து விட்டது--பாராட்டுக்கள்.எஸ்.ஆர்.சேகர்
சந்தனச் சிதறல்
சுடுதண்ணி, அருமையான தொடர், அருமையாக முடித்துள்ளீர்கள்.
இனி
ஆயுதம் துணை வராது
அரசாயுதம் அழிக்கும் உன்னை ,
அறிவுப் புரட்சி செய்
அனுதினமும் தொழில் செய்
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..
ஜூலியன் நீடுழி வாழட்டும்.
நல்லதொரு பதிவை தந்ததற்கு நன்றி சுடுதண்ணி.
உங்களை பாராட்ட எனக்கு அனுபவம் இல்லை.
விக்கி லீக்ஸ் பற்றி மிகவும் அருமையாக விளக்கமாக
புதுமையாக ஒரு தொடர் கதை போல சொன்னதற்கு நன்றி
எங்களுக்கு விளக்கம் அளிக்க கடுமையாக உழைத்து இருப்பீர்கள்
தமிழில் எப்படி ஒரு பதிவை எதிர்பார்கவே இல்லை,
ஏன் இன்றைய தமிழக அரசியல் மற்றும் உழல்களை பற்றி எல்லாருக்கும்
புரியும் படி பதிவுகள் வெளியட கூடாது?
//பயன்பாட்டுக்கு இணைய இணைப்பு ஏதுமில்லாத ஒரு மடிக்கணினி ஒன்று கேட்கப்பட்ட போது, அச்சத்துடன் மறுக்கப்படும் அளவுக்கு ஜூலியனின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது இங்கிலாந்து அரசாங்கம். //
இதை விட அவருடைய திறமைக்கு கேடயம் ஒன்றும் தரத் தேவையில்லை.. அவர் ஜெயித்து விட்டார்..
//"எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்" - ஜூலியன்.//
சும்மா பிரசங்கம் பண்ணுபவன் ஒரு ரகம்.. வாழ்ந்து காட்டுபவன் மற்றொரு ரகம்.. ஜூலியன் எந்த ரகம் என்று எல்லோர்க்கும் தெரியும்..
ஒரு ராயல் சல்யூட்..
விக்கிலீக்கைப் பற்றி இன்னும் பல செய்திகளை உங்களால் கொடுக்க முடியும் என நம்புகிறோம்.நன்றி!
விறுவிறுப்பான தொடர்கதைபோல,பரபரப்பான சேசிங் போல.. இருந்தது இந்த தகவல் தொடர். பின்னாலேயே இரைக்க இரைக்க ஓடி வந்தாலும் நோவு தெரியாத ஓட்டம்.கூடமாட சொல்லிய தொழில் நுட்பம் பற்றிய விளக்கம் கூட் எளிமையாக புரியும்படி இருந்தது. சுவாரசியமான வார்த்தை கட்டமைப்புகள். தேர்ந்த எழுத்தாளருக்குரிய கைவண்ணம். தொடருங்கள்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கண்ட நாள் முதல் பார்க்காத நாள் இல்லை சுடுதண்ணி இணைய போராளி ஜுலியனுடன் பயணித்ததில் குற்றால அருவி ஆனது நனைந்து மகிழ்ந்தேன்...
அநீதிக்கு எதிராக சுடுதண்ணி கொதிக்கட்டும்
இராசராச சோழன் செ
மிகுந்த பாரட்டுக்கள் சார் ..
முகம் தெரியாத நண்பர்கள் பலரும் ஆச்சரியப்பட்ட எழுத்துத் தொடர் இது. பலரும் வியந்த உச்சக்கட்ட நக்கலுடன் கூட நாகரிகமான தொடர் இது. முக்கியமாக தொடங்கிய சூறாவளி கடைசிவரைக்கும் பதிவுலகத்தில் மையம் கொண்டுருந்தது இது தான் முதல் முறை என்று நினைக்கின்றேன். இதுவே உங்களின் வெற்றி.
மொத்ததில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது மன்னர்கள் குறித்து அவர்களின் நாதாரித்தனமான பெண்கள் தொடர்பு குறித்து அரியபல தகவல்களை இங்கிலாந்து நிர்வாகத்திற்கு கடத்தினார்கள். எத்தனை பெண்கள் எத்தனை முறை என்பது வரைக்கும்.
அந்தவேலையைத்தான் இன்றைய அமெரிக்காவின் தூதரகம் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் செய்து கொண்டுருக்கிறது.
ஆனால் இலங்கையில் உள்ள அமெரிக்கா தூதரகம் குறித்து இறுதி கட்ட போர் நிகழ்கவுக்ள் குறித்து செய்ய கடமையுணர்ச்சியை நீங்கள் முழுமையாக குறிப்பிடாமல் போனது சற்று வருத்தமே.
சுடுதண்ணி கொதித்த சூடு மறைய இன்னும் நாளாகும்.
nandri
vettikathai pesura bloggersku idayila unmayilaye useful info pathi neenga ezhuthirathu paaraatta vendiya visayam. keep it up.
Good Job Suduthanni... Useful information...
very very good we r waiting more from you
சுடுதண்ணி நிஜமாவே சுடுது!
சூப்பர் பதிவு☺☺☺☺☺
விறுவிறுப்பான கட்டுரை கொடுத்தமைக்கு நன்றி சுடுதண்ணி அண்ணே.. .
அட்டகாசமான தொடர். மிக்க நன்றி.
அண்ணாத்தே ஒரு முக்கியமான விசயம் பேசனும்... kusumbuonly@gmail.com க்கு ஒரு மெயில் அனுப்ப முடியுமா?
அனைத்து பாகமும் ரொம்ப நல்லா இருந்தது.. ஒவ்வொரு பகுதி படிக்கும் போதும் இத்தனை செய்திகள் உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டே படித்தேன் :-) பல தகவல்கள் தெரிந்து கொள்ளமுடிந்தது.
உண்மையை சொல்லப்போனால் அசாங்கே அதுக்குள்ளே மாட்டிக்கிட்டாரே என்று தான் நினைத்தேன்..இல்லை என்றால் உங்கள் தொடர் இன்னும் கொஞ்சம் பாகம் நீண்டு இருக்கும். அவர் வெளியே வந்த பிறகு நீங்களும் ஆரம்பித்து விடுங்கள் :-)
//குசும்பன் said...
அண்ணாத்தே ஒரு முக்கியமான விசயம் பேசனும்... kusumbuonly@gmail.com க்கு ஒரு மெயில் அனுப்ப முடியுமா?//
குசும்பன் விஷயம் ஏதாவது அசாங்கே கிட்ட இருக்கா ... ஹா ஹா ஹா
really very informative,
Thanks a lot..
Keep blogging :)
ஒவ்வொரு தொடரையும் இவ்வளவு சுவாரஸ்யமாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்...
//சுடுதண்ணி - இன்னும் கொதிக்கும் :)//
நன்றி..
Nice.. keep doing well..
மிக்க நன்றி நண்பரே..!
உங்களுடைய பேருதவியால் பல தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்..!
மீண்டும் நன்றி..!
விறுவிறுப்பான தொடர். வாழ்த்துகள் சுடுதண்ணி.
உங்கள் ஒவ்வொரு பதிவையும் படிப்பவன் நான். கருத்துக்கள்தான் அதிகம் போடுவதில்லை!
மற்றபடி தங்கள் தளத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளன்...
இந்த விக்கி லீக்ஸ் பதிவு சூப்பர்... பாராட்ட வார்த்தை இல்லை. தங்கள் எழுத்து நடை மிகவும்
சுவாரசியமாக படிக்க வைக்கிறது... பதிவு எழுதும் எல்லோருக்கும் அந்த திறமை வாய்ப்பதில்லை..
தங்களுக்கு அது இருக்கிறது.. எனவே பல விஷயங்கள் பற்றி தொடர்ந்து இது போன்று எழுத அன்புடன்
வேண்டுகிறேன்...
வாழ்க வளமுடன்!
சிறப்பான படைப்பு. வாழ்த்துக்கள்!!!
Wow...Suduthannai...Your simply great! You have a superb writing style...:)
"எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்" - ஜூலியன்.
I was posted your wiki leaks topics in our community group
மிக சிறப்பு வாய்ந்த தொடர் எழுதிய பெரும்மதிப்பிற்குரிய சுடுதண்ணி அவர்களுக்கு, எங்கள் சார்பாகவும், எங்களை சார்ந்தவர்கள் சார்பாகவும் மிகப்பெருமளவு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோல் உங்கள் பணி சிறக்க கோவைச்செய்திகள் மனமார வாழ்த்துகிறது.
அக்டோபர் வரை எட்டி எட்டி சுடுதண்ணிய பார்த்து ஏன் கொதிக்கலைனு பார்த்துகிட்டிருந்தேன்.
பார்க்காமல் விட்ட இரண்டு மாதத்தில் சரவெடி கொளுத்தி இருக்கீங்க...
விக்கிலீக்ஸ் பற்றிய பதிவும், டோரண்ட் குறித்த பதிவும் மிக அருமை...
மீதி படிச்சிட்டு சொல்றேன்...
சுடுதண்ணி இதே போல் தொடர்ந்து கொதிச்சிக்கிட்டு இருக்கணும் என்பது என் வேண்டுகோள்.
உங்கள் எழுத்துக்களை சமீப காலமாக படித்து வருகிறேன்.ஆழமான நகைச்சுவையாக அதே சமயம் பொருள் கெடாமலும் எழுதுவதை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.தமிழுக்கு உங்களை போன்ற ஆட்கள் மிகவும் தேவை.
இந்த அரசியல் வாதிகள் எப்படி சுவிஸ் பேங்கில் பணம் போடுகிறார்கள் ,எப்படி எடுக்கிறார்கள் என்று எழுதினால் நிறைய பேருக்கு அரசியல்வாதிகள் பற்றி தெரிய வரும்.
கண்டிப்பாக இது பற்றி ஒரு தொடரை எதிர்
அரசியல் வாதிகள் எப்படி சுவிஸ் பேங்கில் பணம் போடுகிறார்கள் ,எப்படி எடுக்கிறார்கள் என்று எழுதினால் நிறைய பேருக்கு அரசியல்வாதிகள்
அட ஆமாம். தல நம்ம மக்கள் எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க.
இது மட்டும் இந்த விக்கிப்பய மாதிரி எழுதிட்டீங்கன்னா இப்ப ரெண்டு பேரு கேட்ட மாதிரி உரிமைக்கு பத்து பய புள்ளைங்க வரிச கட்டி நிப்பாக.
வணக்கம் சுடுதண்ணியாருக்கு,
தங்கள் பதிவுகளை எங்கள் இணையத்தளத்தில் பதிவேற்ற தங்களின் அனுமதியை நாடுகின்றோம்.
எமது நோக்கம் தகவல் தொழிநுட்ப செய்திகள் தமிழில் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதாகும்.
web site is www.ibatticaloa.com
Thank you
Editor
உங்கள் எழுத்து நடை கடவுள் கொடுத்த வரம்
இதைப் போல ,அனைவருக்கும் தெரிந்த அல்லது
தெரியாத வெளிநாட்டு முக்கிய பிரபலங்களை பற்றி
தொடர்ந்து எழுதலாமே
வாழ்த்துக்களுடன்
வேலு
தொடரை சிறப்பாக நிறைவு செய்துள்ளீர்க்ள். வாழ்த்துகள்!
மிக அற்புதமான நடையில், விறுவிறுப்பாக படித்து முடித்த தொடர். தொடர் ஆரம்பித்து 8 அத்தியாயம் போனபின்தான் நண்பர் திருப்பூர் ஜோதிஜி வழியாக தெரியவந்தது. BE (ECE) படிக்கும் என் மகளுக்கு technical ஆக பல விபரங்கள் தெரிந்து கொள்ள இது உதவும் என அவளை தொடர்ந்து படிக்க சொல்லியிருக்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரி cgn.hrpc@gmail.com தொடர்பு கொண்டால் மகிழ்ச்சியடைவேன். தொடருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்
சித்திரகுப்தன்
ராஜேஷ்குமார் கிரைம் நாவல் படிக்கும் போது ஒரு விறுவிறுப்பு வருமே..!! அதை உங்கள் எழுத்தில் பார்க்கிறேன். சூப்பரா எழுதியிருக்கீங்க..!! நக்கல் சரளமா வருது உங்களுக்கு..!! தொடருக்கு நன்றி..!!
அருமையான விறுவிறுப்பான தொடர்.......
மிக அருமையான கட்டுரைத்தொடர்! வெகுஜன ஊடகங்களில் வெளியாகும் தொடர்களையும் மிஞ்சும் தரம்! வாழ்த்துகள்!
சுடுதண்ணி தொடர்ச்சியாகக் கொதியுங்கள் ... நீங்கள் கொதிச்சால் தான் பல இடங்களில் ஆறும்... மிக அருமையான பதிவுகள் அடுத்த தொடரை எதிர்பார்த்து இருக்கிறேன்
மீண்டும் ஒருமுறை மனமார்ந்த பாராட்டுக்கள்! - சூரி
superb really nice
இது நல்லைருக்கே...
குறிப்பிட்ட நபர்கள் மட்டும்ல்லாது சுடுதண்ணி கொதித்த கொதியில் சூறாவளியாகி, சுனாமியாக மாறி வலையுலகத்தை கொதியேற்றிய அண்ணன் சுடுதண்ணி அவர்கள் கொடுக்கப் போகும் அடுத்த ஸ்விஸ் கருப்பு பண விவகாரத்தை (காரம்) விரைவில் எதிர்பாருங்கள் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்வதோடு, தலைவருக்கும் இந்த இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்ளை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் குடும்பமும், நலம் விரும்பிகளும் நலமாய் வாழ நம் நித்தியை வேண்டிக் கொள்வதோடு..............
அப்பாடா மூச்சு வாங்கி, கண்ணைக் கட்டுதே.
பொங்கல் வாழ்த்துகள் தங்கம்.
குழந்தைக்கும், வீட்டுக்கார முதலாளிக்கும்.
14.1.2011
13 பகுதிகளையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
நாவல் ஒன்றை படித்து முடித்த நிறைவு.
பாராட்டுக்கள்!
இதன் மீள்பிரசுரம் ஒன்றை எனது வலைத்தளத்தில் ஏற்ற உங்கள் அனுமதி வேண்டுகின்றேன்.
நட்புடன்
மகேன்
nila.mahen@gmail.com
உங்களை இங்கே அழைக்கிறேன்.
Tamil Bloggers Bio-Data
என்ன தலைவரே புதுசா ஒன்னயும் போட கானோம்??? சுடுதண்ணி ஆறி போயிடுச்சி!!! சீக்கிரமா சுட வைங்க!!!!! உங்க mail id என்னனு சொல்லுங்கலேன். mr.kadaroli@hotmail.com
We are eagerly waiting for your next articles...When it will come..?Pls write frequently...
என்ன நண்பரே சுடுதண்ணி ஆறிப்போயிடுச்சே. அடுத்த பாத்திரத்தை அடுப்பில் ஏன் இன்னும் ஏற்றவில்லை என ஒரு மறுமொழியை போடுவோம் என உங்கள் பக்கத்தை திறந்தால் அண்ணன் ஜோதிஜி கொடியேற்றிச் சென்றிருக்கிறார் - துவங்கட்டும் புதிய தொடர் வாழ்த்துக்களுடன் - சித்ரகுப்தன்
நல்ல பதிவு நண்பரே
Amazing......
Thank god i have not missed this post...
தல மிக மிக அருமை
சொல்ல வார்த்தைகளில்லை
தாய்த்தமிழில் இதுபோன்ற மிகச்சிறந்த எழுத்துக்களை எதிர்பார்க்கிறோம்
தமிழை வளர்ப்போம்
உலக இலக்கியங்களை நம் தாய்மொழியில் அனைவர்க்கும் சேர்ப்போம்
இணையத்தில் தமிழ் மொழி சிறக்க உங்களை போன்றவர்களின் சிறப்பான எழுத்துக்கள் ரொம்ப முக்கியம்
தொடரட்டும் தங்கள் தமிழ் எழுத்துப்பணி
தமிழை வாழவைப்போம்
அந்த தமிழை வாழவைக்க தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆளவைப்போம்
Hello Suduthanni, I am one of your fan from Sri Lanka. your articles are fantastic. so why don't you write more new articles. please, i am waiting for that.
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
அற்புதமான எழுத்து நடையும் செய்திகளும் கொண்ட பதிவுகள்(விக்கிலீக்ஸ் மர்மங்கள்). மிக தாமதமாகத்தான் உங்கள் தளத்தை தெரிந்துக்கொண்டேன், ஒரே மூச்சில் படித்துவிடத்தூண்டிய எழுத்து.
தகவல்களை தெளிவாக சேகரித்து அதை முழுமையான வடிவத்தில் கொடுக்க உங்களால் முடிகி
றது.
நன்றி நண்பரே..மிக நிறைவான ஒரு புத்தகத்தை படித்த உணர்வு.
மிண்டும் நன்றி.
மிரட்டலான பதிவு..!
நிறைய நேரம் மிநெக்கெட்டிருக்கிறீர்கள் என்பது தெளிவு..!
வாழ்த்துக்கள்..!
Post a Comment