Thursday, December 2, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 2

ஜூலியன் பால் அசாங் (julian paul assange), வயது 41, பிறப்பால் ஆஸ்திரேலியர், ஹைடெக் நாடோடி. பூமிப்பந்தில் இருக்கும் பாதி நாடுகளால் ரகசியமாகத் தேடப்படும் நபர். இன்றையத் தேதியில் ஜூலியனைத் தவிர யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரே கேள்வி, 'ஜுலியன் இப்போது எங்கிருக்கிறார்?' என்பது தான். அந்த அளவுக்கு தான் இருக்கும் இடத்தை ரகசியமாக அடிக்கடி மாற்றிக் கொள்ளும் மாயாவி. தன் வாழ்நாளின் அனேக பொழுதுகளை விமான நிலையத்தில் பறக்க விடும் இவரின் பயணங்கள் அனைத்துமே ஒரே இலக்கை நோக்கி, அது 'விக்கிலீக்ஸ்'.


விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூளை. தளத்தின் முகவரிக்குச் சொந்தக்காரர். பிறந்தது ஆஸ்திரேலியாவில், இரண்டு திருமணங்கள் செய்தும் தனியாக வாழும் தாய், மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து, விவாகரத்து செய்து தன் மகனையும், மனைவியையும் பிரிந்து வாழ்தல் என்று நிம்மதியில்லாத சொந்த வாழ்க்கை, இவை அனைத்தையும் தாண்டிய ஒரு உத்வேகம் ஜூலியனிடம் இருந்தது. அது கணினியும், கணினி சார்ந்த வாழ்க்கையும். இயற்பியலும், கணிதமும் கற்றாலும், கணினி மீதான காதல் 16 வயதிலேயே நிரல்கள் எழுதும் திற்மையினைக் கைவரச்செய்தது.

16 வயது ரொம்ப ஆர்வக்கோளாறான வயதென்றாலும், ஜூலியனின் ஆர்வம் கணினியின் பால் சார்ந்திருந்ததால், 16 வயதிலேயே கனடாவின் புகழ்பெற்ற நோர்டெல் (nortel) தகவல் தொடர்பு நிறுவனத்தின் ஆஸ்திரேலிய வழங்கியினை (server) தன் வசப்படுத்தி, அந்த வலையமைப்பின் நிர்வாகியிடமே "It’s been nice playing with your system. We didn’t do any damage and we even improved a few things. Please don’t call the Australian Federal Police" என்று கும்மியடித்துக் கலாய்க்கும் அளவுக்கு ஹேக்கிங் கில்லாடி. ஹேக்கிங் என்பது வலையமைப்பின் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி (exploiting the vulnerabilities) திருட்டுத்தனமாக வலையமைப்புக்குள் நுழைவது, விரைவில் தனித் தொடரில் ஹேக்கிங் குறித்துப் பார்ப்போம் :D.


இப்படி தன் திறமைகளை வைத்துச் சேட்டைகள் செய்து கொண்டிருந்த ஜூலியனைத் தேடி விரைவிலேயே 'ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்' என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார். சுமார் 31 ஹேக்கிங் குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துமே 'சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால்' என்று நமக்கு மிகப் பழக்கமான வசனத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் ஹேக்கிங் செய்வதில் ஜூலியனுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். இப்படி அந்த காலத்திலேயே ஜூலியன் வசப்பட்ட வலையமைப்புகளில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமும் அடங்கும். 'வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்', இவை ஜூலியனின் உபதேசங்கள்.


விவாகரத்தின் போது அரசுத் துறைகளிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மிகப்பெரும் பொது நிறுவனங்கள், அரசுத் துறைகள் சார்ந்த வலையமைப்புக்குள் சென்றதில் கிடைத்தத் தகவல்கள் மூலம் அவர்களின் போலியான கோர முகங்களைக் கண்ட ஜூலியனுக்குள் சில மாற்றங்கள் உண்டாயின. இந்த சமூகம் எப்படி ஒரு போலியான கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒவ்வொரு தனிமனிதனையும் அலைக்கழிக்கிறது என்பதனைக் கண்ட ஜூலியன் 'ஓ..ஒரு தெய்வம்... படி தாண்டி வருதே..' என்ற பாடல் முழங்க ஆஸ்திரெலியாவினை விட்டு வெளியேறி, தன் சிந்தனைகளை ஒத்த நண்பர்களைத் தேடிய பயணத்தை தொடங்கினார். ஊடக போதையில் ஊறிக் கிடக்கும் இச்சமூகத்தினை ஒரு ஊடகப் புரட்சியின் மூலமே தெளிய வைக்க முடியும் என்று நம்பிய ஜூலியன் அதற்குக் கொடுத்த செயல் வடிவம் தான் 'விக்கிலீக்ஸ்'.

ஜூலியனின் சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் ஒன்றிணைந்தனர், அதில் பலநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அடக்கம். விக்கிலீக்ஸ் போன்ற செயல்வடிவங்களுக்கு சட்டப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஜூலியனுக்கு தெரிந்தே இருந்தது.இது நாள் விக்கிலீக்ஸ் தளத்திற்கென முழுநேரம் பணிபுரிவது ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும், உலகெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானார் தன்னார்வத் தொண்டர்களாக ஊதியமின்றி பணிபுரிகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ளவும். தனது வாடிக்கையாளர் விவரங்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PRQ என்ற நிறுவனத்திடம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பதிவு செய்யப் பரிந்த்துரைத்த சட்ட ஆலோசகர்களின் சொல்படி www.wikileaks.org என்ற இணையதள முகவரி, 2006 ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூலியனின் பெயரில் பதிவுசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஜூலியனுக்கு வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக மாறிவிட்டது.

விக்கிலீக்ஸ் தளத்தின் இன்றைய வழங்கி (ப்ரான்ஸ்) தகவல்கள்.

பதிவு செய்யப்பட்டது ஸ்வீடனின் PRQ நிறுவனமாக இருந்தாலும் தள முகவரிக்கு ஏறக்குறைய 20 கோப்பு நிரல்களை வழங்கும் வழங்கிகள் பெல்ஜியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. எல்லா நாடுகளிலுமே தகவல் பரவலுக்கு சட்டப்படிப் பாதுகாப்பு வழங்கும் நாடுகள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வழங்கியில் இருந்து தளம் செயல்படும், மேலும் எந்த நேரத்திலும் எந்த நாட்டின் நிர்ப்பந்ததிற்காகவும் ரகசியத் தகவல்களை நீக்குவதில்லை என்ற ஜூலியனின் கொள்கை வசதிக்காகவும் இந்த ஏற்பாடு. ஒரு நாட்டில் வழங்கியை முடக்கினால் வேறொரு நாட்டில் இருந்து தளம் தடையின்றி செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.

எல்லாம் தயார், தங்கள் தளத்தில் அதிரடியாக வெளியிடுவதற்கு ரகசியக் கோப்புகள் வேண்டுமே?, எப்படித் திரட்டுவது?. ஜூலியனிடம் ஒரு திட்டம் இருந்தது !.

அடுத்த பகுதியில் சந்திப்போம் :)

30 comments:

Unknown said...

interesting. thanks

அஞ்சா சிங்கம் said...

அடுத்த பகுதியில் சந்திப்போம் :)///////////
ஆவலுடன் காத்திருக்கிறேன் ...........

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சுல்தான், மண்டையன். தொடர்ந்து வாங்க :)

Ravichandran Somu said...

நண்பர் ஜோதிஜி உங்கள் தளத்தை சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால்.. புதிய இடுகைகள் இடுகைகள் இல்லாததால் படிக்க வில்லை. இப்போதுதான் தொடர்ந்து படிக்கிறேன். பின்னி பெடலெடுக்கிறீர்கள்...

//விரைவிலேயே 'ஜூலியன், யூ ர் அண்டர் அரெஸ்ட், நான் உங்களை கைது செய்றேன்' என்றபடி ஒரு ஆஸ்திரேலிய மேஜர் சுந்தர்ராஜன் இயற்கையாக வருகை தந்தார்.//

ஆங்காங்கே சைக்கிள் கேப்பில் காமடி தூவி எழுதுகிறீர்கள்... I like this:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாவ்....

Ramesh said...

அருமை காத்திருக்கிறேன்..

Risamdeen said...

very interesting

முனைவர் இரா.குணசீலன் said...

சுவை குன்றாமல்..

Prabu M said...

superb...
come with the next part soon :)

puduvaisiva said...

ரொம்ப thillera இருக்கு அவர் வாழ்கை நடவடிக்கை.

நன்றி..

விக்கிலீக்ஸ் நிறுவனரை கைது செய்ய இன்டர்போல் வாரண்ட்!

Sukumar said...

வாவ்.. இன்டிரஸ்டிங்கான நடை.. பரபரப்பான வேகம்.. அடுத்து எப்போ பாஸ்...

எஸ்.கே said...

சுவாரசியம் அதிகமாகிறது!

Prabu Krishna said...

இன்டிரஸ்டிங், அடுத்து எப்போ???

Thomas Ruban said...

ரொம்ப நல்லாயிருக்கு,எளிமையான இத்தொடர் மூலம் வரலாற்றில் உங்கள் பெயரும் இடம்பெற வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

Unknown said...

poiydaana mukangalai adayaalam kaatta appappo oruvar varuvaar.ippo ivar.thodarattum ungal pani.

சங்கர் said...

அருமையா எழுதியிருக்கீங்க பாஸ்...

ராஜ நடராஜன் said...

//'வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்', இவை ஜூலியனின் உபதேசங்கள். //

இந்த டீல் நல்லாயிருக்கே.

ராஜ நடராஜன் said...

உங்களை கொஞ்சம் உண்மைத்தமிழன்கிட்ட ட்ரெயினுங்குக்கு விடலாமுன்னு நினைக்கிறேன்.

இப்படியா தின்னுகிட்டுருக்கற குழந்தைகிட்டயிருந்து தொடரும்ன்னு முட்டாய் புடுங்கறது!

அன்பரசன் said...

too interesting.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

super article !!

karthickeyan said...

அருமையான பதிவு... ஆர்வத்தை அதிகப்படுத்தி விட்டீர்கள்....
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் ...........

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதானே முட்டாய் வேணும்ன்னு எல்லாரும் அழறாங்க சீக்கிரம் சீக்கிரம் அடுத்த போஸ்ட் ப்ளீஸ் :)

ஜோதிஜி said...

அல்லோ........

யாரு பேசுறது.........

அப்டிங்களா?

என்ன ஐயாவுக்கு ஓய்வு அதிகமா?

செரிசெரி

ரவுண்டுகட்டி அடிக்கிறாரு. ரவி சொன்னது மாதிரி சந்து கேப்பில் சைக்கிள் மட்டுமல்ல ஏரோப்பிளேன் வரைக்கும் புகுந்து விளையாடுறாரு.

நடராஜன் சொன்ன கதைசொல்லி சுடுதண்ணீணீணீ

சாமக்கோடங்கி said...

அப்பா...எவ்வளவு தைரியம்.. பாராட்ட வார்த்தைகள் இல்லை.. எங்கிருந்து இந்தத் தகவல்களைச் சேகரிக்கிறீர்கள்...?

தமிழில் இதை புத்தகமாகவே போடலாம்..

அருமையான எளிமையான நடை.. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

Balakumar Vijayaraman said...

அறிவியலின் சந்து பொந்துகளில் அசால்ட்டாக ஆட்டோ ஓட்டு வரும் இன்னொரு ஜூலியன், அண்ணன் "சுடுதண்ணி"யைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் வருகிறது.

வாழ்த்துகள் :)

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கும் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. ஜோதிஜியின் அறிமுகமே வருக வருக :)

நன்றி பட்டாபட்டி.

மிக்க நன்றி @ ரமேஷ், ரிசாம்தீன், குணசீலன், பிரபு.எம்.

மிக்க நன்றி சிவா ;)

ஊக்கத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி @ சுகுமார், எஸ்.கே, பாண்டியா, தாமஸ், தமிழன், சங்கர்.

அன்புக்கும், ஊக்கத்திற்கும் நன்றி நடராஜன், அன்பரசன், கார்த்திக்கேயன், தமிழன்னு..., முத்துலெட்சுமி, சாமக்கோடங்கி, பாலகுமார்.

தொடர்ந்த ஊக்கத்திற்கும், அன்புக்கும் மிக்க நன்றி ஜோதிஜி :)

calmmen said...

really great work
keep it up
thank u

புலிகுட்டி said...

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.ஆவல் தாங்க முடியவில்லை.

சைவகொத்துப்பரோட்டா said...

தொடருங்கள், தொடர்கிறேன்.

guru said...

ஜூலியனின் ஹேக்கிங் டீல் நல்லாயிருக்கே..!