Thursday, December 2, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 3


Tor - The Onion Routing project என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம். முதலில் Torக்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கும் என்ன தொடர்பு?, தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க Mediawiki, Freenet மற்றும் PGP ஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலும், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்களுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. சரி இவையெல்லாம் என்ன? உங்களை, உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள். இதைப் படிக்கும் உஷாரான அன்பர்கள் 'இத வச்சுத் தமிழ்மணத்தில் கள்ள ஓட்டுப் போடலாமண்ணே?' என்றெல்லாம் கேட்கக் கூடாது :D ;).


முதலில் இணையத் தொடர்பு மின்னஞ்சல், மின்னரட்டை, கோப்புப் பகிர்தல் இப்படி எதுவாக இருந்தாலும் உங்கள் இருப்பிடத் தகவல்கள் முதல் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் வரை விருந்து வைக்கப்படுமென்பதை சுடுதண்ணியை ஆதி முதல் படித்து வரும் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாதவர்கள் இங்கே சென்று சற்று இளைப்பாறி விட்டுத் தொடரலாம். இணையத்தொடர்பில் நீங்கள் பயன்படுத்தும் வழங்கிகளில் உங்கள் தொடர்பின் சரித்திரமே சேகரிக்கப்படும். அதன் மூலம் தான் இணையக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சாத்தியமாகிறது. சமீபத்தில் தனது வழங்கியின் தகவல்களைப் பகிர மறுத்த ப்ளாக்பெர்ரி நிறுவனத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தது நினைவிருக்கலாம். விக்கிலீக்ஸ் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே இந்த இணையத் தொடர்புச் சங்கிலியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்பது தான். இதன் காரணமாக ரகசியத் தகவல்கள் அடங்கியக் கோப்புகளைப் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை ஹேக்கிங்கில் கரை கண்ட ஜூலியனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவற்றுள் ஜூலியனின் தேர்வு தான் Tor.

Tor - The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் 'இலவச மென்பொருள்' என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது :).


Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்: http://www.torproject.org/download/download.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் 'Relay' என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய, குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.

இப்படி மசாலாப் படத்தின் கதாநாயகனைப் போல் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படும் Tor வலையமைப்பில் கொக்கி போடப்பட்டுத் தான் முதல் விக்கிலீக்ஸ் ரகசியத் தொகுப்பு வெளியிடப்பட்டது!!!. இருந்தும் விக்கிலீக்ஸ் ஏன் இன்னும் Tor வலையமைப்பினைப் பரிந்துரைக்கிறது?. அடுத்த பகுதியில்.

ஜூலியனின் அட்டகாசங்கள் தொடரும் :).

37 comments:

Unknown said...

god may increasing your knowledge. superb. amazing. thankyou. very nice. keep it up...

மனிதன் said...

Very nice article,informative about latest technology too,very useful to non tech peoples like me.Expecting more articles like this from you!

புலிகுட்டி said...

அனைவருக்கும் நன்றாக புரியும்படி எழுதுகிறீர்கள்.இது போன்ற தகவல்கள் தமிழில் தருபவர்கள் மிக குறைவானவர்களே.உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.தொடர்ந்து வாசிக்க தூண்டுகிறது.

பொன் மாலை பொழுது said...

Bingo!!
Its amazing. No one is revels such knowledge in Tamil till today.
Please, carry on your postings and sharing.

அஞ்சா சிங்கம் said...

மிகவும் அருமை.....

சைவகொத்துப்பரோட்டா said...

அசத்தல்! வழக்கம்போல் எளிய எழுத்து நடை!

Thomas Ruban said...

மிக அருமை,பகிர்வுக்கு நன்றி சார்.

துமிழ் said...

superb writing ! really ineteresting and informative.
pls continue writing

Balakumar Vijayaraman said...

கலக்கல்.

LazySystemAdmin said...

உங்கள் பதிவுகள் அனைத்தையும் வாசித்து வருகிறேன்... அனைத்தும் அருமை... பகிர்வுக்கு நன்றி..!
தமிழில் இது போன்ற தொழில்நுட்ப தகவல்கள் வழங்கும் உங்கள் பணி பாராட்டுக்குரியது..
தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள் மற்றும் பகிர்வுக்கு நன்றிகள்..!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மிக அருமையான தொடர்,
ஒவ்வொருநாளும் உங்கள் பதிவுக்கு வந்து அடுத்த பகுதி வந்துவிட்டதா என்று பார்க்கிறேன்.

மிக அருமை.

வடுவூர் குமார் said...

ஓ ஹோ! இப்படியெல்லாம் நடக்குதா?

கபிலன் said...

சூப்பர் !

ஜெயந்தி said...

சினிமாக்களில்தான் இப்படியெல்லாம் பார்த்திருப்போம். உங்கள் தொடர் ஒரு க்ரைம் ஸ்டோரி படிப்பதுபோல் இருக்கிறது. ஹீரோ போல் ஜூலியன் தெரிகிறார்.

puduvaisiva said...

டேக் ஆஃப் நல்ல இருக்கு சுடுதண்ணி அண்ணே !

அமெரிக்க அரசாங்கத்தால் விக்கிலீக்ஸ் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது...

எங்கள் இணையதளத்தை முடக்கினாலும் சேவை
தொடரும்: விக்கிலீக்ஸ் அதிரடி அறிவிப்பு

ராஜ நடராஜன் said...

தமிழக அசாங்கி:)

அறிவிலி said...

//ஜூலியனின் அட்டகாசங்கள் தொடரும் :).//

உங்க அட்டகாசங்களும் தொடரட்டும்.

மே-நவம்பர் எங்க காணாம போயிட்டீங்க?
:-))

ஜோதிஜி said...

இணையம் என்பது எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியமான விசயம்.

எட்டுவழி தேசிய நெடுஞ்சாலை வேகப் பயணம் முதல் ஒத்தயடி பாதை வரைக்கும் அத்தனையும் இதில் சாத்யம்.

எல்லாவிதமாகவும் இதில் புகுந்து வந்துள்ளேன். ஆனால் கடந்த 10 வருடங்களில் உங்களைப் போன்று தெளிவான அடிப்படை அறிவு இல்லாமலே முடிந்தவரைக்கும் எனக்குத் தேவையான சாத்யக்கூறுகளை பிரித்து மேயந்துள்ளேன்.. ஆனால் என்னுடைய ஆச்சரியமெல்லாம் ஒரு இடத்தில் இருந்து (அல் குவைதா) மற்றொரு இடத்திற்கு கடத்தும் செய்திகளை டிகோட் அல்லது சங்கேத வார்த்தைகள் மூலம் கடத்துவது முதல் அதையும் உடைத்து பகுத்து பார்த்து கண்டுபிடித்து அதன் நதிமூலம் ரிஷிமூலம் வரைக்கும் கண்டு பிடிக்கும் வித்தகர்கள் வரைக்கும் இந்த ஆச்சரியம் எல்லை மீறி போய்க் கொண்டேயிருக்கிறது.

வியப்புடன் உங்களின் பல கட்டுரைகளை படித்து இருந்தாலும் அடிப்படை விசயங்கள் ஒன்றுமே புரியாது.

காரணம் அடிப்படை சமாச்சர விசயங்கள் என்னிடம் இருந்து இருந்தால் இன்னும் கூட கொஞ்சம் ஒன்றிப் போயிருக்கலாம்.

ஆனால் இந்த கட்டுரை ஏறக்குறைய புலனாய்வு கட்டுரைகளை போலவே இருப்பதால் விசயங்கள் பின்னோக்கியும் கொடுத்துள்ள விபரங்கள் முன்னோக்கி இருப்பது ஆச்சரியம்.

எனக்கு முழுமையாக புரிந்தது அதை விட அதிசயம். இது தான் உங்கள் வெற்றி.

தொடர்கின்றேன்.

Siraj said...

suduthaniyai aaravittudatheerkal

kaja said...

super, this is my first time to see your site. it's very usful for me. thanks.

can you post details about cctv system internet configuration and router setting and also how to change software in virus attack cellphone. i think it will be useful for all.
thanks

அன்பரசன் said...

ரொம்ப நல்லா இருக்கு.
ஆனா நெறைய விசயம் புரியமாட்டேங்குது.

ரோஸ்விக் said...

Explanation is chanceless. Great Man. :-)

எஸ்.கே said...

உரிக்கட்டும்! உரிக்கட்டும்!

அருமை!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் டாப் 20 பிளாக்கில் 9வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

vasu said...
This comment has been removed by the author.
rajadevan said...

நண்பரே, தங்கள் பதிவுகள் மிக அருமை, ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருக்கிறேன். நான் மென்பொருள் துறையில் 4 வருடம் வேலை செய்தவன், இருந்தாலும் தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. மேலும் வளர வாழ்த்துக்கள்.

ராஜா.

சுடுதண்ணி said...

உங்கள் அனைவரின் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. உங்களின் வார்த்தைகள் கம்பெனிக்குத் தெம்பூட்டும் விதத்தில் இருப்பதை தெரிவித்துக் கொள்வதில் சுடுதண்ணி மகிழ்ச்சியடைகிறது.

சிறிய இடமாற்றம் @ அறிவிலி (நலமா?) :)

தகவலுக்கு மிக்க நன்றி செந்தில் :). மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்...

சாமக்கோடங்கி said...

தல.. சத்தியமா பின்னீட்டிங்க....

தொடருங்க..

ஆனா விக்கிலீக்ஸ முடக்கீடானுகளே பாவிங்க...

Anonymous said...

you should have written it as a book or at least contacted youthful.vikatan.com to publish as a series.
Here at this blog the reach is limited.
Please consider this at least now or next serial.

avoid giving download links to illegal software which could be unlawful under indian laws.

Anonymous said...

Advance congratulations for sure spot at vikatan varaverparai in future.

Anonymous said...

//Its amazing. No one is revels such knowledge in Tamil till today. //

அதே! அதே!!

Muruganandan M.K. said...

சிக்கலான விடயங்களை புரிய வைத்திருக்கிறீர்கள். நன்றி

SurveySan said...

nice.

சுடுதண்ணி said...

மிக்க நன்றி சாமக்கோடாங்கி.

உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சாய்தாசன். உங்கள் அறிவுரைகள் கண்டிப்பாக வரும்காலத்தில் பரிசீலிக்கப்படும். தொடர்ந்து வாங்க, மகிழ்ச்சி.

மிக்க மகிழ்ச்சி மருத்துவரய்யா. தொடர்ந்து வாங்க.

நன்றி சர்வேசன் :)

rajadevan said...

நண்பரே, தற்போது விக்கிலீக்ஸ் mirroring முறையில் பல இணையதளங்களை உருவாக்கியுள்ளதாக படித்தேன். தாங்கள் அதை பற்றியும் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

நன்றி,
ராஜா.

guru said...

இண்ட்ரஸ்டிங்..

Thozhirkalam Channel said...

//ஜோதிஜி said...//

சுடுதண்ணி தளம் பற்றி ஜோதிஜி அவர்கள் பல் முறை சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதன் அர்த்தம் மிகவும் உண்மைதான்..

தலைச்சிறந்த தளங்களுல் சுடுதண்ணி இருக்கும்,,