ஸ்விட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனிமலையும், சாக்லேட்டும். அதே போல ஸ்விஸ் வங்கிக் கணக்குகளுக்கென்றும் ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. கத்தைக் கத்தையாய்க் கரன்சிகள் சலவையாய் அடுக்கப்பட்டு, ஒரு பக்கம் தங்கக் கட்டிகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், மிகக்கடுமையான இரும்புப் பெட்டகத்திற்குள் திருட்டுப் பணம் பாதுகாப்பாக இருப்பதைப் போலவும் நமக்குத் தோன்றலாம். இதையெல்லாம் தாண்டி ஸ்விஸ் வங்கி என்றதுமே ஆழ்மனதில் முதலில் தோன்றும் விஷயம் "ரகசியம்" மற்றும் "அது பணக்காரர்களுக்கானது". இந்த இரண்டில் ரகசியம் மட்டுமே உண்மை, மற்றபடி ஸ்விஸ் வங்கிக் கணக்கென்பது நம்ம ஊர் பொட்"டீ"க்கடை கணக்கு போலத்தான் யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இத்தொடரில் ஸ்விஸ் வங்கிகள் குறித்தும், வங்கிகள் இணையச்சேவை வழங்குவது சாதரணமாகி விட்ட இக்காலக்கட்டத்தில் இணையத்தின் வீச்சுக்கேற்ப தங்கள் 'ரகசிய' முத்திரையைச் சேதப்படாமல் எவ்வாறு ஸ்விஸ் வங்கிகள் காத்துக் கொள்கின்றன என்பது குறித்தும் பார்க்கலாம்.
வரலாறு நமக்கு மிக முக்கியமாதலால், ஸ்விஸ் வங்கிகளின் ஆரம்ப நாட்களைச் சிறிது நுனிப்புல் மேய்ந்து விட்டுத் தொடருவோம். நம்ம ஊர் போலவே பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் கடன், வட்டி, 'சீட்' பண்ட், சேமிப்பு வகையறாக்களைக் கையாளும் செல்வந்தர் குடும்பங்கள் பல ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வந்தனர். அந்த காலத்தில் பிரான்ஸ் மன்னர்களே சரக்கடிக்க காசில்லாவிட்டால், 'ஏலே சண்முகம், எடுறா வண்டிய' என்று ஸ்விட்சர்லாந்து கிளம்பி கடன் வாங்கி வரும் அளவிற்கு பணக்காரக் குடும்பங்கள் ஸ்விஸ்லிருந்து தொழில் செய்து கொண்டிருந்தனர். பிரான்ஸ் மன்னர்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று குளிப்பது மற்றொன்று தங்களைப் பற்றிய பிரத்யேக தகவல்கள் வெளியே கசிவது. இவர்கள் வசதிக்காகத் தான் முதல் முறையாக ஸ்விஸ் வங்கிகள் சங்கேதக் குறியீடுகள் மூலம் வங்கிக் கணக்குகளைத் துவக்கினர். பின்னாளில் அதுவே அவர்கள் உலக அளவில் புகழ் பெறக் காரணமாகி விட்டது. சர்வதேச அளவில் எந்த குழுவிலும் சேராமல் நடுநிலை நாடாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட நாடு ஸ்விட்சர்லாந்து என்பதால் கூடுதல் பாதுகாப்புடன் வங்கிகள் செழித்தன.
இவ்வங்கிகள், 1713ஆம் ஆண்டிலேயே அப்போதைய சட்ட நிர்வாக அமைப்பான ஜெனிவா கவுன்சிலால், வங்கிகள் தங்கள் கணக்கு விவரங்களை, கவுன்சில் அனுமதியின்றி யாருக்கும் தெரிவிக்கத் தேவையில்லை என்று அறிவித்து உரம் போட்டு வளர்த்து விட்டது. அச்சட்டத்தின் படி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியே சொன்னால் அபராதம் கட்ட வேண்டும். ஒரு வேளை வாடிக்கையாளர் ஸ்விட்சர்லாந்து சட்டத்தின் படி கிரிமினல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் தகவல்களை வங்கிகள் வெளியிடலாம். ஸ்விஸ் வங்கிகளின் ரகசியச் சேவை, நேர்மையாகவோ அல்லது கருமையாகவோ கடும் பணம் சேர்த்த அன்பர்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்ததால் ஸ்விஸ் வங்கிகளில் பணம் குவிய ஆரம்பித்தன.
ஹிட்லர் |
இப்படியாக நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக தழைத்தோங்கிய ஸ்விஸ் வங்கிகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஹிட்லருக்கே அசைந்து கொடுக்காதவர்கள் என்று உலகம் முழுவதிலிருந்தும் வாடிக்கையாளர்கள் கும்ம ஆரம்பித்தனர். சும்மா சாமி கும்பிடும் கோவிலில் கூட்டம் அதிகமானால் நூறு, ஐநூறு, ஆயிரம் என ரகம் பிரித்து வரிசைக் கட்டி தரிசனம் பார்க்க விடுவது போல், வங்கிகள் தங்கள் தரத்திற்கேற்ப குறைந்த பட்ச வைப்பு நிதியாக ஐந்தாயிரம் டாலர்கள் முதல் பல மில்லியன் டாலர்கள் வரை கேட்க ஆரம்பித்தன. மிக மிக ரகசிய கணக்குகள் துவங்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் திடீரென மரணித்தால் தங்கள் பணம் பறிபோய் விடும் வாய்ப்பிருப்பதால், தங்களின் வாரிசு குறித்தானத் தகவல்களை வங்கியில் முன்கூட்டியே தெரிவிப்பது அல்லது உறையிலிடப்பட்டக் கடிதத்தில் சமர்ப்பித்து, தாங்கள் மரணித்தப் பின் வாரிசு குறித்து வங்கி தெரிந்து கொள்வது போன்ற வழிமுறைகள் வந்தன.
திரு. & திருமதி. மொபுட்டு |
இப்படியாகத் தங்களின் ரகசியத் தன்மை குறித்து பலப்பல பில்டப்களைக் கொடுத்து வந்த ஸ்விஸ் வங்க்கிகள் இது நாள் வரை வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்குகள் குறித்து விளம்பரப் படுத்தியதோ அல்லது வங்கி இருக்கும் வீதி வழியாக செல்வோரைக் கையைப் பிடித்து இழுத்து கணக்கு ஆரம்பிக்க சொன்னதோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். வாழ்க்கை ஒரு வட்டம், மேலே இருப்பது கீழே போகும், கீழே இருப்பது மேலே போகும் என்ற தமிழ்ப்பட வசனகர்த்தாக்களின் பொன்மொழிக்கேற்ப உச்சத்தில் இருந்த ஸ்விஸ் வங்கிகள் தங்கள் வரலாற்றில் ரகசியத்தன்மைக்காக சந்தித்த மிகப்பெரியச் சவால் தான் இணையம்.
காலத்தின் கட்டாயமாகிக் போன இணையத்தில் எதுவுமே ரகசியமில்லை என்பதும், வலைக்கட்டமைப்புக்களை உடைத்து, உடைத்து விளையாடும் வயசுப்பிள்ளைகள் அதிகமான இணைய உலகத்தில் பூட்டி, பூட்டி வைத்தாலும் பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதும் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. எங்கெங்கோ ஹேக்கிங் மூலமாக இணையத்தில் தகவல் திருட்டு நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் இதுவரை இணையத்தில் தங்கள் ரகசியத் தகவல்களை எந்த ஸ்விஸ் வங்கியும் ஹேக்கிங் மூலமாக இழந்ததில்லை. எப்படி அது சாத்தியம்?. அடுத்த பகுதியில்.
32 comments:
Hello Suduthanni,
I would like to compile ur work on wikileaks and post on Scribd.com with ur permission. Pls have a look into my scribd page as i have done similar projects earlier.
http://www.scribd.com/kalaarangan
thanks,
ramanathan sundaram
ஒரு வாரம் எழுதுற அளவுக்கு சுடுதண்ணிக்கு நேரம் கிடைச்சிருக்கு போல....
ரகசியங்கள் அம்பலபடுத்தப்படும்.வாழ்த்துகள் சுடுதண்ணி.
நட்சத்திர வாழ்த்துகள்!
பின்னூட்டத்துக்கு வந்தப்பதான் தெரிஞ்சது நீங்க நட்சத்திரம்ன்னு!வாழ்த்துக்கள்.
நான் என்ன சொல்ல வந்தேன்னா
குளிக்கப் பிடிக்காதது பிரெஞ்சு மன்னர்களுக்கும் மட்டுமில்லை.பிரெஞ்சுக்காரர்கள் அனைவருக்குமா இருக்கலாம்.அதனால்தான் அவங்க குளியலுக்கு பிரெஞ்சு பாத் (பிரெஞ்சு முத்தம் பற்றி தெரிஞ்சவங்க யாராவது கமெண்டுங்க பார்க்கலாம்:))
ஆறு,காடு,மலைன்னு அத்தனை இருந்தும் தண்ணிப்பஞ்சம் உள்ள நாடு இந்தியாவாம்!ஆச்சரியமா இல்ல?நாம கூட துண்டுல தண்ணிய தெளிச்சு பிரெஞ்சு பாத் எடுக்கற பழக்கத்தைக் கொண்டு வந்திடனும்.
ஆமா!ஸ்விஸ் வங்கில பணத்தைப் போடறவனெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கிற மாதிரி தெரியலையே?ஏதோ பூதம் காத்த புதையல் கதைதான் ஸ்விஸ் வங்கிப்பணம்.
வெளிநாட்டுல சொத்து சேர்த்து வச்சிருந்தா Economics sanction ன்னு சொல்லி ஆட்டையப் போடுறதுக்குப் பேர்தான் சொத்தை Freeze செய்றதா?
ஸ்விஸ் கணக்கு வச்சிருக்கிற இந்தியப் பய புள்ளைகளை புடிச்சிக் கொடுப்பீங்கன்னு பார்த்தா தொடரும் போட்டுட்டீங்களே!நான் அசாங்கி வீட்டுக்குப் போறேன்.
நல்ல பதிவு.
நட்சத்திர வாழ்த்துக்கள்..கலக்குங்க
கையக் கொடுங்க நண்பா...
தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...
அட்டகாசமான அடுத்த தொடர் ஆரம்பித்திருக்கிறீர்கள்...
ப்ளீஸ் கன்டினியூ... :-)
வாழ்த்துக்கள் தலைவரே... நல்ல தகவல்கள், எளிமையா புரியும்படியா எழுதியிருக்கீங்க...
இப்போதைய நிலைமைக்கு ஏற்ற தொடர்!!
தமிழ்மணத்தில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
வந்து ஒரு சிறப்பு வாய்ந்த பதிவை வாசித்தேன்...
சுவையானத்தகவல்கள்.எப்படீங்க? தேடிக்கண்டு பிடிச்சீங்க?அடுத்தப்பதிவைக்காண ஆவல்,
உங்கள் கலக்கலான எழுத்துநடையில் ஸ்விஸ் வங்கிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த பகுதிக்கு... :)
ஊரிலிருந்து இந்த நிமிடம் தான் வீட்டுக்குள் வந்து நினைவில் வந்து உள்ளே வந்தால்........ அடாடா..... என்னுடைய தாமதமான ஆனால் தரமான நட்சத்திர வாழ்த்துகள் நண்பா.
ஓ நான் விரும்பியதே தொடங்கியாச்சு போலிருக்கு. மறுபடியும் வர்றேன்.
thankyou
வரிக்கு வரி ரசித்து படித்த வார்த்தை பிரயோகம். அதென்ன மன்னர்களுக்கு கூட சண்முகம் என்ற பெயரைத்தான் பிடித்து இருக்குமோ(?)
இந்திய நிதி அமைச்சகம் தெளிவான சட்ட திட்டம் இல்லை. அதனால் எங்களால் கேட்க முடியவில்லை என்கிறார்கள். ஆனால் இதே சமயத்தில் ஓபாமா வந்த பிறகு அமெரிக்கா குறிப்பிட்ட தகவல்களை பெற்று உள்ளது. குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் மூலம் பண்ம் சேர்த்து ஸ்விஸ ல் சேர்த்து வைத்திருக்கும் உழைப்பாளிகள்.
இது குறித்து எழுதவும்.
ஒரு வாரம் எழுதுற அளவுக்கு சுடுதண்ணிக்கு நேரம் கிடைச்சிருக்கு போல....
இதுக்கு பேரு உள்குத்தோ?
அப்புறம் அறிமுகம் செய்து கொண்டதைப் பார்த்தேன். ஸ்விஸ விவகாரத்தைக்கூட மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம் போலிருக்கே(????)
சுவையான பகிர்வு!
தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் சார்..
அட்டகாசமான அடுத்த தொடருக்கு நன்றி.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ரெண்டு. முதல் பக்கத்தில் சுடுதண்ணியின் முகவரியோடு (URL) செய்யுங்கள். மீண்டும் நன்றி. @ ரெண்டு.
கொஞ்சமா தான் கிடைச்சிருக்கு. அன்புக்கு நன்றி நண்பா @ தவறு.
நன்றி, தொடர்ந்து வாங்க @ ரவிச்சந்திரன்.
கருத்துப்பகிர்வுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ராஜநடராஜன். தொடர்ந்து வாங்க..
அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க @ ரதனவேல், நந்தா ஆண்டாள் மகன், தமிழ்மகன்.
உங்கள் வருகையும், ஊக்கமும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது, தொடர்ந்து வாங்க @ க.பாலாசி.
கொடுத்துட்டேன் நண்பா. முதல் பதிவிலிருந்து உடனிருந்து ஊக்கமளிக்கிறீர்கள். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி @ அகல்விளக்கு
உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க @ கவிதை வீதி சுந்தர், சுரன், ஈரோடு கதிர், சேலம் தேவா, குணா :)
ஆளைக் காணுமேன்னு பாத்தேன். வருக வருக.... கண்டிப்பா அது குறித்து எழுதுறேன். அடிக்கடி வாங்க. காத்து வாங்குது @ ஜோதிஜி.
அன்புக்கு மிக்க நன்றி தாமஸ். தொடர்ந்து வாங்க.
உங்கள் பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன்
உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது.
தங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள் .
அருமையான பல கட்டுரைகளை தந்த , தந்து கொண்டிருக்கிற
சுடுதண்ணிக்கு வாழ்த்துக்கள்.
அருமையான ஆரம்பம்.. தொடருங்கள் நண்பரே..!
நானும் இந்தியா, மலேசியா-வெல்லாம் சுத்திட்டு இன்று தான் பதிவுலகம் பக்கம் ரிட்டன்ஸ்... உங்க பக்கங்களைப் பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி...
நல்ல எழுத்து நடைண்ணே...
வணக்கம் திரு.சுடுதண்ணியார் அவர்களே!
நீண்ட இடைவெளிக்குப்பின்.... தங்களின் பதிவு எப்பொழுதும்போல் சிறப்பு..... எப்பொழுதும்போல் கோவை செய்திகளில் வெளியிட்டுள்ளோம். தங்களுக்கு தவறாக இருப்பின் நீக்கிவிடுகிறோம். நன்றிகள் பல. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.
Tamil Baby Names
Post a Comment