திருடப்பட்ட படைப்புகளை நீக்க விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்து, உங்கள் முகத்தின் முன் கொக்கரித்தால் என்ன செய்வது?. பிண்ணனியில் ஒரு கொள்கை விளக்கப் பாடலை ஒலிக்க விட்டுக்கொண்டு ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பிக்க வேண்டியது தான். என்ன வகையான ஆதாரங்கள், அவற்றை எப்படித் திரட்டுவது என்பது குறித்து விரிவாக இப்பகுதியில் காண்போம்.
இணையத்தில் ஒரு படைப்பின் உரிமையை யார் முதலில் வெளியிடுகிறார்கள் என்பதை வைத்துத் தான் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே உங்கள் படைப்பு வெளியிடப்பட்ட நேரம், திருடப்பட்டப் பதிவு வெளியிடப்பட்ட நேரம், உரல்கள், நீங்கள் வேண்டுகோள் வைத்த மின்னஞ்சல், அதற்கு கிடைத்த பதில் என்று உங்கள் படைப்பே முதலில் வெளியானது என்பதற்குச் சான்றாக எதெல்லாம் கையில் சிக்குகிறதோ அவற்றையெல்லாம் தொகுக்கவும். தேவைப்பட்டால் திரைக்காட்சியைப் பதிவு செய்து கொள்வது நலம் (screenshot).
இப்பொழுது ஆதாரங்கள் தயார். அடுத்து என்ன செய்வது ?. கொஞ்சம் கொஞ்சமாக பணிய வைக்க வேண்டும் என்று நிதானமாக யோசிப்போர், முதலில் திரட்டிகள், திருடப்பட்ட படைப்பைக் கொண்டிருக்கும் தளத்தினை விளம்பரம் செய்யும் தளங்களின் நிர்வாகிகளுக்கு ஆதாரங்களை அனுப்பி, தங்கள் செயல்பாட்டிலிருந்து திருடும் தளத்தினை நிறுத்தி வைக்க வேண்டுகோள் வைக்கலாம். இது போன்ற வேண்டுகோளுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எனவே நம்பிக்கையோடு இருக்கவும். இதன் பிறகு குற்றவாளி தன்னிலையிலிருந்து இறங்கிவர வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை இவர்களும் கூட்டுக் களவாணியாக இருந்தால் நேரே சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக வேண்டியது தான் கடைசி கட்டம்.
சுப்ரீம் கோர்ட் என்பது நாம் குற்றம் சாட்டும் பதிவினை இணையத்தில் வெளியிடத் தளம் வழங்கியிருக்கும் நிறுவனங்கள். உதா. ப்ளாக்கர் பதிவுகளாக இருந்தால் கூகுளுக்கு புகார் அனுப்பலாம். கூகுள் நிறுவனத்தில் யாரையும் தெரியாது எனக் கவலைப்படாமல் கீழே இருக்கும் சுட்டிக்குச் சென்று உங்கள் புகாரைத் தட்டுங்கள், திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.
மேற்படி நிறுவனங்களின் நடவடிக்கைகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும்,குற்றம் செய்யும் தளங்களைத் தங்கள் தேடுபொறிகளில் தடை செய்வார்கள் அல்லது அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு நிரூபணமானால் பதிவுத் தளமே மொத்தமாக முடக்கப்படும், நீதி நிலைநிறுத்தப்படும், பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் துடைக்கப்படும்.
நீதி கிடைத்தவுடன், 'அப்பாடா' என்று அசந்து விடாதீர்கள். மீண்டும் வேறெங்கும் திருடப்பட்டிருக்கிறதா என்று தேடத் துவங்குங்கள், ஏனெனில் இணையம் அசருவதேயில்லை. ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கில் ctrl+c, ctrl+v தட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன். படைப்புகள் பரவிக் கொண்டேயிருக்கின்றன வேறு வேறு பெயர்களில்.
மேற்படி காரியங்களனைத்தையும் செய்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அசாத்திய பொறுமை தேவை என்பதையும், பொறுமையுடன் உங்கள் படைப்பின் பெருமையைக் காக்க வாழ்த்துக்களையும் கூறி இத்தொடர் நிறைவடைகிறது. பின்னூட்டங்கள் மூலமும், வேறுவகையிலும் ஊக்கமளித்த அனைவருக்கும் சுடுதண்ணி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
21 comments:
அவசியமான ஒன்று.. நன்றி..
நன்றி
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடி கொண்டிராமல், செயல்களில் இறங்குவோம்
GREAT POST...THANKS.
நன்றி அண்ணாமலையான் :)
நன்றி துளசி கோபால் :)
நன்றி தமிழ் உதயம் :)
நன்றி பலா பட்டறை :)
செமங்க...
நல்லா கருத்து.. விஜயகாந்த் பாணியில அதுக்கு வழியும் சொல்லி இருக்கீங்க..
கலக்குக :-)
FBI இல் வேலை செய்கிறிர்கள் போல ..!!!!! லொள் ... ;)
உங்கள் பதிவுகள் எல்லாமே முழுமையாக உள்ளன
தொடர்ந்து எழுதுங்கோ
இடுகை நன்று நண்பா..
இடுகைகள் திருடப்படுவதற்கான காரணங்கள் என்று எதாவது ஒரு பட்டியல் இருக்கிறதா நண்பரே?
அவசியமான தகவல்களுக்கு நன்றி.
மீண்டும் ஒரு முறை உங்களின் எளிமையான, புரியும்படியான எழுத்து நடைக்கு நன்றி.
ஊக்கத்துக்கு மிக்க நன்றி கடைக்குட்டி:)
நன்றி பூங்குன்றன் :)
@குமரன்
1. அறியாமை
2. காழ்ப்புணர்ச்சி
3. அதிக வருகையாளர்களைப் பெற்று அதன் மூலம் விளம்பர வருவாயைப் பெருக்கும் பொருட்டு
4. ச்சும்ம்மா....
மிக்க நன்றி புதுகைத் தென்றல் :)
ஊக்கத்துக்கு மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :)
வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி :D ;)
thx :)
good post.
மிக்க நன்றி சிநேகிதன், சிவா :).
this artice is republished in tamiljournal.com.
pathivukaL section
regards
mozhiventhan
மிக்க நன்றி @ அப்புச்சி :)
மார்கழிக் குளிருக்கு இதமாக இருந்தது சுடுதண்ணீர்...
நல்ல பதிவு நண்பரே
முதல் நாளே feedல் படித்துவிட்டேன் மிக்க நன்றி
மிக்க நன்றி @ goma
ஊக்கத்துக்கு நன்றி நண்பா @ நீச்சல்காரன் :)
Post a Comment