Friday, January 1, 2010

எப்ப வரும் அந்த புத்தாண்டு ?



உன் நரைமுடி கண்டு
நாங்க சிரிக்கணும்
என் வழுக்கையை மற்றவர்கள்
கிண்டலடிக்கணும்

கல்லூரி சேட்டைகளை
சொல்லிச் சொல்லி
சிரிப்பு வெடி நாம வெடிக்கணும்

அனுபவங்கள் செதுக்கி விட்ட
மாற்றங்களை நினைச்சு
பார்த்து ரசிச்சுத் திளைக்கணும்

'உன் ஆளு இப்ப
எங்க இருக்கோ'ன்னு கேட்டு
மலரும் நினைவுல மூழ்கடிக்கணும்

பிரியும் போது நிச்சயமா
அழுகாம சிரிச்சி நின்னு
போட்டோ ஒன்னு எடுத்து வைக்கணும்

அப்படி ஒரு புத்தாண்டுக்குத் தான்
காத்திருக்கேன்
அதுக்குத்தான் ஆண்டவன வேண்டியிருக்கேன்....

அனைவருக்கும் சுடுதண்ணியின் இதங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

7 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..
Malarum ninavukala kilappivittuteer..

hayyram said...

gud continue.

regards

www.hayyram.blogspot.com

அண்ணாமலையான் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

ஜோதிஜி said...

2009 ஆண்டின் அற்புத அறிமுகம் நீங்கள். வாழ்த்துகள்.

puduvaisiva said...

புத்தாண்டு வாழ்துகள் சுடுதண்ணி அண்ணே!

கவிதை அருமை

சுடுதண்ணி said...

நன்றி பட்டாபட்டி :)

நன்றி ஹேராம் :)

நன்றி அண்ணாமலையான் :)

மிக்க நன்றி பூங்குன்றன் :)

நன்றி ஜோதிஜி :)

ரொம்ப நன்றி, சிவா தம்பி ;)... கவிதைன்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி :D.