Wednesday, December 30, 2009

இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 2 (முற்றும்)


நாம் பயன்படுத்துவது டிஜிட்டல் புகைப்படக் கருவிகளோ, செல்பேசிகளோ எதுவாக இருந்தாலும் அதது தங்கள் சக்திகேற்ப எடுக்கப்படும் புகைப்படங்களில் அனைத்து விவரங்களையும் exif metadata பகுதியில் விதைத்துவிடும். சில உயர்ரகக் கருவிகளில் GPS வசதியிருப்பின் புகைப்படம் எடுக்கப்படும் இடத்தின் விவரங்கள் கூட இலவச இணைப்பாக வழங்கப்படும்.

பிரபலமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தங்கள் இணையதளத்தில் ஹேக்கிங் (hacking) குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரைக்காக அனுபவமிக்க ஒருவரிடம் பேட்டிக்குச் சென்ற போது அவர் தனது இருப்பிடம், பெயர் குறித்தான தகவல்கள் இன்றி வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையோடு பேட்டியளித்தார், சில முகம் தெரியாத புகைப்படங்களும் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டன. ஆர்வக்கோளாரில் அப்படங்களின் exif metadata பகுதியினைப் பிரித்து மேய்ந்த சில வாசகர்கள் அந்த ஹேக்கரின் இருப்பிடத்தை வெளியிட்டு மகிழ்ந்தனர். இப்படிப் பல சம்பவங்களின் மூலம் புகைப்படங்களை இணையத்தில் பயன்படுத்தும் போது ரகசியத்தன்மையைப் பாதிக்கும் ஒரு தவறான கண்ணோட்டத்திலேயே இவை பார்க்கப்பட்டாலும் ஒரு சிலருக்கு இது மிகமிக உதவியாக இருக்கிறது. அவர்கள் தொழில்முறை புகைப்படக்காரர்கள். ஒரே காட்சியைப் பலவிதமான தொழில்நுட்ப நிலைகளில் (technical settings) படமெடுக்கும் இவர்களுக்கு, அவற்றைப் பின்னர் ஆராயும் போது மிக நன்றாக வந்திருக்கும் படங்களை எடுக்கும் போது என்னென்ன தொழில்நுட்ப நிலைகளைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது மிக எளிது.

சரி, exif metadata பகுதியினைப் பார்வையிட பல மென்பொருட்கள் இணையமெங்கும் நீக்கமற நிறைந்த்திருக்கின்றன. கூகுளாடி தங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தொடரில் irfanview என்ற இலவச மென்பொருள் மூலம் எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் கீழே இருக்கும் சுட்டிகளின் மூலம் irfanview மென்பொருளினையும், தேவையான கூடுதல் வசதிக்கான நிரல்களையும் (plugins) உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
இப்பொழுது எந்தப் படத்தின் exif metadata பகுதியினைப் பார்வையிட வேண்டுமோ அப்படத்தை ifranview மென்பொருள் மூலம் திறக்கவும். பின்னர், image-> information -> EXIF info* என்ற இடத்திற்கு சென்றால் exif meta data பகுதியின் தரிசனம் கிடைக்கும் ( படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்).

இப்பொழுது பார்த்தாயிற்று, இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் முன் இவற்றை எப்படி அகற்றுவது?. புகைப்படங்கள் வெட்டுவதற்கு, சிறிதாக்குவதற்கு, பெரிதாக்குவதற்குப் பயன்படுத்தும் image processing வகை மென்பொருட்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். சில மென்பொருட்கள் தாமாகவே exif metadata பகுதியினை நீக்கிவிடும். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் அவ்வாறு நிக்குகிறதா என்பதனை மேலே சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி அவற்றை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். நீக்கப்படாமல் இருப்பின் irfanview மென்பொருள் மூலமே அகற்றிவிடலாம். தேவையானப் புகைப்படத்தை irfanview மென்பொருளில் திறக்கவும். பின்னர் file->save as என்ற இடத்திற்கு சென்றால் சேமிக்கும் படிவத்திற்கு அருகில் சில வசதிகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் 'reset exif orientation tag' என்ற வசதியினைத் தேர்வு செய்து பின் சேமிக்கவும். அவ்வளவுதான் உங்கள் படம் இப்போது இணையத்தில் பகிர்ந்து கொள்ள தயார். கேதரின் நிலை ஏற்படாமலிருக்க ஒருமுறை thumbnail படத்தையும் சரிபார்த்துக் கொள்வது மிக்க நன்று.

இதுவரை சொன்னவை அனைத்தும் ஒரு பொதுவான பாதுகாப்பிற்கு மட்டுமே. தொழில்நுட்பங்கள் கண்டபடி வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எப்பொழுதுமே தங்கள் சொந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் முன் ரூம் போட்டு ஒரு முறைக்கு நாலு முறை யோசித்து கொள்வது அறிவுறுத்தப்படுகிறது, முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள். இது தவிர புகைப்படங்கள் தவறான கைகளுக்கு சென்றால் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் :D.

மேலே உள்ள படம் இத்தொடரைப் படித்து அதன் மூலம் புரிதல் ஏற்பட்டவர்களுக்கான ஒரு சோதனைப் பயிற்சி. இப்படத்தின் exif meta data பகுதியினைப் பார்த்து உங்களுக்கு தெரியவரும் தகவல்களைப் பின்னூட்டத்தில் ஊட்டி விட்டால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது. மேலதிக விபரங்கள் தேவைப்பட்டாலோ அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

29 comments:

அண்ணாமலையான் said...

சுடுதன்னி ரொம்ப சூடா இருக்கு.. ப்ரமாதம்....

சுடுதண்ணி said...

மிக்க நன்றி அண்ணாமலையான் :). தொடர்ந்து வாருங்கள்.

அண்ணாமலையான் said...

very good thalaivaa....

bandhu said...

very very useful information. Thanks

Paleo God said...

thanks for the information:)

அகல்விளக்கு said...

அட

பரிசல் மற்றும் லதானந்த் அங்கிள்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா..............

சுடுதண்ணி said...

நன்றி அண்ணாமலை :)

நன்றி ரவி :)

நன்றி பலா பட்டறை :) தொடர்ந்து வாருங்கள்.

நன்றி நண்பா @ அகல்விளக்கு. அந்த படத்துல விவகாரமா எதும் இல்ல.. சும்ம விளையாடுங்க :D

PPattian said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி..

சுடுதண்ணி said...

மிக்க நன்றி PPattian :)

ஸ்ரீராம். said...

பல விவரங்கள் கொடுத்துள்ளீர்கள்...எனக்கு எல்லாமே புதுசுதான்...தெரிந்து கொண்டேன்...நன்றி.

Iyappan Krishnan said...

Exif IFD0
Camera Make Nokia
Camera Model 5800 Xpres
Picture Orientation normal (1)
Exif Sub IFD
Exposure Time (1 / Shutter Speed) 60000/1000000 second ===> 1/16.66667 second ===> 0.06 second
Lens F-Number / F-Stop 28/10 ===> ƒ/2.8
ISO Speed Ratings 781
Original Date/Time 2009:12:20 20:50:32
Shutter Speed Value (APEX) 4058/1000
Shutter Speed (Exposure Time) 1/16.66 second
Aperture Value (APEX) 297/100
Aperture ƒ/2.8
Flash Flash fired, auto mode
Focal Length 37/10 mm ===> 3.7 mm
Image Width 2048 pixels
Image Height 1536 pixels

Iyappan Krishnan said...

Use EXIF Viewer plugin for Firefox. You can see the exif details without downloading to local machine.

ஜோதிஜி said...

பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க. 2010 முழுக்க இதே போல் என்னைப் போன்றவங்களுக்கு பாடம் எடுங்கண்ணா?

puduvaisiva said...

சுடுதண்ணி அண்ணே என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

இந்த பதிவை படிச்ச பின்பு நானும் துப்பறியும் சிங்கமா மாறிட்டேன்.

:-)))))))

இதுல காட்டு இலாக பெரிய ஆபிசர் தெரியுது. மீதி இருவர்ல நீங்கள் எது?

Exif Sub IFD
Exposure Time (1 / Shutter Speed) 60000/1000000 second ===> 1/16.66667 second ===> 0.06 second
Lens F-Number / F-Stop 28/10 ===> ƒ/2.8
ISO Speed Ratings 781
Original Date/Time 2009:12:20 20:50:32
Shutter Speed Value (APEX) 4058/1000
Shutter Speed (Exposure Time) 1/16.66 second
Aperture Value (APEX) 297/100
Aperture ƒ/2.8
Flash Flash fired, auto mode
Focal Length 37/10 mm ===> 3.7 mm
Image Width 2048 pixels
Image Height 1536 pixels

சுடுதண்ணி said...

மிக்க நன்றி ஸ்ரீராம் :)

thx for the comment jeeves. i never used that addon,that would be the easiest way. thanks again for the info. keep visiting :)

மிக்க நன்றி ஜோதிஜி :). புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

மிக்க நன்றி சிவா. சிங்கமா மாறியதில் மிக்க மகிழ்ச்சி. அந்த படத்தில் நான் இல்லை :D.

Anonymous said...

// Camera made NOKIA //

அவ்வ்வ்வ்வ்........

ஜீவ்ஸ் சொன்னது முற்றிலும் சரி.

படம் எடுத்தது நான் தான். என்னோட கைப்பேசியில் எடுத்தேன்.

உங்களின் பணி தொடரட்டும் சுடுதண்ணி.......

Open Talk said...

You can even check the meta data in the properties. Just right click the picture and then select properties. Then click on the summary, then click on the advance..

That onlly gives you just basic info, but also very usefull..

flowing meta DATA informations are gathered from the way that I metioned above.

Width :448 Pixels
Height : 336 pixels
Horizontal Resolution : 300 dpi
Vertical Resolution : 300 dpi
Bit Depth :24
Frame Count : 1
Equipment Make : Nokia
Camera Model : 5800 Xpres
Color Representation : sRGB
Shutter Speed : 1/17 sec.
Lens Aperture : F/2.8
Flash Mode :
Focal Length: 4mm
F-Number F/2.8
Exposure Time 1/17 sec.
ISO Speed : ISO-781
Light Source : Shutter Priority
Date Picture Taken : 12/20/09 8:50 PM

சுடுதண்ணி said...

thx a lot for the info and the reply. keep visiting friend :) @ opentalk.

யாசவி said...

dear suduthanni,

I have my family function dvd with video graphic works.

I tried to duplicate but it says asynchronous error (may not exact) finally cannot duplicate.
I tried many times with different browsing center in india and my own laptop too.

Can you guide me to duplicate the dvd?
Is it possible to get the video with original feed ( means video with actual sound)?

yasavi.blogspot

சுடுதண்ணி said...

மிக்க நன்றி வெயிலான் :).. தொடர்ந்து வாருங்கள்..

சுடுதண்ணி said...

Hi yasavi,

can you give me the exact error message?. Is that copy protected by any chance?.

anyway give it a try with ISObuster or badcopy pro.

please let me know whether its solved or not.

thx :)

ilayangudian said...

Kanna , Kalaikitta

சென்ஷி said...

அருமை :)))

சுடுதண்ணியின் சேவை இணையத்தமிழருக்குத் தேவை :)

சுடுதண்ணி said...

நன்றி இளையாங்குடி :) தொடர்ந்து வாங்க :)...

நன்றி சென்ஷி :D

ஜெயம்கொண்டான் said...

நம்ம மக்கள் திருந்தற வர எவனையும் ஒன்னுயும் பண்ண முடியாது மிக்க நன்றி

angel said...

nice post

angel said...

nice post

சுடுதண்ணி said...

Thanks Viji and Angel!

srinivasan said...

சுடுதண்ணி பதிவுகள் எல்லாம் பெருருக்கு ஏற்றல் போல சூட இருக்கு ,பல பதிவுகள் விழிபுணர்வையும் ,உலகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது தொடரட்டும் உங்கள் பணி !