தேடுபொறிகள் எப்படி செயல்படுகிறது, வலைத்தளங்களை எப்படி தரப்படுத்துகிறது, SEO அப்படின்னா என்ன போன்ற வறட்சியான விஷயங்களை போன பகுதியில் விரிவாகப் பார்த்து விட்டதால் இந்த ப்குதியில் ஒரு ப்ளாக்கர் பதிவை எப்படி தேடுபொறியின் பார்வையில் மேம்படுத்திக் காட்டுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.
முதலில் தேடுபொறிகள் ஒரு ப்ளாக்கர் பதிவைத் தரப்படுத்துவதற்கு ஆராயும் போது எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை புரிந்து கொண்டாலே மற்ற வேலைகள் மிக மிக எளிது. உங்கள் பதிவின் தலைப்பு (உ.தா. சுடுதண்ணி), ஓவ்வொரு இடுகைக்கும் அளிக்கும் தலைப்பு, இடுகைகளில் வழங்கும் படங்கள், எத்தனை பேர் உங்கள் பதிவுக்கு வருகை தருகிறார்கள், எத்தனை பேர் உங்கள் பதிவினை தொடர்கிறார்கள், நீங்கள் எத்தனை பேரைத் தொடர்கிறீர்கள், பெறும் பின்னூட்டங்கள், சீரான கால இடைவெளியில் புதுப்புது பதிவுகள் வெளியிடப்படுகிறதா மற்றும் அதன் தனித்தன்மை, உங்கள் பதிவுக்கு மற்ற தளங்களில் இருந்து உரல் மூலம் தொடர்புப் படுத்தப்பட்டு இருக்கிறதா, உங்கள் பதிவின் meta tags மூலம் நீங்கள் வழங்கியிருக்கும் குறிச்சொற்கள், இவையனைத்தும் தேடுபொறிகள் உங்கள் பதிவைத் தரப்படுத்துவதற்குக் காரணியாக விளங்குவதில் முக்கியமான விஷயங்கள்.
பெரும்பாலான பதிவர்கள் தங்கள் பதிவின் தலைப்பைப் (blog title) பெரும்பாலும் தாங்கள் எழுதும் விஷயங்களுக்கு தொடர்புப்படுத்தி வைப்பதில்லை, உதாரணம் சுடுதண்ணி :D. அதிகமாக எண்ணங்கள், கிறுக்கல், பிதற்றல், உளறல், வாந்தி, மயக்கம், தூக்கமின்மை, மன உளைச்சல் போன்ற தலைப்புகளை ஆங்காங்கே காணப்பெறலாம். ஆகவே முதலில் செய்ய வேண்டிய விஷயம் உங்கள் தலைப்பில் நீங்கள் எழுதும் விஷயங்களோடு தொடர்பு உள்ளதாக வைத்துக் கொள்வதை (சுடுதண்ணிக்குத் தலைப்பை மாற்றும் திட்டமேதும் இல்லாத காரணத்தால்) மற்றவர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. அதே போல் ஓவ்வொரு இடுகைக்கும் வைக்கும் தலைப்பும் (post title) மிக முக்கியம். சிறுகதை, கவிதை எழுதும் பதிவர்கள் தங்கள் தலைப்பின் இறுதியில் சிறுகதை அல்லது கவிதைப் போன்ற வார்த்தைகளைச் சேர்த்தால் தேடுபொறிகளில் சிறுகதை, கவிதை போன்ற குறிச்சொற்களைத் தேடும் அன்பர்களுக்கு உங்கள் பதிவின் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெறுவார்கள்.
பின்னூட்டங்கள், பதிவினைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் நீங்கள் தொடரும் எண்ணிக்கை, மற்ற பதிவுகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ உங்கள் பதிவிற்கு தொடர்பு உரல்கள் ஆகியவை உங்கள் பதிவின் நம்பகத்தன்மையினை அதிகரிக்கும் காரணிகள். இங்கு பின்னூட்டங்கள் என்பது தனித்துவமாக எத்தனை பதிவர்கள் பின்னூட்டங்கள் வழங்குகிறார்கள் என்பதாகும்.. ஒரே நபரோ அல்லது குழுவோ செய்யும் பின்னூட்டக்கும்மிக்கு எந்த பயனும் இல்லை. மேலும் பளாக்கர் தளம் கிட்டத்தட்ட ஆர்குட் போல ஒரு சமூக வலையமைப்புத் தளம் என்பதனை நினைவில் கொள்ளவும். உங்கள் பதிவு எத்தனை மற்ற பதிவுகளைத் தொடர்கிறது மற்றும் எத்தனைப் பதிவுகள் உங்களைத் தொடர்கின்றன, அவ்வாறு தொடர்புகளை இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளின் உள்ளடக்கம் (content) எவ்வாறு உங்கள் பதிவின் உள்ளடக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது போன்ற இன்னபிற விஷயங்களின் அடிப்படையில் உங்கள் பதிவின் தரம் எடை போடப்படும். இந்த விஷயத்தில் தான் தேடுபொறிகளின் பார்வையில் சாதரண இணையத்தளங்களிலிர்ந்து பதிவுகள் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு நீங்கள் கவிதை எழுதும் பதிவு வைத்திருந்தால், மற்ற கவிதைகள் எழுதும் பதிவுகளோடு தொடர்பு படுத்தப் பட்டிருப்பின் சிறப்பு. அவ்வாறு தொடர்புப் படுத்தப்பட்டிருக்கும் பதிவுகள் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் உங்கள் பதிவினை விட சிறப்பானதாக இருந்தால் மிகமிகச்சிறப்பு.
அடுத்து ஒரு பதிவராக உங்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது (active blogger) . எத்தனை நாளைக்கு ஒரு முறை உங்கள் பதிவில் புது இடுகைகள் பதிவேற்றப்படுகிறது, எத்தனை பின்னூட்டங்கள் போன்ற விஷயங்களும் கணக்கில் கொள்ளப்படுகிறது. தரப்படுத்துதலில் மிகவும் சக்திவாய்ந்த காரணியாகக் கருதப்படுவது மற்ற தளங்கள் அல்லது பதிவுகளில் இருந்து உங்கள் பதிவுக்குக் கொடுக்கப்படும் சுட்டிகள் அல்லது உரல்கள் தான். சில தொழில்முறைப் பதிவர்கள் தேடுபொறியின் தரப்பட்டியலில் முன்னேறும் பொருட்டு நட்பு முறையில் அவருக்கு இவரும், இவருக்கு அவரும் சுட்டிகள் கொடுத்துக் கொள்வது வழக்கம். ஏதாவது ஒரு விஷயத்திற்கு மதிப்பதிகம் என்று அறிந்தால் அன்றே அதைச் சந்தைப்படுத்தி காசு பார்ப்பது தான் கண்ணுக்கும், பர்சுக்கும் அழகென்பதால், பணம் வருடச் சந்தா செலுத்தினால் உங்களின் சுட்டியை தங்கள் தளத்தில் வெளியிடும் தளங்கள் நிறைய உள்ளன. தேடுபொறிகளைச் சார்ந்து இருக்கும் பல தொழில்களில் இதுவும் ஒன்று.
அடுத்துப் பார்க்கப் போவது பதிவுகளில் படங்கள் வழங்குவது மற்றும் meta tags. பொதுவாக தேடுபொறிகள் உங்கள் பதிவினை ஆய்வு செய்யும் போது படங்களை அவற்றின் கோப்புப் பெயர் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட குறிச்சொற்களையுமே எடுத்துக் கொள்ளும். எனவே படங்களை இணைக்கும் பொழுது கோப்பின் பெயர் படம் விளக்கும் சங்கதியை ஒத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். படங்களை இணைத்த பிறகு EDIT HTML பகுதிக்கு சென்று கீழ்காணும் முறையில் அப்படத்திற்கானக் குறிச்சொற்களை வழங்கலாம்.
< src="test.gif" width="25" height="25" alt="Place your keyword list here">
அதே போல் meta tag மூலம் உங்கள் பதிவிற்கு பொதுவாக என்னென்ன குறிச்சொற்கள் கொடுக்க விரும்புகிறீர்களோ அதனை வழங்கலாம். meta tag மூலம் கொடுக்கப்படும் குறிச்சொற்களுக்கு முக்கியத்துவம் கொஞ்சம் கம்மி என்றாலும், அவற்றையும் தேடுபொறிகள் அலசுவதால் கீழ்காணும் முறையில் dashboard -> layout -> edit html சென்று < /head >முன்பாக வழங்கி மகிழலாம்.
< equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
< name="DESCRIPTION" content="meta description goes here which appears in search results ">
< name="KEYWORDS" content="your keywords,go here,separated by a comma,but not a space">
< name="KEYWORDS" content="your keywords,go here,separated by a comma,but not a space">
இவ்வளவும் செய்தாலும் எப்போது உங்கள் தளமோ அல்லது பதிவோ தேடுபொறிகளின் தரப்பட்டியலில் மேலே வரும் என்பது தேவரகசியம். சிலவாரங்கள், மாதங்கள், சமயத்தில் வருடங்கள் கூட ஆகலாம். பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றும் வேலையைச் செய்து கொண்டே காத்திருக்க வேண்டியது தான். தேடுபொறிகள் ப்ளாக்கர் பதிவுகளை விட இணையத்தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சரியாக மேம்படுத்துதல் மற்றும் உங்கள் தகவல்களின் தனித்துவத்தாலும் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் இணையதளங்களைத் தாண்டி பதிவுகள் முன்னெறுவது மிக எளிது உ.தா: வகுப்பறை, டொரண்ட் போன்ற குறிச்சொற்களை வைத்து கூகுளில் தேடிப் பாருங்கள்.
இணையத்தில் இருக்கும் எண்ணற்ற தளங்களை, பதிவுகளை தேடுபொறிகள் எப்படி ஆய்வு செய்வது சாத்தியமாகிறது?. ஓவ்வொரு தேடுபொறிக்கும் crawler எனப்படும் நிரல் இருக்கும். இந்த நிரல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் அட்டவணையில் இருக்கும் தளங்களுக்கு வருகை தந்து தரப்படுத்தத் தேவையான தகவல்களைத் திரட்டிச் செல்லும். கூகுளின் crawler நிரல்களின் செய்ல்பாட்டை எப்படி அறிவது? எப்போதெல்லாம் உங்கள் தளத்திற்கு வந்து செல்கிறது, என்னென்ன குறிச்சொற்கள் மூலம் உங்கள் பதிவை தேடுபொறிகள் மூலம் வருகையாளர்கள் வந்தடைகிறார்கள் போன்றவற்றையெல்லாம் அறிந்து கொள்வது உங்கள் பதிவினை தேடுபொறிகளின் பார்வையில் மேம்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும். இவற்றை அறியும் முறைகள் அதற்கு கூகுள் எப்படி உதவுகிறது போன்றவை குறித்து அடுத்த பகுதியில்...
10 comments:
பாஸ்,
அருமையான மற்றும் பயனுள்ள பதிவு.
அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங்
நன்றி பாஸ் :). தொடர்ந்து வாருங்கள் :)
உங்களை எப்படி பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை. வரிக்கு வரி படித்த பதிவு. இத்தனை விசயங்கள் உள்ளதா? உங்கள் எளிமைக்கு நன்றி.
மிக தெளிவான விரிவான விளக்கம் சுடுதண்ணி அண்ணே! நன்றி !
சிறு விண்ணப்பம் இத் தொடரில் குகூல் செண்ட் பாக்ஸ்(google sandbox) பற்றி எழுதிவீர்களா?
1. எந்த தளங்கள் இப் புதை குழிக்குள் விழுகின்றன ?
2. இதற்கு குகூல் தறும் விளக்கம் என்ன?
3.இதில் இருந்து மீள்வது எப்படி? அல்லது தளத்தை பாதுகாப்பது எப்படி?
அருமையான பதிவு.
Good and Useful one
உங்களுக்கு உபயோகமாயிருந்ததில் மிக்க மகிழ்ச்சி ஜோதிஜி.
நன்றி சந்துரு...
நன்றி ஸ்ரீராம் ...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சிவா.சாண்ட்பாக்ஸ் குறித்து எழுதும் எண்ணம் எதுவும் இல்லாமல் தான் இருந்தேன், உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் எழுதத் தோன்றுகிறது.. அடுத்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். நன்றி சிவா.
அருமையான மற்றும் பயனுள்ள பதிவு.
பாஸ் அருமையான மற்றும் தேவையான பதிவு
நல்லா புரியுது. நன்றி.
Post a Comment