
எப்போதாவது முன்பின் தெரியாத ஊரில் முகவரியில்லாமல் யாரையாவது தேடிய அனுபவம் அல்லது திரைப்படங்கள் குறித்தான அரட்டையின் போது மனதில் நிற்கும் துணைக் கதாப்பாத்திரத்தின் பெயர் தெரியாமல் தவிப்பது இப்படி வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நிறைய விஷயங்களைத் தேடியே தொலைந்து போயிருப்போம். அது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்குக் கைகொடுப்பது தான் குறிச்சொற்கள். தேடும் நபரை கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருப்பாரே, என்பீல்ட் புல்லட்ல போவாரே என்றோ, கரகாட்டக்காரன் படத்துல கனகா அப்பாவா வருவாரே என்றோ நிச்சயம் அடையாளம் சொல்ல முயற்சித்திருப்போம். இவற்றுள் "கருப்பு, பயங்கரம், என்பீல்ட் புல்லட், கரகாட்டக்காரன், கனகா அப்பா" ஆகியவை தான் குறிச்சொற்கள்.
இணையம் என்பது கிட்டத்தட்ட மேல்திருப்பதி மாதிரி. நாம் தேடும் மொட்டைத்தலையைக் கண்டுபிடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டமான வேலைக்குத் தோள் கொடுக்கும் தோழன் தான் தேடுபொறிகள் (search engines). தேடுபொறிகள் எப்படி செயல்படுகின்றன?. தேடுபொறிகள் தங்களுக்கென பிரத்யேகமான அட்டவணையைப் பராமரித்து வருகின்றன. அந்த அட்டவணையில் இணையத்தளங்களின் உரல்களும், அவற்றின் குறிச்சொற்கள் மற்றும் பொதுத்தகவல்கள் ஆகியவை சேமிக்கப்பட்டிருக்கும். நாம் தேடுபொறிகளில் தேடும் போது பயன்படுத்தும் சொற்கள் எந்தெந்த இணையத்தளத்தின் குறிச்சொற்களுடன் ஒத்துப்போகிறதோ அவற்றைத் தான் நாம் தேடல் முடிவுகளாகக் காண்கிறோம்.
இந்த தேடல் முடிவுகள் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் தான் அளிக்கப்படுகின்றன. எப்படி? ஒவ்வொரு இணையத்தளத்தையும் தேடுபொறிகள் மதிப்பீடு (site rank) செய்து வரிசைப்படுத்துகின்றன. இந்த மதிப்பீடு ஒரு இணையத்தளத்தின் சராசரி வருகையாளர் எண்ணிக்கை, பக்கங்களின் கட்டமைப்பு, குறிச்சொற்களுக்கும் பக்கங்களின் தகவல்களுக்கும் உள்ள தொடர்பு, மற்ற தளங்களில் இருந்து தொடர்புக்கு கொடுக்கப்படும் உரல்கள் ஆகியவற்றை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. sms ஜோக்குகளுக்கு நடிகர் விஜய் எவ்வளவு முக்கியமோ அதைவிட இணையத்தளங்களுக்கு வருகையாளர்கள் முக்கியம். இன்றைய இணையப்பயன்பாட்டில் பெரும்பாலான வருகைகள் தேடுபொறிகள் மூலமே கிடைப்பதனால் இணையத்தில் குறிச்சொற்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
தேடுபொறிகள் பார்வையில் ஒரு இணையத்தளம் எவ்வாறு தெரியும்?. உரல்களும், குறிச்சொற்களும் சேர்ந்த ஒரு கலவையாக மட்டுமே பார்க்கப்படும். அதனால் தான் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் குறிச்சொற்கள் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பொருட்களைச் சந்தைப்படுத்தும் இணையத்தளங்களுக்கு இவைதான் உயிர். இணையத்தளத்திற்கு சரியான குறிச்சொற்களைத் தேர்ந்தெடுத்தல், இணையத்தளத்தின் பக்கங்களுடைய தொடர் கட்டமைப்பு (sitemap) மற்றும் தேடுபொறிகளின் முடிவுகளில் முதல் இடத்தை அல்லது குறைந்த பட்சம் முதல் பக்கத்திலாவது இடம்பிடிப்பது போன்ற வேலையைச் செய்வதற்கென்றே ஒரு துறை இருக்கிறது (search engine optimization).
இங்கு இணையத்தளங்கள் என்று குறிப்பிடப்படும் வார்த்தையில் ப்ளாக்கர் பதிவுகளும் அடங்கும். அம்மா என்றால் அன்பு என்பது போல தேடுபொறி என்றால் முதலிடத்தில் கூகுள் இலகுவாக வந்து நிற்பது தவிர்க்கமுடியாத ஒன்று. கூகுள் இணையத்தளம் ஒரு நாள் முடக்கப்பட்டால் இணைய உலகம் உடுக்கை இழந்தவன் கைபோல் தவித்துப் போய்விடும் அளவுக்கு இணையத்தில் கூகுளின் வீச்சு அதிகம். ஒரு ப்ளாக்கர் பதிவராக உங்கள் பதிவுகளும் தேடுபொறிகளில் நல்ல இடத்தைத் துண்டு போட்டு பிடிக்க என்ன செய்வது? முக்கியமாக கூகுளின் பார்வையில் உங்கள் பதிவுகளை மேம்படுத்துவது எப்படி?.
முதலில் ப்ளாக்கர் இணையத்தளத்தில் பதிவைத் துவங்குவதன் மூலமாக உங்கள் பதிவின் பெயர் தேடுபொறியில் குறிச்சொல்லாக சேர்க்கப்பட்டு விடுகிறது. மேலும் நீங்கள் இணைந்து கொள்ளும் திரட்டிகளின் வாயிலாக உங்கள் பதிவின் தலைப்புகள் மற்றும் லேபிள்கள் குறிச்சொற்களாக சேர்க்கப்படுகின்றன. இருந்தாலும் தேடுபொறிகள் மூலம் பெறப்படும் வருகையாளர்களுக்கு உங்கள் பதிவுகளுக்கு திரட்டிகளின் மூலமாகவோ அல்லது ப்ளாக்கர் தளத்தின் மூலமாகவோ சேர்க்கப்படும் குறிச்சொற்கள் நீங்கள் எழுதும் தகவலகளை எந்த அளவுக்கு சம்பந்தப்படுத்திக் காட்டும் என்பது நிச்சயமில்லை. தரமான குறிச்சொற்களின் மூலம் தேடுபொறிகளின் மூலம் உங்கள் பதிவுகளைத் தேவையான பயனாளர்களுக்கு எளிதாக சேர்க்கலாம். இந்த குறிச்சொற்களை நம் விருப்பத்திற்கேற்ப நாமே நமது பதிவுகளுக்கு எப்படி வழங்குவது? குறிச்சொற்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? இவற்றுக்கு கூகுள் எவ்வாறு உதவுகிறது போன்றவைப் பற்றி அடுத்த பகுதியில்.....
19 comments:
அருமை ..........
நன்றி உலவு :)
பொதுவாக blogs சை சாதரணமான websites போல search engines தரபடுதுவது இல்லை; SEO வை பற்றி நல்ல சொல்லிருகிரிங்க அடுத்த பதிவை எதிர்பார்கின்றேன்
சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.
டெக்னிக்கல் பதிவைகூட சுவைபட எழுதும் உங்களைக் கண்டு......
சற்று பொறாமைகூட வருகின்றது.
:)
பயனுள்ள புதிய தகவல் சுடுதண்ணி அண்ணே!
சைட் மேப்பை பத்தி மலரும் நிலைவுகள்
கல்லூரி படிக்கும் போது பிகரை கவர் செய்வதில் நண்பர்களுக்குள் மன வருத்தம் வர கூடாது என்று எங்களுக்குள் பேசி சைட் மேப்
தயாரிப்போம் இதில் ஒருவருடைய ஏரியாவில் மற்றவர் எந்த காரணம் கொண்டு தலையிட கூடாது என்ற ரகசிய காப்பு பிரமாணம் எடுத்தவுடன் மிக தெளிவான சைட் மேப் கிடைக்கும். இதன் உதவியுடன் நமக்கு தேவையான பல ரகசிய தகவல் இருக்கும்.
தல
அந்த பாப்பா ( டி - ஷர்ட் ) போட்டோ போட்டு புரிஞ்ச எல்லாத்தையும் கொலப்டீங்க
//ஸ்ரீநி said...
தல
அந்த பாப்பா ( டி - ஷர்ட் ) போட்டோ போட்டு புரிஞ்ச எல்லாத்தையும் கொலப்டீங்க
//
நான் சொல்ல நினைச்சது
ஹிஹிஹிஹி..
அவர் முந்திகிட்டாரு
இருந்தாலும் கேட்பேன்.
அந்த டீ-சர்ட் கழட்டுற பொண்ணுதான் கூகிள் புரப்பரேட்டரா தல???
Useful article.
நல்லாருக்குங்க! நிறைய எழுதுங்க...
பிரபாகர்.
Arputham. Expecting more more..
உண்மை தான் எப்பூடி. வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பா :)
நன்றி முத்துலெட்சுமி :).
நன்றி தலைவா @ எம்.எம்.அப்துல்லா :D
சைட்மேப் பற்றி விரைவில் விளக்கமாக, விலாவரியாக, விரிவாக உடனே எழுதவும் ;) @புதுவை சிவா :)
நல்லா இருந்தா கண்ணுக்கழகு @ ஸ்ரீநி :D
நண்பா, ரொம்ப நாளா ஆளைக்காணோம். அந்த பொண்ணு தான் அந்த பொண்ணு தான் :)) @ அகல்விளக்கு
நன்றி கௌதமன் :)
நன்றி பிரபாகர் :)
நன்றி ரவுசு :)
ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி....
சற்று பொறாமைகூட வருகின்றது
கூடவே பெருமையும்
உங்கள் மின் அஞ்சல் தெரிவிக்கவும்
texlords@gmail.com
SEO பீல்டுலையா இருக்கீங்க... நானும் சில காலம் இது வேலைபார்த்தேன். நீங்க எழுதியிருப்பது படிப்பவர்களுக்கு எளிதாக புரியும் படிஉள்ளது. சரியாக உள்ளது. அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன்.
supperppa
நன்றி ஜோதிஜி :)
நன்றி பிரதாப்.. SEO கொஞ்ச நாள் பழக்கம் மட்டுமே ;). தொடர்ந்து வாருங்கள்...
நன்றி குமரன். மிக்க மகிழ்ச்சி...
supperppa...........
By: http://focuzkeralam.blogspot.com
Post a Comment