Monday, December 21, 2009

கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 (முற்றும்)


இணையத்தில் இருக்கும் ஒவ்வொரு தளமும், பதிவுகளும் கிட்டத்தட்ட மேலே படத்தில் இருக்கும் கண்ணாடி அறை போலத்தான். வருகையாளர்கள் உங்கள் படைப்புகளைப் பார்க்க முடியுமே தவிர உள்ளிருக்கும் உங்களை அல்ல. உங்களால் வருகையாளர்கள் எவற்றைக் கவனிக்கிறார்கள், எந்தப் படைப்புகள் பெரும்பாலோனோரை ஈர்க்கிறது, எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு உங்கள் தளமோ/பதிவோ குறித்து எப்படி தெரிந்து கொண்டார்கள் ஆகியவற்றை உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளாமலே கண்டுகொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பதிவினைப் பார்ப்பவர்களின் பார்வையினை அலசிக் காயப்போட்டு நீங்களே தங்கள் பதிவினை சுயப்பரிசோதனை செய்து சலவை செய்து வெளுப்பாக்கிக் கொள்ள முடியும்.

இப்படி தங்கள் பதிவைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. முதலில் முக்கியமான ஒன்றான, உங்கள் பதிவுக்கு தங்கள் தளங்கள்/பதிவுகளில் உரல் கொடுத்துள்ள நல்ல உள்ளங்கள் யார், யார் என்பதை எப்படி அறிவது?, கூகுளுக்குச் சென்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் "link: yourblogname. blogspot.com" என்று மனு போட்டால் மறுகணம் தகவல்களைப் பெறலாம்.

இவற்றைத் தவிர நமக்கு உதவும் பொருட்டு கூகுள் இலவசமாக வழங்கும் இரண்டு சேவைகள் குறித்து பார்ப்போம். உங்கள் தளத்தின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது, கூகுளின் crawler நிரல் உங்கள் பதிவுக்கு வந்து போன விவரம் ஆகியவைக் குறித்து அறிந்து கொள்ள google webmasters மற்றும் வருகையாளர்கள் குறித்தான அலசலுக்கு google analytics.

Google webmaster சேவையினைப் பயன்படுத்த உங்கள் ப்ளாக்கர் பதிவின் dashboard -> tools and resources -> webmaster tools -> enable webmaster tools என்ற இடத்திற்கு சென்று உங்கள் பதிவை இணைத்துக் கொள்ளலாம். அல்லது http://www.google.com/webmasters/ என்ற உரலுக்குச் சென்று adding a site -> verfiy through meta tags வசதியின் மூலமும் உங்கள் பதிவினை இணைத்துக் கொள்ளலாம். பின்னர் அதிலுள்ள வசதிகள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்து பார்த்து சில நாட்கள் விளையாண்டால் ஓரளவு அனைத்து விவரங்களும் கைவரப்பெறலாம்.

அதே போல் google analytics சேவையினைப் பயன்படுத்த http://www.google.com/analytics/ என்ற உரலுக்குச் சென்று add new website profile என்பதைத் தேர்வு செய்து உங்கள் பதிவின் உரலை உள்ளிடவும். உடனே உங்கள் பதிவுக்கான நிரல் ஒன்று வழங்கப்படும். நிரலுக்கு அருகில் 'one domain with multiple subdomains' என்பதைத் தேர்வு செய்து விட்டு அதன் பின் நிரலை பிரதியெடுத்து உங்கள் பதிவின் 'dashboard -> layout -> edit html' என்ற இடத்திற்கு சென்று < / body > என்ற இடத்திற்கு முன்பாக உள்ளிட்டு சேமித்து விட்டால் வேலை முடிந்த்தது. 24 மணி நேரம் கழித்து google analytics சென்று பார்த்தால் வருகையாளர்க்ள் புருவம் உயரும் வண்ணம் விவரங்கள் காணலாம்.

மேற்சொன்ன இரண்டு சேவைகளுமே இலவசம் மற்றும் உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலமே பதிவு செய்து கொள்ள முடியும் என்பது தனிச்சிறப்பு. இவற்றைப் பயன்படுத்தி வீடுபேறு அடைந்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பின்னூட்டத்தில பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அல்லது வழக்கம் போல் மவுனமாகப் பயனடைந்தால் மிகமிக மகிழ்ச்சி.

கடைசியாக google sandbox effect குறித்து ஒரு சிறு அறிமுகம் (நன்றி: புதுவை சிவா).தேடுபொறிகள் தரப்படுத்தப் பயன்படுத்தும் நிரல்களே அவர்களின் தொழில்ரகசியம். அவற்றைப் பற்றி எப்போதும் வெளிப்படையானத் தகவல்கள் காணக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் பல தளங்களை நடத்தி வருகிறார். மேலும் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். புதிய தளத்தினை தேடுபொறிகளின் தரப்பட்டியலில் குபீரென்று மேலே கொண்டு செல்ல புதிய தளத்தின் உரல்களைத் தன் வசமுள்ள தளங்கள் அனைத்திலும் இடுகிறார். இவ்வாறு திரைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே மாபெரும் வெற்றி என விளம்பரங்கள் வருவதைப் போல குறுகிய கால அவகாசத்தில் தரப்பட்டியலில் அசாதரணமாக முன்னேறும் தளங்களை கூகுள் வேண்டுமென்றே 3 முதல் 6 மாதங்கள் வரை அடக்கி வைக்கிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது, அதற்கு பெயர் தான் sandbox effect. இதில் இருந்து தப்பிக்க பொறுமையாக 6 மாதம் பார்க், பீச் என்று ஊர்சுற்றி விட்டு வந்தால் தவிர வேறு வழியில்லை. எல்லா தளங்களுக்கும் இது போல நிகழ்வதில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கூகுள் 'எங்களின் நிரல்களின் செயல்பாட்டில் சிலக் குறிப்பிட்ட துறைகள் சம்பந்தப்பட்ட தளங்களுக்கு இவ்வாறு நேர வாய்ப்பிருக்கலாம், இது குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்' என்று பட்டும் படமாலும், தொட்டும் தொடாமலும் பொறுப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது.

இப்பகுதியோடு இத்தொடர் நிறைவு பெறுகிறது. தேடுபொறிகளில் தங்கள் பதிவுகளை உயர்த்திக் காட்ட விரும்பும் அன்பர்களின் பயனுக்கும், தேடுபொறிகளின் செயல்பாடு குறித்தான புரிதலுக்கும் இத்தொடர் உதவியிருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கும், கம்பெனிக்குத் தெம்பூட்டும் விதத்தில் பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கும் சுடுதண்ணியின் நன்றிகள்.

மேலதிக விவரங்கள் தேவைப்பட்டாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

16 comments:

அறிவிலி said...

Once again a useful one. Thanks

mnalin said...

Google webmasters, Google analytics போன்ற tool களையும் தொட்டது பதிவு முழுமை பெறுகின்றது அசத்திடிங்க போங்க. ad sense சை பற்றி எழுதினால் எப்படி இருக்கும் சுடுதண்ணி ?...... ;)

சுடுதண்ணி said...

நன்றி அறிவிலி :)

ஊக்கத்துக்கு மிக்க நன்றி எப்பூடி :). நல்ல யோசனை, விரைவில் எழுத முயற்சிக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

மகா said...

thanks for the nice post.....

சுடுதண்ணி said...

மிக்க நன்றி மகா :)

வேலன். said...

நல்ல உபயோகமான தகவல் நண்பரே...
தொடர்ந்து நல்ல தகவல்கள் தாருங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

அகல்விளக்கு said...

தொடர்ந்து யூஸ்புல்லான மேட்டர்களை வழங்கி வருவதற்கு நன்றி தல...
:-))))

சுடுதண்ணி said...

நன்றி மகா :)

ஊக்கத்துக்கு மிக்க நன்றி வேலன் :)

நன்றி நண்பா.. சங்கமம் செய்திகள் குறித்து மகிழ்ச்சி :) @ அகல்விளக்கு

ஸ்ரீராம். said...

உபயோகமான பதிவு.Thanks.

puduvaisiva said...

வணக்கம் சுடுதண்ணி அண்ணே

பல மாதங்களாக தேடிய விளக்கத்தை தந்ததற்கு நன்றி!

தாமதமாக பின்னோட்டம் இட்டதற்கு மன்னிக்கவும்

சுடுதண்ணி said...

நன்றி @ ஸ்ரீராம் :)

நன்றி @ ஜோதிஜி :)

மிக்க நன்றி சிவா தம்பி :D... எப்பொழுது வந்தாலும் தங்கள் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சியே :)

நீச்சல்காரன் said...

கம்பெனிக்காக கமெண்டெல்லாம் இடமுடியாது நண்பரே! காரணம் என் கம்பெனியில் படிக்கமட்டுமே முடியும். தொடரட்டும் உங்கள் பணி feedல் தொடருகிறேன் இனி.

மைக் முனுசாமி said...

thanks for most useful information. I am late but latest.. hi hi hi

Aranga said...

நன்றி நண்பரே , மிக உபயோகமாக இருந்தது ,

சுடுதண்ணி said...

மிக்க நன்றி நீச்சல்காரன், முனுசாமி, அரன். தொடர்ந்து வாங்க :)

Unknown said...

நன்றி