Thursday, December 3, 2009

மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 2


கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செந்தில் ஒரு கேள்வி கேட்பார், 'அண்ணே, இந்த கார் வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாருண்ணே வச்சிருக்கா' அப்படின்னு. கிட்டத்தட்ட அதே மாதிரியான கேள்விக்குத் தான் நாம் இப்பொழுது விடை காணப்போகிறோம். நாம் தேடப்போவது சொப்பன சுந்தரியை அல்ல.. அந்த காரை (மின்னஞ்சல்) யார் யாரெல்லாம் வச்சிருந்தாங்க என்ற கேள்விக்கான பதிலை.

பொதுவாக மின்னஞ்சல் நேரடியாக ஒருவரிடமிருந்து வரலாம் அல்லது 'சாமி கண்ணைக் குத்தும், 18 பேருக்கு அனுப்பு' அல்லது கோலாவில் கழிப்பரை சுத்தம் செய்வது போன்ற வகையிலான முன்பகிர்வு மின்னஞ்சலாகவும் (forwarded emails) இருக்கலாம். எப்படி இருப்பினும் மின்னஞ்சலின் மூலத்தை (origin) மிக எளிதாக கண்டுபிடிக்கலாம். எப்படி கண்டுபிடிப்பது? , ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் தலைப்பகுதி (header) என்று ஒன்று இருக்கும். அவற்றில் ஒரு மின்னஞ்சல் ஓவ்வொரு முறையும் ஒரு முகவரியிலிர்ந்து இன்னொரு முகவரிக்கு பயணிக்கும் போது அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் (I.P Address), உபயோகப்படுத்திய மின்னஞ்சல் சர்வர், சர்வரில் அந்த மின்னஞ்சலுக்கான பதிவு எண், தேதி, நேரம், நாள், நட்சத்திரம் இவையெல்லாம் பதிவாகும்.

உதாரணத்திற்கு ஒரு மின்னஞ்சலின் தலைப்பகுதி கீழேக் கொடுக்கப்பட்டிருப்பது போல இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைக்கேற்ப சிறிது மாறுபடலாம்.



மேலே உள்ள தலைப்பகுதியில் Received என்ற பகுதி மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். இந்த Received என்று தலைப்பிட்ட பகுதிகள் தான் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டுபிடிக்க நமக்கு உதவப் போகிறது. முதலில் ஒருவர் அனுப்பும் மின்னஞ்சல் எப்படி பெறுநரிடம் சென்றடைகிறது என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் சேர வேண்டிய இடத்தைப் பொருத்து சில/பல மின்னஞ்சல் சர்வர்களில் பயணித்தே பெறுநரைச் சேர்கின்றது (trace route). ஓவ்வொரு முறையும் இடம் விட்டு இடம் தாவும் போதும் ஒரு Received தகவல் மின்னஞ்சலின் தலைப்பகுதியில் சேர்க்கப்படும். இந்த trace route குறித்து கீழ்காணும் முறையில் நீங்களே பரீட்சித்துப் பார்க்கலாம். மிக எளிது.

Start -> Run என்ற இடத்திற்கு சென்று cmd என்று உள்ளிடவும். உங்கள் திரையில் command prompt window தோன்றும். அதில் tracert "IP ADDRESS" அல்லது tracert "DOMAIN NAME" என்று உள்ளிட்டு Enter பொத்தானை அமுத்தினால் வரிசையாக உங்கள் இணைய இணைப்பின் மூலம் உங்கள் தகவல் பறிமாற்றம், கொடுக்கப்பட்ட வலையிணைப்பு முகவர் எண்ணுக்கோ அல்லது வலைத்தளத்திற்கோ எப்படியெல்லாம் பயணிக்கிறது, பயணிக்கும் இடங்களின் வலையிணைப்பு முகவர் எண் அனைத்தையும் காணலாம். நாம் ஒரு முகவரிக்கு அனுப்பும் மின்னஞ்சலும் இம்முறையிலேயே உங்கள் மின்னஞ்சல் சர்வருக்கு சென்று அங்கிருந்து பெறுநரின் மின்னஞ்சல் சர்வருக்கு சென்று அதன் பின் அவர் மின்னஞ்சலைச் சென்றடைகிறது. ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உதா. tracert tamilmanam.net, பார்க்க படம் (க்ளிக் செய்து பெரிது படுத்து பார்க்கவும்).


மின்னஞ்சலின் செயல்பாடு குறித்து பார்த்தாகி விட்டது. உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது , அதன் தலைப்பகுதியை எவ்வாறு ஆய்வு செய்து அதன் மூலத்தைக் (origin) கண்டுபிடிப்பது என்று பார்ப்போம். மின்னஞ்சல் ஒவ்வொரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்லும் போது Received தகவல் பதிவு செய்யப்படுவது குறித்துப் பார்த்தோம். பொதுவாக இப்பதிவுகள் கீழிருந்து மேலாகப் பதிவு செய்யும் முறை பின்பற்றப் படுகிறது. உதாரணத்திற்கு ஒரு மின்னஞ்சல் மூன்று நபர்களைத் தாண்டி உங்களிடம் வந்தடைகிறது என்று வைத்துக் கொண்டால் அதன் தலைப்பகுதியில் பல Received தலைப்பிட்டத் தகவல்களைக் காணலாம். அந்த மின்னஞ்சல் முதன் முதலில் யாரிடமிருந்து புறப்பட்டது என்பதை அறிய கடைசியாக இருக்கும் Received தகவலைச் சோதிக்க வேண்டும் (பார்க்க படம்). அதில் அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் இருக்கும், அதனை எடுத்து அந்த எண்ணுக்கான நாட்டினையோ, ஊரையோ மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். வலையிணைப்பு எண்ணைக் கொடுத்தால் அதன் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருணா வகை வலைத்தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. கூகிளாடிப் பார்த்துத் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணம்: http://www.melissadata.com/Lookups/iplocation.asp

அவ்வளவு தான் இப்பொழுது நீங்கள் மின்னஞ்சலின் தலைப்பகுதியை ஆய்வு செய்வதற்கு முழுமையாகத் தயாராகி விட்டீர்கள். இன்னும் ஒரே ஒரு விஷயம் அதுவும் முக்கியமான விஷயம் தான் மிச்சம். இந்த மின்னஞ்சலின் தலைப்பகுதியை எவ்வாறு பார்ப்பது. மின்னஞ்சலின் தலைப்பகுதியைப் பார்வையிடுவது நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை (yahoo/hotmail/gmail) அல்லது மின்னஞ்சல் பயனாளர் மென்பொருட்கள் (email clients: outlook/outlook express/thunderbird) இவைக்கேற்ப மாறுபடும்.

மின்னஞ்சலின் தலைப்பகுதியைப் பார்வையிடுதல், மின்னஞ்சல்களில் மோசடி செய்பவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்கப் பின்பற்றும் வழிமுறைகள் மற்றும் எடுத்துக்காட்டாக ஒரு மின்னஞ்சல் ஆய்வு ஆகியவை குறித்து இறுதிப் பகுதியில்.


பி.கு: இத்தொடர் முடிந்ததும் மின்னஞ்சல் ஆய்வு குறித்து ஒரு போட்டி வைப்பதாகவும், வெற்றி பெறுபவர்களுக்கு Google Waves Invitation பரிசாக அனுப்புவதாகவும் சுடுதண்ணிக்கு எண்ண்ங்கள் அலைபாய்கிறதென்பதையும்,அது குறித்து உங்கள் கருத்துக்களை போகும் போது பின்னூட்டங்களில் குமுறி விட்டுப் போகுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.







14 comments:

பாரதி said...

நல்ல தகவலுகு நன்றி

அகல்விளக்கு said...

//பி.கு: இத்தொடர் முடிந்ததும் மின்னஞ்சல் ஆய்வு குறித்து ஒரு போட்டி வைப்பதாகவும், வெற்றி பெறுபவர்களுக்கு Google Waves Invitation பரிசாக அனுப்புவதாகவும் சுடுதண்ணிக்கு எண்ண்ங்கள் அலைபாய்கிறதென்பதையும்,அது குறித்து உங்கள் கருத்துக்களை போகும் போது பின்னூட்டங்களில் குமுறி விட்டுப் போகுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.//

போட்டிக்கு ரெடி தல...

எப்பன்னு சொல்லுங்க.. (எனக்கு யாரும் invitation அனுப்ப மாட்டேன்றாங்க தல)

சுடுதண்ணி said...

மிக்க நன்றி பாரதி, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் :).

நாளைக்கே வச்சிரலாம் நண்பா :)... @ அகல்விளக்கு

ரவி said...

சூப்பர்...!!!!!!!!!!!

தொடர்ந்து நிறைய எதிர்பார்க்கிறேன்...!

தமிழினியன் said...

அருமையா எளிமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

//வலையிணைப்பு எண்ணைக் கொடுத்தால் அதன் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருணா வகை வலைத்தளங்கள் ஏராளமாக இருக்கின்றன.//

அதிலும் இந்த வரிகள் அருமையோ அருமை

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி ரவி :). முடிந்த அளவு அதிகம் எழுத முயற்சிக்கிறேன்.

மிக்க நன்றி தமிழினியன் (பெயர் அருமை) :)..

puduvaisiva said...

நண்பர் சுடுதண்ணிக்கு வணக்கம்
இன்றுதான் உங்கள் பதிவை படிக்க வாய்பு கிடைத்தது
இந்த பதிவு மற்றும் சில பழைய பதிவையும் படித்தேன்
அனைத்தையும் மிக ரசனையுடன் தக்க விளக்கத்தையும் தந்துள்ளிர்கள்
எனது நன்றியையும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுடுதண்ணி said...

வணக்கம் சிவா. வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

அறிவிலி said...

போட்டிக்கு நான் ரெடி.. நடத்துங்க...

ஜோதிஜி said...

சூப்பர்...!!!!!!!!!!!

தொடர்ந்து நிறைய எதிர்பார்க்கிறேன்...

உள்ளே வந்தா இத்தனை ஜில்ன்னு தண்ணீர் இருக்கிறது. இத்தனை நாள் விட்ட வருத்தம்.

ரவியை வழிமொழிகின்றேன்.

சுடுதண்ணி said...

மிக்க நன்றி ஜோதிஜி.. உங்கள் ஊக்கமும், பாராட்டும் தெம்பூட்டுகிறது :)

C/O TAMILEEZHAM said...

" வலையிணைப்பு எண்ணைக் கொடுத்தால் அதன் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருணா வகை
வலைத்தளங்கள் ஏராளமாக இருக்கின்றன"


u r rock

Mujahidh Haseem said...

good articles....just new to ur blog..catch from tamilnet..
expect some more articles in various topics..
best of luck....

srinivasan said...

டைமிங்க வந்தாலும் ரைமிங்க ஒரு நல்ல பதிவு . நாங்க எங்க குமுருறது நீங்க தான் எங்கள குமுற வைக்கிறிக !