Saturday, December 5, 2009

கூகுள் வேவ்ஸ் - பரிசுப் போட்டி

"மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள்", தொடர்பதிவு நிறைவுற்றதை முன்னிட்டு இப்போட்டி. சரியான பதில் கூறி வெற்றி பெரும் நண்பர்களுக்கு கூகுள் வேவ்ஸ் அழைப்பு அன்புடன் அனுப்பி வைக்கப்படும். சரியான பதிலை அதிக நண்பர்கள் சொல்லியிருந்தால் பதில் அனுப்பிய வரிசைப் படி மற்றும் கைவசம் இருப்புள்ள கூகுள் வேவ்ஸ் அழைப்புகளின் எண்ணிக்கையைப் பொருத்து வெற்றி பெரும் நண்பர்கள் அறிவிக்கப் படுவார்கள்.

போட்டி என்னன்னா.. கீழே ஒரு மின்னஞ்சலின் தலைப்பகுதி (email header) கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலின் மூலம் என்ன?, அதாவது அந்த மின்னஞ்சல் எந்த வலையிணைப்பு முகவர் எண்ணிலிருந்து (ip address) அனுப்பப்பட்டது மற்றும் அந்த எண்ணுக்குரிய ஊர், நாடு எது.. ஆகிய தகவல்களை mannan8796@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

பதில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 07 டிசம்பர் 2009.

போட்டின்னு பார்த்ததும் குபீர்ன்னு முதன்முறையாக சுடுதண்ணியை எட்டிப் பார்த்தவர்கள் கீழ்கண்ட பதிவுகளைப் படித்து புரிதல் ஏற்பட்ட பிறகு (புரியும்னு நம்புறேன்), போட்டியில் கலந்து கொள்ளலாம்.






போட்டிக்கான மின்னஞ்சல் தலைப்பகுதி:


Delivered-To: someone@gmail.com
Received: by 10.114.75.20 with SMTP id x20cs459741waa;
Fri, 16 Mar 2010 06:01:56 -0700 (PDT)
Received: by 10.90.79.6 with SMTP id c6mr1637548agb.1174050116362;
Fri, 16 Mar 2010 06:01:56 -0700 (PDT)
Return-Path:
Received: from Login.somecompany.com (login.somedomain.com [12.161.222.58])
by mx.google.com with ESMTP id 34si2015971agc.2010.03.16.06.01.55;
Fri, 16 Mar 2010 06:01:56 -0700 (PDT)
Received-SPF: pass (google.com: best guess record for domain of none@somedomain.com designates 12.161.222.58 as permitted sender)
X-ASG-Debug-ID: 1174050547-577d00e80000-eer621
X-Barracuda-URL: http://login.somedomain.com:80/cgi-bin/mark.cgi
X-Barracuda-Connect: unknown[196.12.47.141]
X-Barracuda-Start-Time: 1174050547
Received: from igin0111.in.somedomain.com (unknown [196.12.47.141])
by Login.somedomain.com (Spam Firewall) with ESMTP
id 979D0D6F6F; Fri, 16 Mar 2010 09:09:07 -0400 (EDT)
Received: from IGIN0117.in.somedomain.com ([10.254.3.229]) by igin0111.in.somedomain.com with Microsoft SMTPSVC(5.0.2195.6713);
Fri, 16 Mar 2010 18:31:51 +0530
X-MimeOLE: Produced By Microsoft Exchange V6.5
Content-class: urn:content-classes:message
MIME-Version: 1.0
Content-Type: multipart/alternative;
boundary="----_=_NextPart_001_01C767CB.438EC957"


பங்குபெறப் போகும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், சும்மா படித்து விட்டு காற்று வரும் பொருட்டு கிளம்பும் பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்.

5 comments:

அறிவிலி said...

கொஞ்சம் குழப்புது, இருந்தாலும் பதில் அனுப்பி இருக்கேன்.

சுடுதண்ணி said...

பதில் கிடைத்தது நண்பா.. வெற்றி பெற வாழ்த்துக்கள் ;). போட்டியில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி :)

சுடுதண்ணி said...

போட்டியில் வரலாறு காணாத அளவுக்கு இருவர் மட்டுமே இதுவரை பங்குபெற்றிருப்பதாலும், இன்னும் வேவ்ஸ் அழைப்புகள் மிச்சமிருப்பதாலும் பதில்களை காலவரையின்றி எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம் என்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கம் முன்னிலையில் கேட்டுக்கொள்கிறோம் :D.

இது வரை பங்கு பெற்ற உயர்ந்த உள்ளங்கள் அறிவிலி மற்றும் கனககோபி இருவருக்கும் கூகுள் வேவ்ஸ் அழைப்பு விரைவில் அனுப்பப்படும்.

இச்சந்தர்ப்பத்தில் மின்னஞ்சல் தொடர் இருவருக்காவது புரியும் வகையில் எழுதியதை நினைத்து சுடுதண்ணி பெருமகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்து விடை பெறுகிறது..வணக்கம்.

goindu said...

Pathil anuppi irukken

Parthu seyyunga

govindaraj

சுடுதண்ணி said...

உங்கள் சரியான பதில் கிடைத்தது கோவிந்த். பங்குபெற்றமைக்கு மிக்க நன்றி.

வேவ்ஸ் அழைப்பு விரைவில் உங்களைச் சேரும் :).