உங்களிடம் இரண்டு கணினிகள் இருக்கின்றதா? கோப்பு பறிமாற்றத்திற்கு சிரமப்படுகிறீர்களா? உங்களுக்கான தீர்வைக் குறைந்த செலவில் எப்படி அடைவது என்று காண்போம்.
இரண்டு கணினிகளும் மடிக்கணினிகளாகவோ அல்லது மேசைக்கணினிகளாகவோ அல்லது ஒன்று இதுவும், மற்றது அதுவுமாகவோ இருக்கலாம். ஆனால் எண்ணிக்கை இரண்டு மட்டுமே இத்தீர்வில் சாத்தியம். switch/hub போன்ற உபகரணங்கள் தேவையில்லை, எனவே வீண் செலவின்றி இரண்டு கணினிகளுக்கு இடையே வலையமைப்பு செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
குறுக்கிணைக்கப்பட்ட CAT5 வடம் (நீளம் தேவைக்கேற்ப), Windows XP நிறுவப்பட்ட இரண்டு கணினிகள் (available with Network Card) :D.
குறுக்கிணைக்கப்பட்ட CAT5 வடம் (crosswired cat5 cable with rj45 Jack) என்று கேட்டு தேவைக்கேற்ற நீளத்தில் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். ரொம்ப பொழுதுபோகாமல் இருந்தால் சொந்தமாக நாமே கூட தயார் செய்து கொள்ளலாம். தெரிந்து கொள்ள விரும்புவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் தனிப்பதிவாக வ்ழங்கப்படும்.
முதல் கணினியில் control panel -> network connections என்ற இடத்திற்கு செல்லவும். அங்கு Local Area Connection என்ற நிரலை வலது பக்கமாக சொடுக்கி, properties என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்துத் தோன்றும் படிவத்தில் 'Internet Protocol (TCP/IP)' என்பதனை தேர்வு செய்து விட்டு 'Properties' என்ற பொத்தானை அமுக்கவும்.
பின் IP Address :192.168.1.2, Subnet mask: 255.255.255.0, Default Gateway : 192.168.1.1 என உள்ளிடுகளை வழங்கவும். மேலும் விபரங்களுக்குப் படங்களை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.
அதே செயல்களை அடுத்த கணினியிலும் அச்சுப் பிசகாமல் செய்யவும், கடைசியில் கொடுக்கும் உள்ளிடுகளைத் தவிர. இரண்டாவது கணினியில் IP Address :192.168.1.3, Subnet mask: 255.255.255.0, Default Gateway : 192.168.1.1 என்று வழங்கவும்.
பின்னர் தயாராக இருக்கும் CAT5 வடத்தை உபயோகித்து இரண்டு கணினிகளின் 'Network Card' மூலம் இணைக்கவும்.
எல்லாம் தயார். இனி எந்த ஒரு கணினியிலும் தேவையான தொகுப்பை (directory) வலதுபுறம் சொடுக்கினால் பகிர்ந்து அளிக்கும் வசதி உள்ளது (sharing). அதனைப் ப்யன்படுத்தி கோப்புக்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளலாம்.
முற்றும்.
22 comments:
உபயோகமான பதிவு..
ஊக்கத்துக்கு மிக்க நன்றி சங்கர் :)
Good & useful Article
thx
How to connect two computer connected through Hub which connected with inet?
one Laptop with Vista ( Wifi)
another Desktop with XP
நன்றி சசிதரன். உங்களுக்கு இப்பதிவு உபயோகமாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.
நன்றி யூர்கன் (கேள்விப்படாத பெயர், எங்க பிடிச்சீங்க).
Hi yasavi
thanks for visiting and very glad to clarify ur question. If both the systems you mentioned are sharing the internet from the hub/router, then they are already connected. you should be able to start sharing the directories with your existing setup.
Check ur 'My network places'.
If it doesnt work, note down the ip addresses of the both the system and try to ping them each other.
run->cmd> ping (ip address.)
see if they r talking.
mail (mannan8796@gmail.com) me if you hv any pbm persists or else post a comment here.
thnx again.
ந
ன்றி சுடுதண்ணி. நான் இப்போதுதான் proxy masking பார்த்தேன். உபயோகப்படுத்திப் பார்க்கிறேன். work out ஆனால் hulu, pandora பார்க்கலாம்.
அப்புறம் நமீதாவை bit படத்துக்கு உபயோகப்படுத்தியதைக் கண்டிக்கிறேன். அப்புறம் நீங்கள் சொல்லும் network sharing விஷயம் logmein.comல் இருக்கிறது என நினைக்கிறேன், வயர்லெஸ் மூலமாக. நீங்கள் சொல்வது வேறோ? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
logmein.com வழங்குவது இணையத்தில் மூலம் தொலைதூர வலையமப்பு சேவை (remote desktop through internet).
இங்கு குறிப்பிடுவது சிறு வலையமைப்பு (like LAN). இதற்கு இணைய வசதி (internet) அத்தியாவசிய்ம் இல்லை.
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. நமிதா, சும்மா ஒரு கவன ஈர்ப்புக்காக :D.. அடுத்த முறை வாய்ப்பிருந்தால் உங்களுக்கு விருப்பமான படத்தை கட்டாயம் கேட்டு வாங்கி போட்டு விடலாம் :).
மீண்டும் நன்றிகள் பல.
Thanks for the above tip.
If one of the computer is connected to Internet. Can the other computer access the internet using your above LAN connection method.
Please update me on this. { gbhasha(at)gmail(dot)com }
Thanks in advance..
Dear shaji,
yes you can share the internet using the above LAN connection except the TCP/IP settings. To share the internet..
Control Panel-> Network Connection -> "YOUR INTERNET CONNECTION" -> right click -> Properties -> Advanced ->Internet Connection Sharing -> select Allow other network users to connect through this internet. Then select the 'Home Network Selection' through which you are connecting the cable (most of the time it will be 'LAN Area Connection'.
Then connect the cable and switch on the second pc. It should automatically picks up the connection and internet thru dhcp.
thanks :)
Tried both the ways cannot works :(
yasavi
Hi Yasavi
Please mail me in detail about
what are the ip addresses?
how do u connect to internet? by one of the computer or modem/router?.
what do u see in network places?
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee ^_^ ^_^ ^_^ nice
P2P யெல்லாம் பழங்கதையாகிடுச்சுங்க.Router Wireless ல வரவெற்பரையில ஒரு கணினிய வச்சோமா படுக்கயறையில மடிக்கணினிய கொஞ்சுனோமின்னா இருந்து இப்ப PS3 தொலைக்காட்சிப் பெட்டிகிட்ட பேசுற மாதிரி நுணுக்கம் வந்திடுச்சுங்க.இணையம் மேய்வதால் உங்களது இடுகை மாதிரி பயன்கள் இருப்பதால் கற்றலின் வேகம் அதிகரிக்கிறது.நன்றி.
:)
அருமையான பகிர்தல் அப்படின்னு சொல்லிட்டு போறதைத் தவிர வேற ஏதும் சொல்ல முடியலை!
நீங்கள் சொன்னபடி கேபிள் இணைப்பு ரெடி.
டெஸ்க் டாப்பிலும் சொன்னபடி உள்ளீடு செய்து விட்டேன்.
ஆனால் டெல் இன்ஸ்பிரான் லேப் டாப்பில் னெட் ஒர்க் கனெக்ஷன் என்பதையே காணோம். திரு திரு என்று முழித்துக்கொண்டு இருக்கிறேன்.
மிக்க நன்றி ஈழம், சென்ஷி, ராஜ நடராஜன், லதானந்த் :)
நல்லா தேடிப்பாருங்க, கிடைக்கும் :D @ லதானந்த் :)
இந்த கேட்5 கேபிளில் மற்றொரு வகையில் தான் அந்த மாதிரி செய்ய முடியும் என்று எங்கோ படித்த ஞாபகம் ஆதாவது ஒரு முனையில் ஒரு மாதிரியும் மற்றொரு முனையில் வேறு மாதிரி கேபிள்(color) அமைப்பு இருக்கும்
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி வடுவூர்குமார்.
CAT5 வடங்கள் அனைத்துமே ஒன்று தான். இந்த குறுக்கிணைக்கப்பட்ட cat5 வடம் என்பது 1,3 மற்றும் 2,6 ஆகிய இணைப்புக்களை மாற்றி இணைப்பது. அதனால் தான் ஒரு முனைக்கும், மற்றொன்றுக்கும் வண்ணங்கள் வித்தியாசமாக இருக்கும்.
சிறப்பான பதிவு.
இதனை எந்த இடத்தில் மாட்டுவது, மோடத்திலா அல்லது cpu ..விலா..
Post a Comment