எல்லாவற்றுக்கும் ஓர் அற்புத நிவாரணம் தான் ஆட்டுக்கால் சூப். மூட்டு வலி இருக்கும் மூத்த பதிவர்களுக்கும், எலும்புகள் வளரும் பருவத்தில் இருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் கூட மிக அருமையான உணவு.
ஆட்டுக்கால் சூப் எப்படி வைப்பது, என்னென்ன தேவை.. நல்ல மழை அல்லது குளிர் நாளாக இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் சூடான ஆட்டுக்கால் சூப்பை ஜன்னலோரமோ அல்லது பால்கனியிலோ நின்று க்ளென்ஃபெடிச் விஸ்கியுடன் சோடா சேர்த்து அருந்துவதைப் போல் சிறிது சிறிதாக அருந்தினால் மனம் ஒருநிலைப்பட்ட தவநிலையை அடையலாம் :D.
நாலு ஆட்டுக்கால், ரெண்டு பெரிய வெங்காயம், ரெண்டு தக்காளி, கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு மற்றும் சீரகத்தூள் இதெல்லாம் இருந்தால் நீங்கள் சூப் வைக்க ஆரம்பிக்கலாம். முதலில் ஆட்டுக்காலை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி, நன்கு சுத்தப்படுத்திவிட்டு, நன்கு வேகவைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் முறையே போட்டு வதக்கவும்.
வேகவைத்த ஆட்டுக்காலை அப்படியே அந்த பாத்திரத்தில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை தங்கள் நாக்கின் நீளத்திற்கேற்ப போட்டு நன்கு கிளறி விடவும். அதன் பின் 5 குவளை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ஆட்டுக்கால் சூப் ரெடி. உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். உப்பு கூடினால் தண்ணீரும், தண்ணீர் கூடினால் உப்பையும் மாற்றி மாற்றி சேர்த்து சமன்படுத்திக் கொள்ளலாம். இடையிடையே கரண்டியில் கொஞ்சம் எடுத்து சுவையைச் சரி பார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.
தொடர்ந்து கணினியில் இருப்பவர்களுக்கு மணிக்கட்டிலும், கால் மூட்டிலும் வலியிருந்தால் வாரம் ஒருமுறை ஆட்டுக்கால் சூப் குடித்து நிவாரணம் பெறலாம். வார இறுதியில் விருந்துகளுக்கு செல்பவர்கள், செல்லுமுன் சூப் தயார் செய்து வைத்து விட்டுப்போனால் மறுநாள் காலையில் சுடவைத்து இரண்டு லார்ஜுகள் சூப் குடித்தால் ஹாங்க் ஓவரிலிருந்து உடனடி விடுதலைக்கு உத்தரவாதம்.
வாழ்க ஆட்டுக்கால் சூப்புடன்!!!
பி.கு: படங்கள் சுடுதண்ணியின் பிரத்யேக தயாரிப்பு :)
14 comments:
சுடுதண்ணி!! சூப் மழைக்கும் இதம்!!
ஆஹா.. சுடுதண்ணியில சூப்.... :))
போட்டோ அருமை
soup kuditha mathireye inrunthathu
சுவையில் சிறந்தது - மழையின் போது சூப் :D @ தேவன் மாயம்.
நன்றி சென்ஷி நண்பா :)
மிக்க நன்றி மலர். சூப்புக்கு காசு?? :)
சூப்பர் அப்பு... சூப்பர் சூப்பு...
வாழ்க ஆட்டுக்கால் சூப்பு... வளர்க சுடுதண்ணி...
சூப்பு தயாரிச்சப்ப எடுத்த படமா தல???
சூப்பர்.
ஆமா.. சூப்பு யாரு தயாரிச்சது?
:-)
நன்றி நண்பா :D....
ஒரு சுடுதண்ணியே
சூப்
வைக்கிறதே!
கடந்த வார இறுதியில் நான் தயாரிக்கும் போது எடுத்த படங்கள் நண்பா :D.
க்ளென்ஃபெடிச் .... ஆஹா.... நினைச்சாவே முக்தி கிடைச்சுடும் போல இருக்கே... அதுக்கு அப்புறம் ஆட்டுக்கால் சூப் அமிர்தம் தான் போங்க....
இன்னிக்குன்னு பாத்து மழை வேற வருதே இங்க.....
சகலகலாவல்லுனர் சுடுதண்ணி வாழ்க.
செமங்க.
ஆனா ஒன்னுதான். ரொம்ப நாளாச்சே நீங்க புதுசா தொழில்நுட்ப ரீதியா ஏதாவது போட்டு இருப்பீங்க்ளோனு பாத்து வந்தா..
சூப் குடிச்சுட்டு கும்மி அடிச்சுட்டு இருக்கீங்க??? ம்ம்ம்.. சூப் நல்லா இருக்கு..
அடுத்த தொழில்நுட்ப பதிவு விரைவில் போடவும்..
இப்படிக்கு,
உங்கள் இடுகையால் டோரண்ட் புரிந்து கொண்டு மற்றவர்களிடம் சீன் போடும் நண்பன்.. :-)
முக்தி அடிக்கடி உண்டாகட்டும் ;). நன்றி அகில்.
வஞ்சகமில்லாமல் புகழும் நெஞ்சம் இராமலிங்கம் வாழ்க! வளர்க :D :). நன்றி :)
தொழிட்நுட்பட்த்து ஊட்டச்சத்தும் அவசியம்னு தான் சூப்பு :D.. மிக்க நன்றி கடைக்குட்டீ :)
தமிழ்மண போட்டியில் பார்த்தேன். இப்போது தான் முழுமையாக படித்தேன்.
உண்மையிலேயே சொல்லுங்கள். ஆட்க்கால் சூப் எனக்கும் வைக்கத் தெரியும், குடித்து பருகி விழுந்து அதிலே கிடந்தும் இருக்கின்றேன்.
விஞ்ஞான பூர்வமா ஆட்டுக்காலுக்கும் நம் உடம்புக்கும் அது கொடுக்கும் உண்மையான சக்திக்கும் காரணத்தை நீங்கள் விளக்க முடியும் என்று நம்புகிறேன்.
ஆஸ்திரேலியாவில் வளர்ந்த ஆடு, சிங்கப்பூரில் தயாரித்த தனிச்சுவை, இந்தோனேசியாக காடுகளில் உள்ள பண்டா சிராய் பட்டை போன்ற பல வஸ்துகள் போட்டு சிங்கப்பூர் உணவகத்தில் பல மலாய் மக்கள் இதற்கென்ற மேற்படி சமாச்சாரத்திற்கு சிறப்பு என்று வந்து வரிசை கட்டி நிற்பார்கள்?
என்ன காரணம்? என்ன தான் காலில் இருக்கிறது?
மிக்க நன்றி ஜோதிஜி. தனிப்பதிவாக விரைவில் எழுத முயற்சிக்கிறேன் :). உங்கள் ஊக்கம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது..
நல்லாத்தான் இருக்கும் மழைக்கு.....
ஆனா ஆட்டு காலுக்கு தான் கொஞ்சம் மெனகெடனும்......
சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றி நிர்மல் :)
Post a Comment