Saturday, November 7, 2009

வலையுலகில் கொண்டையை மறைப்பது எப்படி? அல்லது ஐ.பி மாஸ்க்கிங் ஒரு அறிமுகம் - 1

இத்தலைப்பு குறித்து எழுதும் எண்ணத்தை விதைத்த திரு.இராமலிங்கம் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

ப்ராக்ஸி அப்படின்னதும் உடனே நினைவுக்கு வர்றது கல்லூரியில் பேராசிரியர்களுக்கு கடுக்காய் கொடுத்து சினிமா அல்லது அதுபோல் வேறேதேனும் அதிமுக்கிய அவசர அலுவல்களுக்காக வகுப்புக்கு வராத நண்பர்களுக்கு வருகையைப் பதிவது தான். இந்த ஐ.பி (வலையிணைப்பு முகவர் எண்) மாஸ்க்கிங் கிட்டத்தட்ட அதே மாதிரி தான். அதாவது உங்களுக்கான ப்ராக்ஸி வருகைப் பதிவை நீங்களே மாறுவேடத்தில் வகுப்புக்குச் சென்று பதிவது தான் இது. இது எப்படி சாத்தியம், எவ்வாறு செயல்படுதுன்னு இப்போ பார்ப்போம்.

உங்களுக்கு வலையிணைப்பு வழங்குநர்கள் (ISP - eg. BSNL,TATA...) அனைவருமே தங்களுக்கென ஒரு ப்ராக்ஸி சர்வர் வைத்திருப்பார்கள். வலைத்தொடர்பில் உங்களின் ஒவ்வொரு வேண்டுகோளும் இந்த ப்ராக்ஸி சர்வருக்குத் தான் முதலில் செல்லும். பின் அந்த ப்ராக்ஸி சர்வர் உங்கள் வேண்டுகோள் எந்த வெப் சர்வரில் இருக்கிறதோ அங்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுத் தரும். எந்த சந்தாதாரர் என்னென்ன வலைத்தகவல்களைப் பார்க்கிறார் போன்ற தகவல்களனைத்தும் அங்கே பதிவாகிக் கொண்டே இருக்கும். இவை தான் வலையுலகில் நடைபெறும் குற்றங்களுக்கான ஆதாரங்களின் உறைவிடம். காவல்துறை வலைத்தொடர்பு குறித்தான வழக்கு விசாரணைகளுக்கு செல்லும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.

அனேக வலையிணைப்பு வழங்குநர்கள் ட்ரான்ஸ்பரண்ட் ப்ராக்ஸி சர்வரில் தான் தங்கள் சேவையினை வழங்குகிறார்கள். அதாவது வலையுலகில் நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்கள் கொண்டையுடன் திரிவீர்கள், எந்த மறைப்பு வேலையும் கிடையாது. இப்பொழுது உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக அநாமதேயமாக வலையுலகில் எதாவது தகவல் பெற விரும்புகிறீர்கள், எப்படி செய்வது?. உங்கள் கணினியிலிருந்து செல்லும் தகவல்களுக்கான வேண்டுகோள்களை எப்பொழுதும் வழக்கமாக செல்லும் ப்ராக்ஸி சர்வருக்கு அனுப்பாமல் உங்கள் கொண்டையை மறைக்கும் வேலையைச் செய்யும் (ஐ.பி மாஸ்க்கிங்) வேறொரு ப்ராக்ஸி சர்வருக்கு (anonymous proxy server) அனுப்ப வேண்டும். இந்த அநாமதேய ப்ராக்ஸி சர்வர் உங்களுடைய வலையுலக முகவர் எண்ணுக்குப் பதிலாக பிறிதொரு முகவர் எண்ணின் மூலம் வெப் சர்வர்களிலிருந்து தகவல்களை எடுத்து உங்கள் கணினிக்கு அனுப்பும்.இப்படி செய்யும் போது நீங்கள் சிங்காரச் சென்னையிலிருந்து கொண்டே, ஏதோ நேரடியாக இலங்கையிலிருந்து பேசுவது போல் இங்க இப்ப சாந்தி நிலவுது, வாந்தி கொமட்டுதுன்னு அவுத்து விடலாம். எல்லாருக்கும் நீங்கள் இலங்கையிலிருந்து பேசுவதாகத் தான் தெரியும்.

இப்படி ஒரு குஜாலான விஷயம் கண்டுபிடிக்கப் பட்டது வலையுலக பயன்பாட்டை நெறிப்படுத்துதல் (blocking websites, parental control), வலையில் விரைவாகத் தகவல்களைப் பெற்றுத் தருதல், பாதுகாப்புக்காக உங்கள் அடையாளங்களை மறைப்பது போன்ற விஷயங்களுக்குத் தான்.

எல்லாம் சரி, இதை எப்படி செயல்முறைப்படுத்துவது?. இதை செயல்படுத்துவதற்கு பாதுகாப்பான அநாமதேய ப்ராக்ஸி சர்வர்கள் (Paid Service only), இலவச அநாமதேய ப்ராக்ஸி சர்வர்கள் ( கணினி மற்றும் வலையமைப்புப் பாதுகாப்புக்கு கம்பெனி பொறுப்பல்ல), ஏராளமான மென்பொருட்கள் இப்படி பல வழிகள் உள்ளன. இருந்தாலும் இலவசம்னா நமக்கெல்லாம் ஒரு கிக் தானே, அதனால பைசா செலவில்லாம எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நெருப்புநரி (ஆங்கிலப்படத்தோட தமிழ் தலைப்பு மாதிரியில்ல?) வலைஉலாவி (Firefox 3.x webbrowser ), பாக்ஸிப்ராக்ஸி எனும் நெருப்பு நரி கூடுதல் இயக்க மென்பொருள் (foxy proxy addon), ஏதெனும் ஒரு அநாமதேய ப்ராக்ஸி சர்வரின் வலையிணைப்பு முகவர் எண் மற்றும் அதன் வலையமைப்பு இணைப்பு புள்ளி (anonymous proxy server's IP and port number). சுட்டிகளைத் தொடரலாம் அல்லது கூகுளிடம் தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும்.

எல்லாத்தையும் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி தயார் நிலையில் வைத்திருங்கள். எப்படி அவற்றை ஒருங்கிணைத்து செயல்முறைக்குக் கொண்டு வருவது, இவற்றின் சாதக பாதகங்கள் என்னென்ன, பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது போன்ற தகவல்கள் அடுத்த பகுதியில்.....
15 comments:

ஊர்சுற்றி said...

அப்படியே, சுட்டிகளையும் கொடுத்தால் தேவலை! :)

சுடுதண்ணி said...

"தேவையான பொருட்களுக்கு" கீழே "நெருப்புநரி,பாக்ஸிப்ராக்ஸி,அநாமதேய ப்ராக்ஸி சர்வரின்" போன்ற சொற்களில் சுட்டி கொடுத்திருக்கேன் ஊர் சுற்றி.. சொடுக்கி பாருங்க...

சுடுதண்ணி said...

கும்பல் கும்பலாக வருகைதரும் அன்பர்கள் யாரேனும் செயல்படுத்திப் பார்த்து இருந்தால், தங்கள் அனுபவத்தை பின்னூட்டத்தில் சொன்னால் மகிழ்ச்சி.

குறைந்த பட்சம் உங்கள் புரிதல் அல்லது உபயோகமாக இருந்ததா என்று தெரிவித்தால் நன்று :D.

ஊர்சுற்றி said...

ஒகே. இதுவரைக்கு இதெல்லாம் முயற்சி பண்ணினது கிடையாதுங்க.

சுடுதண்ணி said...

வாங்க ஊர்சுற்றி :).

மிக்க நன்றி..நேரம் கிடைக்கும் போது முயற்சி பண்ணி பாருங்க :).

Thangavel Manickam said...

மிக அருமையாக பதிவு எழுதுகின்றீர்கள் சுடுதண்ணி. வாழ்த்துக்கள். டோரண்ட் பற்றிய பதிவு அருமையான ஒன்று.

சுடுதண்ணி said...

தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி தங்கவேல் :)

ராஜ நடராஜன் said...

//நீங்கள் சிங்காரச் சென்னையிலிருந்து கொண்டே, ஏதோ நேரடியாக இலங்கையிலிருந்து பேசுவது போல் இங்க இப்ப சாந்தி நிலவுது, வாந்தி கொமட்டுதுன்னு அவுத்து விடலாம். எல்லாருக்கும் நீங்கள் இலங்கையிலிருந்து பேசுவதாகத் தான் தெரியும்.//

சாவது தமிழாக இருக்கட்டும் என தமிழ் ப்ராக்ஸி போட்டுகிட்டும் சில பேர் இப்படித்தான் சொல்லிகிட்டு திரியறாங்க:(

ராஜ நடராஜன் said...

நான் நாளைக்கு வருகிறேன்.முந்தைய பின்னூட்டத்தால் மூடு.

சென்ஷி said...

:)

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

சென்ஷி said...

ஓஹ். அடுத்த பதிவும் வந்திருக்குதா.. புதுப்பதிவு போலன்னு நினைச்சுக்கிட்டேன்.. ஓக்கே முழுசா படிச்சுட்டு வர்றேன்.

சுடுதண்ணி said...

நன்றி சென்ஷி, ராஜ நடராஜன். உங்கள் ஊக்கத்திற்கு மீண்டும், மீண்டும் நன்றிகள் :)

guru said...

நல்ல பதிவு...

தேவையானதை தரவிறக்கம் செய்து கொண்டேன்....

அடுத்த பகுதியை தேடி செல்கிறேன்...

நன்றி...

Gajen Dissanayake said...

சார்....Proxy Serverகள் பாதுகாப்பானவையா..? எனது வளாகத்தில் நண்பர்கள் சிலர் தடைசெய்யப்பட்ட Facebook ஐப் பார்ப்பதற்காக Proxy Server ஒன்றினூடாகச் சென்று தமது Passwordஐத் தொலைத்து விட்டு நின்றது ஞாபகம் வருது...! Proxy Serverனூடாக Login செய்யாதீர்கள் என்று படிச்சு படிச்சு சொல்லியும் அவர்கள்...ம்ம்ம்ம்ம்....என்ன செய்வது..?

சுடுதண்ணி said...

மிக்க நன்றி குரு, தொடர்ந்து வாங்க.

இலவசங்கள் எப்பவுமே பாதுகாப்பானதில்லை கஜன் :). தொடர்ந்து வாங்க.