Thursday, November 5, 2009

டொரண்ட், ஓர் அறிமுகம் - 3 (முற்றும்)




முந்தைய இரண்டு பதிவுகள் மூலமா டொரண்ட்டின் செயல்பாடு குறித்தும், டொரண்ட் மென்பொருள் பயன்பாடு மற்றும் எப்படி தேவையான கோப்புகளைத் தரவிறக்கம் செய்யுறதுன்னு எல்லாம் பார்த்தோம்.

இந்த இறுதிப்பகுதில டொரண்ட் மென்பொருள் முழுமையா செயல்படுதா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வது மற்றும் நம்மிடம் ஒர் கோப்பு அல்லது கோப்புத் தொகுப்பையோ (file or directory) எப்படி டொரண்ட் மூலம் பகிர்ந்து கொள்வது என்று பார்க்கப் போகிறோம்.

முதலில் டொரண்ட் மென்பொருளின் செயல்பாடு. இந்த டொரண்ட் மென்பொருள் ட்ராக்கரிடம் தொடர்பு கொள்வது மற்றும் சக கணினிகளிடம் கோப்புப் பகுதிகளைக் கொடுக்கல்/வாங்கல் செய்வது எல்லாமே ஒரு குறிப்பிட்ட வலையமைப்புப் புள்ளியில் (network port) தான் நடைபெறும். ஒருக்கால் டொரண்ட் மென்பொருள் அந்த வலையமைப்பு தொடர்ப்புப் புள்ளியை பயன்படுத்தும் காரணத்தால் சந்தேகத்தின் பேரில் உங்கள் கணினியின் பாதுக்காப்புக்கான மென்பொருட்களால் (firewall,Antivirus softwares) தடைசெய்யப் பட்டிருக்கலாம். அதனால் முதலில் firewall மற்றும் antivirus மென்பொருட்களைத் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யலாம் அல்லது உங்களின் டொரண்ட் மென்பொருளை அனுமதிக்கப்படும் நிரல்களின் பட்டியலில் (exception list or trusted program list) சேர்த்து விடவும்.

அடுத்து டொரண்ட் மென்பொருள் தொடர்புக்குப் பயன்படுத்தும் அந்த வலையமைப்புப் புள்ளி (network port) தங்களின் வலையமைப்பில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இருப்பின் அப்புள்ளியைத் திறந்து வைக்குமாறுத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் வலையமைப்பு புள்ளியை எப்படித் தெரிந்து கொள்வது?. மென்பொருளில் preferences -> connection என்ற பகுதியில் தெரிவிக்க பட்டிருக்கும், தேவைக்கேற்ப அதனை நீங்கள் மாற்றியும் கொள்ளலாம்.

அந்த புள்ளி செயல்பாட்டிற்கு அனுமதிக்க பட்டிருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று கீழ்காணும் உரலில் உங்கள் டொரண்ட் மென்பொருள் பயன்படுத்தும் வலையமைப்புப் புள்ளியின் எண்ணை கொடுத்தால், தடை செய்யப்பட்டிருக்கின்றதா இல்லையா எனத் தெரிவிக்கும்.


தடை செய்யப் பட்டிருந்தால் எப்படி நீக்குவது?. உங்கள் Router ன் (தமிழ்ல எப்படி சொல்றது?) மேலாண்மை மென்பொருளை உங்களுக்கு பயன்படுத்த அனுமதி இருந்தால், அதற்கான் கடவுச்சொல் தெரிந்தால் மட்டுமே தடையினை நீக்கும் முயற்சியில் ஈடுபடவும். அல்லது நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இருந்தால் அதுவே சரியான இடம் உங்கள் சோதனை முயற்சிக்கு :D.



மேலே உள்ள் படம் ஒரு தகவலுக்கு மட்டுமே. உங்கள் பயன்பாட்டில் இருக்கும் router மற்றும் அதன் மேலாண்மை மென்பொருள், நீங்கள் பயன்படுத்தும் டொரண்ட் மென்பொருளின் உபயோகத்தில் இருக்கும் வலையமைப்பு புள்ளி எண்ணுக்கேற்ப (network port number) தங்களில் உள்ளீடுகள் மாறுபடும். 'முழுமையான புரிதலோ' அல்லது 'ஊரான் வீட்டு நெய்யே' போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே முயற்சி செய்து பார்க்கப் பரிந்துரைக்கப் படுகிறது.

மேலே சொல்லப்பட்ட சங்கதிகள் டொரண்ட்டின் தரவிறக்க வேகத்தை எந்த கட்டுப்பாடும் இன்றி காட்டாறு மாதிரி பாய செய்வதற்கே. இதனை செய்யா விட்டாலும் தரவிறக்கம் நடைபெறும் ஆனால் மிக மித்மான வேகத்தில். சுருங்கச் சொன்னால் வர்ர்ரும்...ஆனா வர்ராது..ன்ற மாதிரி.



டொரண்ட் கோப்பு எப்படி த்யார் செய்வது? . என்னிடம் D:/DVD என்ற கோப்புத் தொகுப்பு (directory) இருக்கின்றது, அதனை டொரண்ட் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். முதலில் எந்த டொரண்ட் இணையத்தளத்தின் மூலம் என்பதனை உங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளவும் (உ.தா: www.mininova.org). ஒவ்வொரு டொரண்ட் தளத்திற்கும் அவர்களது ட்ராக்கருக்கென ஒரு உரல் (tracker url) கொடுத்திருப்பார்கள் அதனை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். (உ.தா: http://tracker.openbittorrent.com:80/announce).

பிறகு உங்கள் டொரண்ட் மென்பொருளில் File->Create New torrent செல்லவும். பிறகு நீங்கள் ப்கிர்ந்து கொள்ள விரும்பும் கோப்பினையோ அல்லது கோப்புத் தொகுப்பையோ (file or directory) தேர்வு செய்யவும். ட்ராக்கர் உரல், வரலாற்றைப்போல் மிக முக்கியம் :). மறக்காமல் நீங்கள் பயன்படுத்தப்போகும் டொரண்ட் தளத்தின் ட்ராக்கர் உரலை உள்ளிடவும். 'start seeding' என்ற வசதியினையும் தேர்வு செய்ய மறக்க வேண்டாம். பிறகு create torrent பொத்தானை அமுக்கினால் உங்களின் டொரண்ட் கோப்பு தயாரிக்கப் பட்டு டொரண்ட் மென்பொருள் திறக்கப்பட்டு பகிர்ந்து கொள்ள (seeding) தயார் நிலையில் இருக்கும்.

நீங்கள் தேர்வு செய்த டொரண்ட் தளத்திற்கு (உ.தா. www.mininova.org) சென்று உங்கள் கோப்புகள் பற்றிய விவரங்களுடன் ஒரு பதிவு இடவும், அத்துடன் நீங்கள் த்யார் செயத டொரண்ட் கோப்பை பதிவுடன் இணைத்து (attachment) வெளியிடவும். இப்பொழுது எல்லாம் தயார்.

பயனாளிகள் உங்கள் டொரண்ட் கோப்பை தரவிறக்கம் செய்து, தங்கள் டொரண்ட் மென்பொருளில் திறந்தால், அது டொரண்ட் தளத்தின் ட்ராக்கரைத் தொடர்பு கொண்டு உங்கள் கணினியிம் இணைய முகவர் எண் (IP address) மற்றும் கோப்பு இருக்கும் இடம் (உ.தா D:\DVD) விவரங்களைப் பெற்றுக் கொண்டு உங்கள் கணினியுடன் தொடர்பு கொண்டு பின் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்து விடும்.


குறைந்த பட்சம் ஒரு பயனாளியாவது முழுவதுமாகத் தரவிறக்கம் செய்யும் வரை தங்கள் கணினியினை இயக்கத்திலேயே வைத்திருக்கவும். டொரண்ட் வலையமைப்பில் ஒருவரிடத்திலேனும் முழுக் கோப்புகளும் இருக்குமாறு பார்த்து கொள்ளவும் அப்பொழுது தான் தரவிறக்கம் சாத்தியம்.


இத்துடன் டொரண்ட் பதிவுகள் நிறைவடைகின்றன. இப்பகுதிகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த பதிவர் பாலபாரதிக்கும், வதவதன்னு ஏகப்பட்ட பேர் படிச்சிருந்தாலும், ரொம்ப சுமாரா இருந்தாலும் 'பின்றீங்க', 'சூப்பர்ங்க' அப்படின்னு விதம்வித்மா, கலர்கலரா கம்பெனிக்கு ஊக்கமளித்து பின்னூட்டமிட்ட மிகச் சில (4 பேரு தான்) பதிவர்களான அகல்விளக்கு, ராஜ நடராஜன், பாலபாரதி மற்றும் Busyக்கு எனது நன்றிகள் பல.





35 comments:

ramalingam said...

உங்கள் தொடர் உண்மையிலேயே நன்றாக இருந்த
து. ஊரான் வீட்டு நெய்யே முறையில் சில சைட்டுகளை பா
ர்க்க வேண்டும். அதற்காக
proxy changing பற்றி அடுத்தது எழுத முடியுமா?

வனம் said...

வணக்கம்

ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்த விடயம்
தெளிவா சொல்லி இருக்கீங்க.

இனி பின்னீடுவோம்ல......

இராஜராஜன்

சுடுதண்ணி said...

மிக்க நன்றி இராமலிங்கம். நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பதிவிடுகிறேன் ப்ராக்ஸி மாஸ்க்கிங் பற்றி.


நன்றி வனம், கலக்குங்க :)

அகல்விளக்கு said...

பயனுள்ள பதிவுகள் தல...
இதே போல proxy masking பத்தியும் ஒரு தொடர் எழுதுங்களேன். ரொம்ப உதவியா இருக்கும்.

சுடுதண்ணி said...

மிக்க நன்றி அகல்விளக்கு. ப்ராக்ஸி குறித்து பதிவு போட்டாச்சு. எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க :)

CA Venkatesh Krishnan said...

நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த விடயம். மிக அருமையாக விளக்கமளித்திருக்கிறீர்கள்.

மிக்க நன்றி!!

சுடுதண்ணி said...

மிக்க நன்றி இளைய பல்லவன் :).

Rajasurian said...

மிக நீண்ட நாட்களாய் புரிந்தும் புரியாததுமாய் நழுவிகொண்டிருந்த விஷயம். என் மரமண்டைக்கே விழங்குமளவு தெளிவாய் விளக்கி உள்ளீர்கள்.

மிக்க நன்றி

சுடுதண்ணி said...

மிக்க நன்றி ராஜசூரியன். இப்பதிவு உங்களுக்கு பயனளித்ததில் மிக்க மகிழ்ச்சி :)

Sri said...

nalla thagaval - mikka nandri suduthanni :)

Srini

சுடுதண்ணி said...

மிக்க மகிழ்ச்சி Sri :)

Sundar said...

மிகவும் பயனுள்ள பதிவு.

என்னைப் போன்றவர்களுக்கும் புரியும் வண்ணம் எழுதியதற்கு நன்றி!

Umar Mufti said...

நீண்ட நாளைக்குப் பிறகு தமிழ் தொழில்நுட்ப செய்திகளை படிக்க ஆரம்பித்த எனக்கு பயனுள்ள பதிவாகத் தெரிகிறது.

Feedburner மூலம் மின்னஞ்சலுக்கு பதிவு கிடைப்பதற்கு வகை செய்யலாம்.

அன்புடன்
முஃப்தி
www.nwebsupport.com

Kritika said...

thanks 4 ur information ..

சுடுதண்ணி said...

ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி தேவா, முப்தி, கிருத்திகா.

விரைவில் feedburner வசதியைச் சேர்த்து விடுகிறேன் நண்பா.

guru said...

நண்பருக்கு,

டோரண்ட் பற்றி புரியும் வண்ணம் விரிவாக, எளிதாக எழுதியுள்ளீர்கள்....

நான் ஏற்கனவே டோரண்டை பயன்படுத்தி வந்தாலும், அதனைப் பற்றி இப்பொழுது தெளிவாக புரிந்து கொண்டேன்...

நன்றி....

Karthick said...

migavum payanulla pathivugal . oru kelvi. Ennidam ulla oru koppai(file) , torrent moolam en nanbargalukku thara vendum. neengal solliya varu torrent tracker file uruvakkinal, ulagil ulla ellorum athai parpargalae.. athai eppadi thavirpathu ? kadavuchol vaithu torrent tracker file thayar seyya mudiyuma?

LazySystemAdmin said...

Nice Article.. I have understood well todaty... Thanks.

Anonymous said...

thanks

நிர்மல் said...

மிக்க நன்றிங்க நண்பரே .....
அடுத்து proxy பற்றி எழுதுணீங்கன்னா மிகவும் உபயோகமாக இருக்கும் ....

சுடுதண்ணி said...

மகிழ்ச்சி குரு :).


மிக்க நன்றி கார்த்திக். நீங்கள் உங்கள் டொரண்ட் கோப்பினைப் உங்கள் நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட zip கோப்பாகவும் பகிர்ந்து கொள்ளலாம். மிகவும் காலம் கடந்த பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.


நன்றி கண்ணா.


நன்றி நிர்மல். Proxy குறித்து எழுதியிருக்கிறேன். படித்து இன்புறவும் :)

அவனே தான்... said...

சுடுதண்ணி....
என்ன மாதிரி மறமண்டைக்கு புரியற மாதிரி எழுதிருக்கீங்க...மிக்க நன்றி...
ஒரு சின்ன கேள்வி..Torrents பயன்படுத்தும் போது..security issue இருக்கா ?
அதாவுது hack பண்ண வாய்ப்புகள் இருக்கா??

Unknown said...

very very use full thank you keep it up..........

Unknown said...

If I want to be a seeder whether I have to maintain seeding after downloading or just I have to keep the file in my hard disc? Pls. explain.

சுடுதண்ணி said...

//ஒரு சின்ன கேள்வி..Torrents பயன்படுத்தும் போது..security issue இருக்கா ?
அதாவுது hack பண்ண வாய்ப்புகள் இருக்கா??//

கண்டிப்பாக வாய்ப்பிருக்கிது. கவனம் :).

உங்கள் கோப்புகளைத் தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கில் வைத்திருந்து, டொரண்ட் மென்பொருளை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் @ Said.

உழவன் மகன் said...

nalla irundhadhu

உழவன் மகன் said...

NALLA IRUNDHADHU

ராஜ நடராஜன் said...

யாராவது ஒரு வருசம் கழிச்சு வந்து என்னை மாதிரி பின்னூட்டம் போடுவாங்களா:)

MARUTHAPPAN said...

NICE Explanations about torrent. thank you very much, i am searching this info for quite long time.

thanks again.

MINNAL MARUTHU

Unknown said...

நம்முடைய Computer இல் Torrent Software use பண்ணும் பொது நம்முடைய Hard disk இல் உள்ள Torrent அல்லாத (Picture, Video etc.) File களை ட்ரக்கர் மூலம் மற்றவர்கள் Share/Copy பண்ண முடியுமா?

Unknown said...

நன்நு

Unknown said...

நன்நு

சுடுதண்ணி said...

நன்றி மோகன்.

யாராச்சும் அதுக்கு மூணு வருசம் கழிச்சு பதில் சொல்வாங்களா ?? @ ராஜ நடராஜன் :).

மிக்க மகிழ்ச்சி @ 'மின்னல்' மருது.

ட்ராக்கர் மூலம் முடியாது @ சாகுல் ஹமீது

மிக்க மகிழ்ச்சி @ அமலன்.

SMKUMAR said...

மிக அருமையான ஒரு பதிவு... மிகத் தெளிவாக இருந்தது... அற்புதம்... தொடரட்டும் உங்கள் பணி.... வாழ்த்துக்கள்...

Anonymous said...

Bet365 Casino & Promos 2021 - JTM Hub
Full list herzamanindir of Bet365 Casino & Promos poormansguidetocasinogambling · Up to £100 in Bet 메이피로출장마사지 Credits for new customers at bet365. Min deposit goyangfc £5. Bet Credits available for www.jtmhub.com use upon settlement of bets to value of