ஒவ்வொரு விமானத்திற்கும் தனக்கென பிரத்யேகமாக அழைப்புக் குறியீடு (Call Sign - உ.தா. BAW10H) இருக்கும். இந்த அழைப்புக் குறியீடு, தான் தரையிறங்க வேண்டிய இடம், அவசர கால குறியீட்டு எண்கள் போன்றவற்றை வானலைகள் மூலம் ஒலிபரப்பி விமான நிலையத்தின் ரேடாருக்கு அனுப்பும் வேலையைச் செய்வது ACARS Aeronautic Communications and Reporting System. இதன் மூலம் தான் ஒரே விமானத்தை ஒவ்வொரு சுற்றிலும் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ரேடார் அடையாளம் கண்டுகொள்கிறது.
இவற்றைத் தவிர விமானத்தில் அவசர காலத் தொடர்பிற்கு செய்மதி தொலைபேசி SATCOM (Satellite communications to a land based telephone system) , அருகிலிருக்கும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தைத் தொடர்பு கொள்ள மிக உயர்நிலை வானொலித் தகவல் தொடர்பு சாதனங்கள் (VHF Radios), வானில் சக விமானங்களோடு மோதிக் கொள்ளாமல் தவிர்க்க Traffic alert and Collision Avoidance System (TCAS) எனப்படும் சிறிய ரேடார் ஒன்றும் செயல்பாட்டில் இருக்கும்.
விமானிகள் விமானத்திலுள்ள ரேடியோ கருவிகள் மூலம் அருகாமையிலுள்ள விமானங்களுக்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கும் தொடர்பு கொண்டு பேச முடியும். இந்த உரையாடல்கள் அனைத்தும் மற்றும், விமானத்தின் உயரம், அகலாங்கு, நெட்டாங்கு, தட்பவெட்ப நிலை, அனைத்துக் கருவிகளின் இயங்குநிலை ஆகியவை cockpit voice recorder மற்றும் flight data recorder (famously referred as blackboxes which are either red or yellow in color) ஆகியவற்றில் பதிவாகிக் கொண்டே இருக்கும். அதேபோல ஒவ்வொரு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்திலும் அனைத்து அதிகாரிகளின் உரையாடல்களும் 24 மணி நேரமும் பதிவாகிக் கொண்டே இருக்கும், பணியில் தவறு செய்பவர்கள் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை.
Operational Control Program எனப்படும் மென்பொருளை உபயோகிக்கும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தாங்கள் விரும்பும் விமானங்களை தேர்வு செய்து கொண்டு வழிநடத்துவார்கள். ஒரு அதிகாரி தேர்வு செய்ததும், மற்றவர்களுக்கு அந்த விமானத்தை தேர்வு செய்த விபரம் கணினியில் தெரிவிக்கப்படும். ஒரு விமானத்தை ஒரே நேரத்தில் இருவர் தேர்வு செய்ய முடியாது. இவர்களுக்கு ஆங்கிலப் புலமை அத்தியாவசியம். விமானிகள் நமிதாவின் தமிழ் போன்ற ஆங்கிலத்தில் பேசினால் கூட புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர விமான நிலையம் இருக்கும் இடத்தின் பூர்வீக மொழி விமானி மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி இருவருக்கும் தெரிந்திருந்தால் பேச அனுமதியுண்டு.
கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமானிகளின் வேலைக்குத் தேவையான வசதிகளுக்கோ அல்லது கவனத்திற்கோ சிறு பாதிப்பு வந்தாலும் விளைவு, நூற்றுக்கணக்கான உயிர்கள். உதாரணத்திற்கு 1996ல் தில்லி விமான நிலையம் அருகே சவுதி அரேபியாவின் விமானமும், கசகசஸ்தான் விமானமும் நேருக்கு நேர் மோதி 300க்கும் மேற்பட்ட பயணிகள்,விமானிகள் என அனைவரும் மரணமடைந்தனர். பெரும்பாலும் விமானப் போக்குவரத்து ஒரளவுக்கு அதிகம் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும், மேலெழும்புவதற்கு தனித்தனி வான்பகுதியை உபயோகப்படுத்துவர். இப்போதும் கூட சில சமயங்களில் விமானம் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு எதிர் திசையில் மேலேழும்பி, குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் அப்படியே விமானம் திரும்பி பறப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் அப்பொதைய கால்கட்டத்தில் தில்லி விமான நிலையம் ஒரே ஒரு வான் பகுதியை தரையிறங்கவும், மேலெழும்பவும் பயன்படுத்தி வந்தது, காரணம் பெரும்பான்மையான வான்பகுதி விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதன் காரணத்தால் மேலெழும்பிய சவுதி அரேபிய விமானமும், தரையிறங்க வந்த கசகசஸ்தான் விமானமும் ஒரே வான் பகுதியில் சந்தித்து கொண்டன.
கட்டுப்பாட்டு அதிகாரிகள் இரண்டு விமானங்களும் 14 மைல்கள் தொலைவில் இருக்கும் போதே நிலைமையை உணர்ந்து இரண்டு விமானிகளுக்கும் தெரியப்படுத்தினார்கள். இதில் ச்வுதி அரேபிய விமானி எச்சரிக்கப்பட்டவுடன் தனது பறக்கும் உயரத்தைக் குறைத்தார், இருந்தாலும் ஆங்கிலம் புரியாத காரணத்தால் கசகச்ஸ்தான் விமானியும் உயரத்தைக் குறைக்க, கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குக் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனது போல் தெரிந்தும் விபத்தைத் தடுக்க முடியாமல் போனது. எல்லாம் நடந்து முடிந்த பின்னர் இந்தியா வழக்கம் போல விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து தில்லி விமான நிலையத்தை விரிவு படுத்தி ரேடார்களை நவீனப்படுத்தியது. ரேடார்களை நவீனப் படுத்தியதற்குக் காரணம் பொதுவாக ரேடாரில் Primary & Secondary என்னும் இரு ரேடார் கருவிகள் இருக்கும். இதில் secondary radar தான் விமானங்களின் உயரத்தை துல்லியமாகக் கணிக்கும். விபத்து நடந்த காலம் வரைக்கும் நம்து தில்லி விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெறும் primary radar மட்டுமே வைத்துக் கொண்டு, எதிரே பெரிய லாரி வரும் போது "என்ன மஞ்சள் கலரு கொடியே புடிச்சிக்கிட்டு ஒரே கூட்டம் கூட்டமா போறாய்ங்கெ"ன்னு ஒரு குத்துமதிப்பாகவே தங்கள் வேலையைச் செய்தது விசாரணையில் அம்பலமாகி விபத்துக்கு அதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.
கடந்த இரண்டு பதிவுகளில் ஓரளவுக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் விடுபடாமல் சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன். எனவே அடுத்த முறை விமானப்பயண்ம் போகும் போது என்ன விமானத்தில் பறக்க போகிறீர்கள், அந்த விமானத்தில என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன, ஏறும் மற்றும் இறங்கும் விமான நிலையங்களின் ரேடார் விபரங்கள், எத்தனை வான்பகுதிகள், ஓடுபாதைகள் உபயோக்கின்றார்கள் இப்படி பலதரப்பட்ட விவரங்களைத் திரட்டிக் கொண்டு மனதளவில் தயாராகப் பயணிக்கவும்.
தங்கள் எதிர்கால விமானப்பயணங்கள் அனைத்தும் இனிமையாக அமைய கம்பெனியின் வாழ்த்துக்கள்.
முற்றும்.
15 comments:
தற்போதைய பயணங்களில் பல விபரங்களை
உள்ளே உள்ள திரையில் தருகிறார்கள்.
இந்தியாவில் நடந்த விபத்து பற்றிய தெளிவான
விளக்கம் உங்களாலே அறிந்தேன்.
என்ன? தான் தயாரானாலும் என் பயணங்களில்
ஏறி விமானம் புறப்பட்டதும் நடந்த விபத்துக்களின்
தொலைக்காட்சிச் செய்தி வரிசையாக நினைவு வந்துவிடும். என்ன செய்வது...மறக்கிறத்துக்கு சுவிச்சா இருக்குது.. அதனுள்ளும் குழந்தைபோல்
யன்னலால் பார்த்து,கிடைக்கும் காட்சியை ரசிக்கத் தவறுவதில்லை.
//விமானிகள் நமிதாவின் தமிழ் போன்ற ஆங்கிலத்தில் பேசினால் கூட புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். //
திரும்பவுமா!!!
ரைட்டு.
அப்புறம் உங்க பதிவு ரொம்ப இன்டர்ஸ்டிங்க் தல..
நீங்கள் சொல்வது உண்மை தான்.. அந்த நேரத்தில் தான் எல்லாமே நினைவுக்கு வரும்...
நன்றி யோகன்.
எப்படியோ என்னையும் அறியாம நமிதா இடம் புடிச்சிட்டாங்க... :D
ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி நண்பா.
கலக்கல் தகவல்கள்
வாவ்! அருமையான தகவல்கள்.
என்னய்யா இது, அதுக்குள்ள முடிச்சிட்டீங்களே, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போயிட்டிருந்தது.
முற்றும் பார்த்ததும் ஏமாற்றம் தான்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்கள் கண்கள் விரியச் செய்துவிட்டது.
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகும்போது அதிலுள்ள கறுப்பு பெட்டி அழியாது என்பது தெரியும். ஆனால் அதில் பதிவாகியுள்ள விவரங்களை அறிந்து கொள்ள எல்லா நாடுகளாலும் முடியாது என்று படித்ததுண்டு. அது எந்தளவு உண்மை?! எந்தெந்த நாடுகளில் கறுப்புப் பெட்டியில் உள்ள விவரங்களை டீகோட் செய்து அறிய முடியும்?
இவ்ளோ விஷயம் இருக்கா இதுல? நா பஸ் ல போகும்போது கூட சாமிய கும்பிட்டுக்குவேன், விபத்து ஃபோட்டோ லாம் பாத்தா நா இந்தியாக்கு போறதா, வேண்டாமான்னு யோசிக்கிறேன். எப்டியோ, உங்க தகவலுக்கு நன்றி....
நன்றி முரளிக்கண்ணன் :)
நன்றி வடுவூர் குமார் :)
நன்றி சென்ஷி. விரைவில் அது குறித்து தனிப்பதிவு போடுகிறேன்.
நன்றி ரேவதி. பயப்பட வேண்டாம். வாழ்வில் பயணங்கள் எப்பொழுதும் முடிவதில்லை.. தங்கள் பயணங்கள் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
சரியான விளக்கம் இது வரை யாரும் சொல்லவில்லை தான், சரியான பதிப்பு வாழ்த்துக்கள்
http://beermohamedtamilgroup.blogspot.com
http://tamilnanbarkal.blogspot.com
மிக்க நன்றி நண்பா :)
முன்பெல்லாம் என் வீட்டுக்கு மேல் விமானம் பறக்காது ஆனால் இப்போது பல விமானங்கள் வீட்டுக்கு மேலே பறக்குது,காரணம் என்னவாக இருக்கும்.சென்னைக்கு வடக்கே போகும் விமானங்கள் நம் கடற்கரை வரை சென்று பிறகு திரும்பி போவார்கள் ஆனால் இப்போது கத்திப்பாராவிலேயே திரும்புவது போல் இருக்கு.ரன் வேயில் கிளம்பும் தூரத்தை குறைத்திருப்பார்களா அல்லது ரன்வேயை நீளப்படுத்தி (அங்கு சான்ஸ் இல்லை)ஏறும் இடம் மாறி இருக்குமா?இப்போது சென்னையின் விமான நிலைய மேம்பாடு வேலைகள் நடந்துகொண்டிருப்பது காரணமாக இருக்குமா?
காற்றின் திசை விமான ஏறும்/ இறங்குவதை பாதிக்குமா?
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.
விமானப் போக்குவரத்து பெருகப்பெருக, வான்போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பகுதிக்கான வான்பரப்பை மாற்றி அமைப்பதுண்டு. அதற்குரிய மாற்றங்கள் தான் நீங்கள் காண்பது. காற்றின் திசை பொறுத்து தரையிறங்குவதோ, மேலுழும்புவதோ பாதிக்கப்படுவதில்லை. காற்று விமானத்தில் ஏற்படுத்தும் அழுத்தம் மாறுபடும். அதனை விமானிகள் கண்காணித்துக் கொண்டேயிருப்பார்கள்.
ரசித்ததற்கு மிக்க நன்றி தராசு. திடீரென்று முடித்ததற்கு மன்னிக்கவும். :(... வேறு ஒரு தருணத்தில் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்.
ரேடார் பற்றி உங்கள்பாணியில் பதிவு எழுதவும்.
///அடுத்த முறை விமானப்பயண்ம் போகும் போது என்ன விமானத்தில் பறக்க போகிறீர்கள், அந்த விமானத்தில என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன, ஏறும் மற்றும் இறங்கும் விமான நிலையங்களின் ரேடார் விபரங்கள், எத்தனை வான்பகுதிகள், ஓடுபாதைகள் உபயோக்கின்றார்கள் இப்படி பலதரப்பட்ட விவரங்களைத் திரட்டிக் கொண்டு மனதளவில் தயாராகப் பயணிக்கவும்.///
இந்த தகவல்களை எப்படி தெரிந்துகொள்வது.....?
Post a Comment