Friday, November 6, 2009

கனவில் துரத்தும் பாம்புகளும், அழகிய தேவதைகளும் ...



பதிவெழுத ஆரம்பிச்சு, ரெண்டாவது பதிவு போட்டு நிமிர்ந்து பார்க்குறதுக்குள்ள ஒரு தேவதையை அனுப்பி வைத்து இந்தப் பதிவ எழுத வைத்த சகோதரி சம்யுக்தா கீர்த்தி அவர்களுக்கு வணக்கம் வைத்துத் தொடர்கிறேன்.

விஷயம் என்னன்னா, கனவுல தேவதை வருதா?, அப்படி வர்ற தேவதைக்கிட்ட நீங்க கேட்ட வரம் தருதா?, அதப்பத்தி சொல்லனும். முதல்ல எனக்கு கனவுகளே அதிகம் இதுவரை வந்ததில்ல. விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயசில, இருளுக்கு அஞ்சும் மனசோடு தூங்கும் போது பாம்புகள் கூட்டம் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ விரட்டு விரட்டுன்னு விரட்டும். கண்ண மூடிக்கிட்டு வெறித்தன்மா எவ்வளவு தான் ஒடினாலும் வேகமா ஓடாத மாதிரியே தோணும். ரொம்ப தம் பிடிச்சி மூச்சு முட்டி வியர்த்து விறுவிறுத்து முழிச்சிருக்கேன் பல இரவுகளில். சில சமயம் பாம்புக்கு பயந்தோ அல்லது வேறு எதுக்காகவோ அவசரமா ஓடிக்கிட்டு இருக்கும் ரொம்ப அவசரமா உச்சா வ்ரும். ஜாக்கி சான் படத்துல வில்லனோட ஆட்கள் துரத்தும் போது சின்னசின்ன சந்துக்குள்ள வளைஞ்சு ஓடுற மாதிரி, சட்டுன்னு ஒரு இடத்து திரும்பி கண்ணு கலங்கி தண்ணி வர்ற அளவுக்கு அனுபவச்சி உச்சா போற மாதிரி தோணும். அப்புறம் பாய் நனைஞ்சி தெப்பலா ஈரமாகி முழிச்சி, யாருக்கும் தெரியாம இருட்டுக்குள்ள தடவித் தட்வி உடை மாற்றி, இடம் மாற்றிப் படுத்தாலும் காலையில மானம் வலுக்கட்டாயமாக காற்றில் பட்டொளி வீசிப் பறக்க விடப்படும்.

அப்புறம் அதெல்லாம் நின்னு போச்சி, உச்சா மற்றும் பாம்புக் கனவுகள் இரண்டுமே. பின்னாடி மீசை அரும்புற காலத்தில கனவுகளில் தேவதை யாரும் வரல, ஆனா பல தேவதைகள் கனவுகள தந்திருக்காங்க. அதுல வரம் கேக்குறதுக்கெல்லாம் நேரமே இருந்ததில்ல. கன்வுல நாங்க அவ்ளோ பரபரப்பா இருப்போம் :D. இப்பவும் வெகு அரிதாக அந்த கனவுகள் வர்றதுண்டு :o.

இப்ப சமீப காலமா வர்ற கனவெல்லாம் அதிகாலை எழுந்திருக்கும் நேரத்துக்கு சற்றுமுன் வருகிறது. ஆனால் பல்துலக்க போற வரைக்கும் மெலிதா கனவின் நினைவுகள் இருக்கிற மாதிரி தோணும், துலக்கி முடிக்கிற வரைக்கும் யோசிச்சிப் பார்த்தாலும் என்ன கனவுன்னு ஞாபகம் வறாது. படுக்கையறையில 2 அல்லது 3 அலார்ம் ஓவ்வொரு இடத்திலயும் வச்சிட்டு தான் படுக்கப் போவது வழக்கம் (அவ்ளோ குஷ்டம், எழுந்திருக்கிறது :( ). 6 மணிக்கு எழுந்திருக்க 4 மணியிலிருந்தே ஒலியெழுப்ப ஆரம்பித்து விடும்.

இந்த நேரங்கள் தான் இப்பொழுதெல்லாம் கனவுகள் வரும் தருணங்கள். மனம் ஆழ்நிலைத்தூக்கத்திலிருந்து முழித்துக் கொள்கிற நேரம். பெரும்பாலும் ஏதெனும் பரபரப்பான அல்லது பிரச்சினையோ, கலகமோ நடக்கும் இடத்தில் நான் இருப்பது போலவும், எல்லாரும் நான் என்ன செய்யப் போகிறேன் என்று பார்த்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றும். நானும் 'ஏதாவது பன்றோம்டா இன்னைக்கி' அப்படின்னு என்னதான் முக்கினாலும் என்னும் செய்ய முடியாது. கை, கால் எல்லாம் செயலாற்ற இயலாமல் இருப்பதாகத் தோன்றும். அப்படி உணரும் தருணத்தில் எழுந்து விடுவேன்.

ஓரளவுக்கு.. அங்கங்க 'தூக்கம்', 'கனவு' எல்லாம் போட்டு பதிவோட நோக்கத்துக்கு சம்பந்தப்படுத்திக்கிற "மாதிரி" எழுதியாச்சு. சரி தேவதைகள் வர்றதில்ல தான். ஒரு வேளை அப்படி தேவதை வந்தால்.. என்ன வரம் கேட்பது?.. 'உறவினர், நண்பர், எதிரி அனைவர் மனதிலும் அன்பையும், மனிதநேயமும் தழைக்கச் செய்' அப்படின்னு கேட்பேன். அந்த வரம் கிடைக்குமா..கிடைக்காதான்னு எனக்குத் தெரியல, ஆனா கிடைத்தால் நன்றாக இருக்கும். அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ... (இன்றையக் கருத்து நேரம் :D).

நடைமுறைக்கு ஒத்துவருகிற மாதிரி யோசித்தால், நிஜத்திற்கும், கனவுகளுக்கோ தேவதைகளுக்கோ ரொம்ப தூரம். ஆனால் எல்லா செயல்களுக்கும் இந்த பிரபஞ்சத்தில் விளைவுகள் நிச்சயம் உண்டு, நம் எண்ணங்கள் உட்பட. எனவே கனவுகளில் தேவதைகளைத் தேடி வரம் கேட்பதை விட்டுவிட்டு, நம் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்பினால் நிச்சயம் நல்ல விளைவுகள் மட்டுமே நிகழும். கேட்கும் வரங்கள் அனைத்தும் நல்லவையாக இருக்கட்டும், அவைகளை எண்ணங்களாக மனதில் விதைக்கப்படட்டும், தேவதைகள் நல்ல விளைவுகளாக வாழ்க்கையில் வருவார்கள் என்று கூறி வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.. வ்ணக்கம்.

சோடா குடுங்கப்பா....




6 comments:

ராஜ நடராஜன் said...

சோடா:)

கனவு நல்லாவே வருது!முக்கியமா அன்பையும் மனிதநேயமும் தளைக்கச் செய்.

சுடுதண்ணி said...

சோடாவுக்கு நன்றி தலைவா :)

மிக்க நன்றி :D

angel said...

enga 7up venama?

சுடுதண்ணி said...

7up அன்புக்கு மிக்க நன்றி சகோதரி :)

DR said...

இந்த மாதிரி இருந்த இந்த நாள் இல்ல, இனிமே வர்ற எல்லா நாளும் இனிய நாள் தான். நாளைக்கு மறுபடியும் சந்திப்போம் அன்பர்களே...

சுடுதண்ணி said...

:D @ தினேஷ்