தேவையான பொருட்கள்:
ஸ்டெகனோக்ராபி மென்பொருள், உங்கள் ரகசியத் தகவலை நோட்பேட் (notepad) நிரலைப் பயன்படுத்தி ஒரு TXT கோப்பில் சேமித்து வைத்துக் கொள்ளவும் (உ.தா: msg.txt). அடுத்து மேலே உள்ள நமிதா படத்தை உங்கள் கணினியில் சேமித்து, பின் பெயிண்ட் மென்பொருளில் திற்க்கவும். பின் File->Save as சென்று BMP அமைப்பில் சேமித்து கொள்ளவும் (உ.தா. namitha.bmp).
நீங்கள் மேலே உள்ள சுட்டியில் இருக்கும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்தால் zip வடிவில் கிடைக்கும் கோப்பை winzip/winrar மென்பொருள் மூலம் தொகுப்பில் சேமிக்கவும் (extract). பின் அத்தொகுப்பில் winhip_cs_nogif.exe என்ற கோப்பை சொடுக்கவும். தோன்றும் படிவத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளபடி namitha.bmp மற்றும் msg.txt ஆகிய கோப்புகளை உள்ளிட்டு, பின்னர் கடவுச்சொல்லையும் வழங்கவும். இவ்வாறு செய்ததும் உங்கள் தகவல்கள் புகைப்படத்தில் விதைக்கப் பட்டிருக்கும்.
அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட படத்தை வேறு பெயரில் சேமித்து தகவலை அனுப்ப வேண்டிய நபருக்கு மின்னஞ்சல் அலலது உங்கள் வலைப்பதிவிலே கூட பதிவேற்றம் செய்து விடுங்கள்.
இந்த தகவல் சேர வேண்டிய நபரிடத்திலும் இதே மென்பொருள் இருத்தல் அவசியம், மேலும் நீங்கள் உபயோகப்படுத்திய கடவுச்சொல்லும் அறிந்திருக்க வேண்டும். மீண்டும் இந்த மாற்றம் செய்யப்பட்ட படம் ஸ்டெகனோக்ராபி மென்பொருள் மூலம் திறக்கப்படும் போது கடவுச்சொல்லை அளித்து விட்டு, ரகசியத் தகவலை உங்கள் கணினியில் எங்கு சேமிக்க வேண்டும் என்றும் தெரிவித்து விட்டால் தகவல் உங்கள் பார்வைக்குத் தயார்.
மென்பொருள் ஆங்கிலத்தில் இல்லை, ஆகையால் படங்கள் விளக்கமாக வழங்கப் பட்டிருக்கிறது. ப்டங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்து பயன்பெறவும்.
மேலே உள்ள படத்தில் ரகசியத் தகவல் விதைக்கப் பட்டிருக்கிறது. ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?. மிகவும் உற்றுக் கவனித்தால் ஆங்காங்கே pixelகளின் வண்ண வேறுபாடுகள் புள்ளிகளாகத் தெரியும். நீங்கள் விதைக்கும் ரகசியத் தகவலின் அள்வுக்கேற்ப வண்ண வேறுபாடுகள் கூடவோ குறையவோ செய்யும். தகவலைச் சுருங்கச் சொன்னால் வண்ண வேறுபாடு எளிதாகக் கண்களுக்கு புலப்படாது.
இதே முறையில் தேவையான மென்பொருட்கள் மூலம் ஒலி-ஒளி கோப்புகளிலும் தகவல்களை அனுப்பலாம். ஒலி-ஒளி கோப்புகளில் சிறு இரைச்சலோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் வண்ண வேறுபாடுகள் ஏற்படும். இப்பதிவுகள் மூலம் ஓரளவு ஸ்ட்கனோக்ராபி (steganography) குறித்து அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
இதனைப் பயன்படுத்துபவர்கள் தேர்ந்தெடுக்கும் புகைப்படங்கள் பெரும்பாலும் குழும இணையத்தளங்களில் (forums) ப்யன்படுத்தப்படும் 'avatar' எனப்ப்டும் சிறு அடையாளப் படங்கள் என்பது உபரித்தகவல் :). எனவே அடுத்த முறை இணையத்தில் புகைப்படங்களை எடுத்து உபயோகப்படுத்தும் போது கவனமாக இருங்கள், யாருக்குத் தெரியும் அதில் ஏதெனும் வில்லங்கமான ரகசியம் அடங்கியிருக்கலாம்.
மேலே உள்ள சுட்டியில் இருக்கும் நமிதாவின் புகைப்படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளவும், அதில் ஒரு தகவல் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் அந்தத் தகவலைக் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் :). (கடவுச்சொல்: suduthanni)
நன்றி.
9 comments:
பாஸ்வேர்ட் தப்பா இருக்குனு காட்டுது நண்பா...
புகைப்படம் மாறிவிட்டது.. ஒரு நிமிடம்...
இப்பொழுது முயன்று பாருங்கள் நண்பா...
கண்டுபிடிச்சிட்டேன்
vazhga valamudan
சூப்பர் நண்பா, கலக்கிட்டீங்க :)
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...
நமீதா விளையாட்டு நல்லா இருக்கும் போல தெரிகிறதே:)ஆனா நீங்கதான் டோரண்ட் பக்கமே சுத்துன்னு தள்ளி விட்டுட்டீங்களே!
(அப்படியும் ஒரு படம் பார்த்துட்டோமில்ல!படம் The classic...... PHSYCO.)
யாம் பெற்ற இன்பம் பெறுக ராஜ நடராஜன் :D
ஆகா இத்தனை நாள் இத்தனை தகவல்களை அறிந்துகொள்ளாமல் விட்டேனே .....
இனிமேல் தினமும் என் வருகை இருக்கும் நண்பரே
மிக்க நன்றி நிர்மல், தொடர்ந்து வாங்க.
Post a Comment