Tuesday, November 24, 2009

மெமரி டிஸ்க் அபாயங்கள் - 2 (முற்றும்)

அழிக்கப்பட்டக் கோப்புக்களை மீட்டெடுக்க மெமரி டிஸ்க்கின் கோப்பு அட்டவணையை மாற்றியெழுதினால் போதும் என்று அறிந்து கொண்டோம். அதைச் செய்வதற்கு ஏராளமான இலவச மென்பொருட்கள் இணையத்தில் இரைந்து கிடக்கின்றன. கூகுளில் வலை வீசி உங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவற்றுள் Recuva வும் ஒன்று. கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி பின் நிரலை இயக்கி, என்ன வகையான கோப்புகளை மீட்டெடுக்க வேண்டும், எந்த இடத்தில் தேட வேண்டும் போன்ற தகவல்களை உள்ளிட்டு விட்டு இசையருவியில் ஒரு பாடல் கேட்டுவிட்டு வந்தால் உங்கள் கோப்புகளை மீட்டெடுக்கப்பட்டு உங்களுக்காகக் காத்திருக்கும்.


தரவிறக்கச் சுட்டி:


Recuva போன்ற ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் வகை வகையாக கொட்டிக் கிடைப்பதால் யார் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம். இது ஒரு வகையில் வசதியாக இருந்தாலும் அதுவே தான் கோப்புகள் கைமாறும் அபாயத்தை அதிகப்படுத்துகிறது. குறைந்த பட்சம் ஒரு 15 நிமிடத்தில் உங்கள் மெமரி டிஸ்க்கில் இருப்பதை லவட்டி விடலாம். எனவே வேறொருவரிடம் உங்கள் மெமரி டிஸ்க்கினைக் கையளித்தால் உச்சா கூடப் போகாமல் கூடவே இருந்து வேலை முடிந்து திரும்பப் பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கப் படுகிறது.


இதலிருந்து தப்பிக்க மாற்றுவழியே இல்லையா?. உண்டு, உங்கள் கோப்புகளை வெறும் கோப்பு அட்டவணையில் அழிக்கப்பட்டதாக பதியாமல் உண்மையிலேயே உங்கள் மெமரி டிஸ்க்கிலிருந்து அழிப்பது தான் ஒரே வழி. அதை எப்படி செய்வது? அதற்கும் பல இலவச மென்பொருட்கள் உள்ளன உ.தா. Disk Redactor. இந்த மென்பொருட்கள் முழுமையாக உங்கள் கோப்புக்களை நீக்கி விடும். இயற்கையாகவே கோப்புகள் முழுமையாக நீங்கவும் வாய்ப்பு உண்டு. உங்கள் மெமரி டிஸ்க் கோப்புகளால் முழுமையாக நிறைக்கப்படும்போது அல்லது Disk Defragment செய்யும் போதும் சில/பல கோப்புக்கள் முழுமையாக நீங்க வாய்ப்புள்ளது.


தரவிறக்கச்சுட்டி: http://www.cezeo.com/downloads/disk-redactor.exe

உங்கள் கோப்புக்களை பத்திரமாக வைத்துக் கொள்ள மெமரி டிஸ்க்கினை யாரிடமும் பகிர்ந்து கொள்வதோ, கோப்புக்களை முழுமையாக அழிக்காமல் மெமரி டிஸ்க்குகளை மற்றவருக்கு விற்பதோ, செல்பேசிகளை மெமரியுடன் பழுது பார்க்க கொடுப்பதையோ தவிர்த்தல் நலம் . அவ்வாறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் Disk Redactor போன்ற மென்பொருள் துணை கொண்டு முழுமையாகக் கோப்புகளை நீக்கிய பின்பே கொடுக்கவும். வந்த பின் நொந்து கொள்வதை விட மிகவும் அந்தரங்கமான கோப்புகளைக் கவனமாகக் கையாள்வதே புத்திசாலித்தனம் என்ற கருத்தினைக் கூறி இத்தொடர் முற்றுப் பெறுகிறது.


15 comments:

கடைக்குட்டி said...

அப்புறம் படிச்சுட்டு சொல்றேன்.. இப்போதூக்கம் வருது..

கடைக்குட்டி said...

ஹைய்யோ.. மீ த 1 ???

சரி இரி படிச்சிட்றேன்..

கடைக்குட்டி said...

உங்கள் கோப்புக்களை பத்திரமாக வைத்துக் கொள்ள மெமரி டிஸ்க்கினை யாரிடமும் பகிர்ந்து கொள்வதோ, கோப்புக்களை முழுமையாக அழிக்காமல் மெமரி டிஸ்க்குகளை மற்றவருக்கு விற்பதோ, செல்பேசிகளை மெமரியுடன் பழுது பார்க்க கொடுப்பதையோ தவிர்த்தல் நலம் . அவ்வாறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் Disk Redactor போன்ற மென்பொருள் துணை கொண்டு முழுமையாகக் கோப்புகளை நீக்கிய பின்பே கொடுக்கவும். வந்த பின் நொந்து கொள்வதை விட மிகவும் அந்தரங்கமான கோப்புகளைக் கவனமாகக் கையாள்வதே புத்திசாலித்தனம் என்ற கருத்தினைக் கூறி இத்தொடர் முற்றுப் பெறுகிறது.
//



பரவாயில்லையே.. நல்லாத்தான் முடிச்சிருக்க.. :-)

அந்த மென்பொருள்களை உபயோகித்துவிட்டுசொல்கிறேன்..

வர்ட்டா...

Sampath said...

Useful information buddy ... thanks

அறிவிலி said...

மிகவும் அருமை.முதல் சுட்டி வேலை செய்யலை.
உங்கள் மெயில் ஐடி ஆட்சேபமில்லா விட்டால் கொடுக்கவும். ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்.

அறிவிலி said...

என் ஐடி lalgudirajesh@gmail.com

அறிவிலி said...

My email id is lalgudirajesh@gmail.com

அகல்விளக்கு said...

நமிதா இல்லன்னாலும் பதிவு ரொம்ப நல்லாருக்கு...

ரொம்ப யூஸ்புல்லான மேட்டரு...

சொல்றதோட இல்லாம அதுக்கு சுட்டியும் தர்றதுதான் தல உன்னோட தனித்தன்மை...

நன்றி தல...

:-)

அகல்விளக்கு said...

என்னப்பா இது. நான் வர்ற வரைக்குமே ஒரு ஓட்டு கூட போடம இருக்கீங்க....

1/1

ஃபாலோவ் பண்ணுங்கப்பா

சுடுதண்ணி said...

மிக்க நன்றி கடைக்குட்டி :D...

நன்றி அறிவிலி. முதல் சுட்டி மாற்றியிருக்கிறேன். தவறை சுட்டிக்காட்டியதற்கு மீண்டும் நன்றிகள் :). உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்..

நன்றி அகல்விளக்கு நண்பா.. 'அழித்து விட்ட நமிதா படங்களை மீட்டெடுப்பது எப்படி'ன்னு தான் முதல்ல தலைப்பு வைக்கிறதா இருந்தது.. கடைசி நேரத்தில மாறிப் போச்சு .:p

தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும், ஓட்டுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

"தாரிஸன் " said...

ROMBA NALLA PANREENGA SIR!!!

சுடுதண்ணி said...

மிக்க நன்றி அரூண் :). தொடர்ந்து வாங்க.

நிர்மல் said...

பயனுள்ள தகவலுக்கும், உங்களுக்கு மிக்க நன்றி ..

சுடுதண்ணி said...

வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நிர்மல் :).

guru said...

நன்றி...